நீராவி
நீரைச் சூடாக்கும் போது அது நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். அறை வெப்பநிலை மற்றும் சூழல் வெப்பநிலையில் வளிமண்டலம் நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கொதிநீராவி பெறப்படும்.[1][2][3]
தெவிட்டிய நீராவி
[தொகு]தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது.
மிகைவெப்ப நீராவி
[தொகு]நிலவும் அழுத்தத்தில், கொதிநிலைக்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taylor, Robert A.; Phelan, Patrick E.; Adrian, Ronald J.; Gunawan, Andrey; Otanicar, Todd P. (2012). "Characterization of light-induced, volumetric steam generation in nanofluids". International Journal of Thermal Sciences 56: 1–11. doi:10.1016/j.ijthermalsci.2012.01.012.
- ↑ Taylor, Robert A.; Phelan, Patrick E.; Otanicar, Todd P.; Walker, Chad A.; Nguyen, Monica; Trimble, Steven; Prasher, Ravi (2011). "Applicability of nanofluids in high flux solar collectors". Journal of Renewable and Sustainable Energy 3 (2): 023104. doi:10.1063/1.3571565. https://digitalcommons.lmu.edu/cgi/viewcontent.cgi?article=1019&context=mech_fac. பார்த்த நாள்: 2022-06-14.
- ↑ Taylor, Robert A.; Phelan, Patrick E.; Otanicar, Todd; Adrian, Ronald J.; Prasher, Ravi S. (2009). "Vapor generation in a nanoparticle liquid suspension using a focused, continuous laser". Applied Physics Letters 95 (16): 161907. doi:10.1063/1.3250174. Bibcode: 2009ApPhL..95p1907T. https://works.bepress.com/todd_otanicar/1/download/.[தொடர்பிழந்த இணைப்பு]