மின் வழங்கல்
Appearance
மின் வழங்கல் அல்லது மின் விநியோகம் (Electric power distribution) என்பது மின்னாற்றலை நுகர்வோருக்கு எடுத்து வழங்கும் செயற்பாடு ஆகும். மின் வலைப்பின்னலில் இதுவே கடைசிப் பகுதி. மின் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து துணைமின் நிலையங்களுக்குச் செலுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து வீடுகள் தொழிற்சாலைகள் போன்ற நுகர்வோர் முனையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.