அணு மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அணுமின் நிலையம் ஒன்றின் தோற்றம். அணுக்கரு உலை வலதுபுறம் உள்ள உருளைவடிவ கதிர்வீச்சு காப்புக் கட்டிடங்களில் அமைந்துள்ளது. இடதுபுறத்தில் கதிர்வீச்சற்ற நிலையப்பகுதியிலிருந்து நீராவியை குளிர்விப்பு கோபுரம் வெளயேற்றுகிறது.

அணு மின் நிலையம் (nuclear power plant, NPP) என்பது யுரேனியம், தோரியம் போன்ற அணுக்கருக்களை எரிபொருளாக பயன்படுத்தும் மின்நிலையமாகும்.ஒரு கனமான அணுக்கரு இரு இலேசான அணுக்கருக்களாக பிளக்கப்படும்போது அதிகப்படியான வெப்ப ஆற்ற்ல் வெளிப்படுகிறது. அணுக்கரு உலைகளிலிருந்து பெறப்படும் இவ்வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி ஓர் வழமையான அனல் மின் நிலையம் போன்றே வெப்பம் மூலம் நீராவி உருவாக்கப்பட்டு நீராவிச்சுழலியுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னாக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாறாத மின் உற்பத்தி வழங்கக்கூடிய இந்த அணு மின் நிலையங்கள் வாடிக்கையாளர்களின் குறைந்த மின்தேவையை (base load) வழங்கக்கூடிய மின் நிலையங்களாகக் கருதப்படுகின்றன.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_மின்_நிலையம்&oldid=1909389" இருந்து மீள்விக்கப்பட்டது