மின்னியற்றி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்னியற்றி ( Electrical Generator) அல்லது மின்னாக்கி என்பது இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி. இது மின்காந்தத்தூண்டலால் இயலுகிறது. மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் கருவி மின்சார இயக்கி அல்லது மின்னோடி ஆகும்.
ஒரு காந்தப் புலத்தில் மின்கடத்திக் கம்பிச் சுருள் ஒன்று சுழலுமேயானால் அந்தக் கம்பிச் சுருள் கடத்தி முனைகளில் மின்னழுத்தம் உண்டாகி, மின்னோட்டம் ஏற்படும். இதுவே மின்னியற்றியின் அடிப்படை நெறிமுறை (principle) ஆகும்.இது மின்காந்தத் தூண்டல் எனப்படுகிறது. இதனை கண்டறிந்தவர் ஃபாரடே.