உள்ளடக்கத்துக்குச் செல்

த நியூயார்க் டைம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த நியூயார்க் டைம்ஸ்
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)த நியூயார்க் டைம்ஸ் நிறுவனம்
வெளியீட்டாளர்ஆர்தர் ஓக்ஸ் சூல்சுபேர்கர், இளையவர்
ஆசிரியர்பில் கெல்லர்
எழுத்துப் பணியாளர்கள்350
நிறுவியது1851
தலைமையகம்நியூயார்க் டைம்ஸ் கட்டடம்
நியூயோர்க்
விற்பனை1,039,031 நாள் ஒன்றுக்கு
1,451,233 ஞாயிறு[1]
ISSN0362-4331
இணையத்தளம்http://www.nytimes.com

த நியூயார்க் டைம்ஸ் (The New York Times) என்பது ஒரு அமெரிக்க ஆங்கில நாளிதழ் ஆகும். இது 1851 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு என்பவரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர்தர் ஓக்ஸ் சூல்ஸ்பேர்கர், இளையவரின் குடும்பம் 1896 ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகிறது.

உலகிலேயே இந்த நாளிதழ்தான் அதிகமான புலிட்சர் பரிசுகளை வென்றுள்ள நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழுக்கும், நாளிதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் என மொத்தம் 110 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கத்துவங்கிய தினசரி தி நியூயார்க் டைம்ஸ். இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணைச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன், தி ஸ்டார் நியூஸ், டைம்ஸ் நியூஸ் போன்ற செய்தி தாள்களும் இவைதவிர அபௌட்.காம், என்ஒய்டைம்ஸ்.காம் போன்ற இணைய தளங்களும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jesdanun, Annick (2008-10-27). "Newspapers see sharp circulation drop of 4.6 pct". Associated Press. Archived from the original on 2009-07-05. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_நியூயார்க்_டைம்ஸ்&oldid=3618010" இலிருந்து மீள்விக்கப்பட்டது