உள்ளடக்கத்துக்குச் செல்

நீராவிச்சுழலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமென்சு நிறுவனத்தின் நீராவிச்சுழலி

நீராவிச்சுழலி (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும் வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் சர் சார்லசு பார்சன்சு அவர்களால் 1884 இல் புனையப்பட்டது.[1][2]

நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு நீராவிப் பொறிகளைப் போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், மின்னாக்கிகளை இயக்கப் பொருத்தமானவை ஆகின.

இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகளே பயன்படுகின்றன.[3]ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் வெப்ப இயக்கவியல் திறன் கூடுகிறது.

வரலாறு

[தொகு]
250kW தொழிலக நீராவிச் சுழலி, 1910 (வலது) ஒன்று மின்னாக்கியுடன் (இடது) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

நீராவிச் சுழலியின் முதல் வடிவமைப்பு பொம்மையை விடச் சற்றே மெல்லனதாக அமைந்தது. இது எதிர்வினை நீராவிச் சுழலி எனப்பட்டது. இது அலெக்சாந்திரியாவின் கணிதவியலாளர் ஈரோ விவரித்த நீராவிக் கருவியை ஒத்திருந்த்து எனலாம்.[4][5][6] ஆட்டோமன் எகிப்து பேரரசில் வாழ்ந்த தகி அல்-தின் விவரித்த நீராவிச் சுழலி நடைமுறையில் சுழலும் சமையல் உதவியாகப் பயன்படுவதாக அமைந்தது. இத்தாலியைச் சேர்ந்த ஜியோவன்னி பிராங்கோவும் நீராவிச் சுழலியை விவரித்துள்ளார் (1629).[7][8] தாகி அல்-தின்னும் வில்கின்சுவும் விவரித்த கருவிகள் இப்போது நீராவித் தூக்கி எனப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. A Stodola (1927) Steam and Gas Turbines. McGraw-Hill.
  2. Encyclopædia Britannica (1931-02-11). "Sir Charles Algernon Parsons (British engineer) - Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-12.
  3. Wiser, Wendell H. (2000). Energy resources: occurrence, production, conversion, use. Birkhäuser. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-98744-6.
  4. turbine. Encyclopædia Britannica Online
  5. A new look at Heron's 'steam engine'" (1992-06-25). Archive for History of Exact Sciences 44 (2): 107-124.
  6. O'Connor, J. J.; E. F. Robertson (1999). Heron of Alexandria. MacTutor
  7. "Power plant engineering". P. K. Nag (2002). Tata McGraw-Hill. p.432. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-043599-5
  8. Taqi al-Din and the First Steam Turbine, 1551 A.D., web page, accessed on line October 23, 2009; this web page refers to Ahmad Y Hassan (1976), Taqi al-Din and Arabic Mechanical Engineering, pp. 34-5, Institute for the History of Arabic Science, University of Aleppo.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவிச்சுழலி&oldid=3218689" இலிருந்து மீள்விக்கப்பட்டது