இந்தியாவில் அணுசக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்
Red pog.svg செயல்பாட்டில் உள்ள அணு உலைகள்
Green pog.svg கட்டுமானத்தில் உள்ள அணு உலைகள்


அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது.[1] 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது.[2] மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300  மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]

அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும்,[4] "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப்படுள்ளது.[5] மகாராட்டிரத்தில் பிரெஞ்சு நிறுவனம் அமைக்கும் 9900 மெவா கொள்ளளவு கொண்ட ஜெய்தாபூரிலும் தமிழ்நாட்டில் உருசிய கூட்டுறவுடன் நிறுவப்படும் 2000 மெவா கொள்ளளவு கொண்ட கூடன்குளத்திலும் பலத்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்கு வங்காள அரசும் அரிப்பூரில் நிறுவப்படத் திட்டமிட்டிருந்த 6000 மெவா திறன் கொண்ட ஆறு உருசிய அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.[5] அரசின் அணுக்கரு ஆற்றல் திட்டதிற்கெதிராக பொது நல வழக்கொன்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.[5][6] இத்தகையத் தடங்கல்கள் இருப்பினும் 2011-12ஆம் ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் தங்கள் திறனின் 79% அளவில் உற்பத்தி செய்தன; இந்த ஆண்டில் இருபது உலைகளில் ஒன்பது உலைகள் வரலாற்றுச் சிறப்பாக தங்கள் திறனின் 97% ஐ எட்டின.

இந்தியா வெளிநாட்டை நம்பியிருக்க வேண்டிய யுரேனியத்திற்கு மாற்றாக தோரியம் சார்ந்த அணு எரிபொருள்கள் குறித்தும் குறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்தும் அணுக்கரு உலை வடிவமைப்பில் ஆய்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.[7] குளிர்ந்த அணுப்பிணைவு ஆய்வுகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.[8] உலகின் மிகவும் பெரிய, மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையான பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளது.

அணுக்கரு எரிபொருள் இருப்பு[தொகு]

இந்தியாவின் உள்நாட்டு யுரேனியம் இருப்புகள் மிகக் குறைவானவை; வெளிநாட்டிலிருந்தே தனது அணு மின் நிலையங்களின் தேவைக்காக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 1990களிலிருந்து இந்தியாவின் முக்கிய அணு எரிபொருள் வழங்குனராக உருசியா இருந்து வருகிறது.[9] யுரேனியத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைந்த காரணத்தினால் [10] அணு மின் உற்பத்தி 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டில் 12.83% குறைந்தது.[11] இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டினை அடுத்து செப்டம்பர் 2008இல் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் பன்னாட்டு அணுவாற்றல் வணிகத்தை அனுமதித்த பின்னர்[12] இந்தியா இருநாடுகளுக்கிடையேயான அணுவாற்றல் குடிசார் தொழில்நுட்பக் கூட்டுறவு உடன்பாடுகளை பல நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது. பிரான்சு,[13] ஐக்கிய அமெரிக்கா,[14] ஐக்கிய இராச்சியம்,[15] கனடா.[16] மற்றும் தென் கொரியா [17] என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கன. மேலும் யுரேனியம் தாது பெறுதலுக்காக உருசியா,[18][19] மங்கோலியா,[20] கசக்ஸ்தான்,[21] அர்கெந்தீனா[22] மற்றும் நமீபியாயுடன் உடன்பாடுகள் கொண்டுள்ளது.[23] இந்திய தனியார் நிறுவனமொன்றிற்கு யுரேனியம் படிவுகள் தேடலுக்கு நைஜரில் ஒப்பந்தப் புள்ளி வென்றுள்ளது.[24]

மார்ச்சு 2011இல் ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தின் உள்ள தும்மலப்பள்ளி பகுதியில் இயற்கை யுரேனியப் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் யுரேனியம் தேடலுக்கான அமைப்பான அணுத் தாது தேடல் மற்றும் ஆய்வு இயக்ககம் இதுவரை 44,000 டன்கள் இயற்கை யுரேனியம் (U3O8) இருப்பை இப்பகுதியில் கண்டறிந்துள்ளது.[25]

அணு மின் நிலையங்கள்[தொகு]

தற்போது இருபது அணு மின் உலைகள் 4,780.00 மெவா மின்சாரம் உற்பத்தி செய்கின்றன (மொத்த நிறுவப்பட்ட திறனளவில் 2.9%).[26][27]

மின் நிலையம் இயக்குனர் மாநிலம் வகை அலகுகள் மொத்த திறனளவு (மெவா)
கைகா இந்திய அணுமின் கழகம் கர்நாடகம் கனநீர் 220 x 4 880
கக்ரபார் இந்திய அணுமின் கழகம் குசராத் கனநீர் 220 x 2 440
கல்பாக்கம் இந்திய அணுமின் கழகம் தமிழ்நாடு கனநீர் 220 x 2 440
நரோரா இந்திய அணுமின் கழகம் உத்தரப் பிரதேசம் கனநீர் 220 x 2 440
ரவத்பாட்டா இந்திய அணுமின் கழகம் இராசத்தான் கனநீர் 100 x 1
200 x 1
220 x 4
1180
தாராப்பூர் இந்திய அணுமின் கழகம் மகாராட்டிரம் கொதிநீர் (கனநீர்) 160 x 2
540 x 2
1400
மொத்தம் 20 4780

கீழ்காண்பவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன:[28]

அணுமின் நிலையம் இயக்குனர் மாநிலம் வகை அலகுகள் மொத்த திறனளவு (மெவா)
கூடங்குளம் இந்திய அணுமின் கழகம் தமிழ்நாடு விவிஈஆர் 1000 x 2 2000
கல்பாக்கம் பாவினி நிறுவனம் தமிழ்நாடு வேக ஈனுலை 500 x 1 500
கக்ரபார் இந்திய அணுமின் கழகம் குசராத் கனநீர் 700 x 2 1400
ரவத்பாட்டா இந்திய அணுமின் கழகம் இராசத்தான் கனநீர் 700 x 2 1400
மொத்தம் 7 5300

மேற்கோள்கள்[தொகு]

 1. "~6429693.xls" (PDF). பார்த்த நாள் 22 August 2010.
 2. "India's 20th nuclear power plant goes critical". Hindustan Times (27 November 2010). பார்த்த நாள் 13 March 2011.
 3. Verma, Nidhi (18 August 2008). "Westinghouse, Areva eye India nuclear plants-paper". Reuters. http://www.reuters.com/article/marketsNews/idUSDEL16711520080818. பார்த்த நாள்: 22 August 2010. 
 4. "India eyeing 64,000 MW nuclear power capacity by 2032: NPCIL". The Economic Times. 11 October 2010. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/energy/power/India-eyeing-63000-MW-nuclear-power-capacity-by-2032-NPCIL/articleshow/6730724.cms. 
 5. 5.0 5.1 5.2 Siddharth Srivastava (27 October 2011). "India's Rising Nuclear Safety Concerns". Asia Sentinel.
 6. Ranjit Devraj (25 October 2011). "Prospects Dim for India's Nuclear Power Expansion as Grassroots Uprising Spreads". Inside Climate News.
 7. Pham, Lisa (20 October 2009). "Considering an Alternative Fuel for Nuclear Energy". The New York Times. http://www.nytimes.com/2009/10/20/business/global/20renthorium.html?_r=1. 
 8. "Cold fusion turns hot, city to host meet". The Times Of India. 25 January 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-01-25/chennai/28374733_1_cold-fusion-nuclear-fusion-indian-scientists. 
 9. "Russia fulfills promise, supplies uranium to India". Expressindia.com. பார்த்த நாள் 22 August 2010.
 10. "Uranium shortage holding back India’s nuclear power drive - Corporate News". livemint.com (30 June 2008). பார்த்த நாள் 22 August 2010.
 11. "Ministry of Power". Powermin.gov.in. பார்த்த நாள் 22 August 2010.
 12. "news.outlookindia.com". Outlookindia.com. பார்த்த நாள் 22 August 2010.
 13. "India, France agree on civil nuclear cooperation". Rediff.com. பார்த்த நாள் 22 August 2010.
 14. "Bush signs India-US nuclear deal into law - Home". livemint.com (9 October 2008). பார்த்த நாள் 22 August 2010.
 15. "UK, India sign civil nuclear accord". Reuters. 13 February 2010. http://www.reuters.com/article/idUSTRE61C21E20100213?type=politicsNews. பார்த்த நாள்: 22 August 2010. 
 16. "Canada, India reach nuclear deal". Montreal Gazette (29 November 2009). பார்த்த நாள் 22 August 2010.
 17. "India, South Korea ink civil nuclear deal". The Times Of India. 25 July 2011. http://timesofindia.indiatimes.com/india/India-South-Korea-ink-civil-nuclear-deal/articleshow/9360801.cms. 
 18. "India to get 510 tonnes of uranium from Kazakhstan, Russia". Hindu Business Line.
 19. "South Asia | Russia agrees India nuclear deal". BBC News. 11 February 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7883223.stm. பார்த்த நாள்: 22 August 2010. 
 20. "India, Kazakhstan sign nuclear pact". Financial Express.
 21. Sanjay Dutta, TNN, 23 January 2009, 01.35am IST (23 January 2009). "Kazakh nuclear, oil deals hang in balance". The Times of India. http://timesofindia.indiatimes.com/Business/Kazakh_oil_deals_hang_in_balance/articleshow/4019306.cms. பார்த்த நாள்: 22 August 2010. 
 22. India, Argentina ink agreement on peaceful uses of N-energy, த இந்து
 23. "India, Namibia sign uranium supply deal".
 24. "Indian firm acquires uranium mining rights in Niger | Uranium, Niger, Company, Bajla, Government". taurianresources.co.in. பார்த்த நாள் 22 December 2010.
 25. Subramanian, T. S. (20 March 2011). "Massive uranium deposits found in Andhra Pradesh". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/states/andhra-pradesh/article1554078.ece. 
 26. "Nuclear Power Plants In India". Nuclear Power Corporation of India Limited (NPCIL). பார்த்த நாள் 21 January 2011.
 27. "India's 20th nuclear reactor connected to power grid". The Times of India. 19 January 2011. http://timesofindia.indiatimes.com/india/Indias-20th-nuclear-reactor-connected-to-power-grid/articleshow/7319085.cms. பார்த்த நாள்: 22 January 2011. 
 28. "Projects Under Construction". NPCIL. பார்த்த நாள் 20 July 2012.