புவிவெப்ப மின்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்
காற்றாலை
காற்றாலை
உயிரி எரிபொருள்
உயிர்த்திரள்
புவிவெப்பம்
நீர்மின்சாரம்
சூரிய ஆற்றல்
நீர்ப்பெருக்கு
ஆற்றல்

அலை ஆற்றல்
காற்றுத் திறன்

புவிவெப்ப மின்சாரம் (Geothermal electricity) புவிவெப்பச் சக்தியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகும். இதற்குரிய தொழில்நுட்பங்களில் உலர்ந்த நீராவி மின் நிலையங்கள், பளீரடி நீராவி மின் நிலையங்கள், இருமை சுற்று மின் நிலையங்கள் போன்றவையும் அடங்கும். புவிவெப்ப மின்சாரம் தற்போது 24 நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது[1]. புவிவெப்ப சூடாக்குதல் 70 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]

புவிவெப்ப மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புத் திறன் 35 முதல் 2,000 கிகா வாட்டாக மதிப்பிடப்படுகிறது.[2] உலகளவில் தற்போது நிறுவப்பட்டுள்ள திறன் 10,715 மெகாவாட் ஆகும். மிகக்கூடிய திறனுள்ள புவிவெப்ப மின் நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது (3,086 MW).[3] பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலும் கூடிய திறன் மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

புவியின் வெப்பத்திறனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தளவே வெப்பம் பயன்படுத்தப்படுவதால் புவிவெப்ப ஆற்றல் பேணத் தக்கதாக கருதப்படுகிறது.[4] மேலும் தற்போதைய புவிவெப்ப மின் நிலையங்களால் வெளியிடப்படும் CO
2
ஒரு மெகாவாட்-மணி மின்சாரத்திற்கு 122 கிலோகிராமாக உள்ளது; இது நிலக்கரியில் இயங்கும் மின்நிலையங்களுடன் ஒப்பிடுகையில் எட்டில் ஒரு பங்காகும்.[5]

வரலாறும் வளர்ச்சியும்[தொகு]

உலகளாவிய புவிவெப்ப மின்சாரத் திறன். மேல் சிவப்புக்கோடு நிறுவப்பட்ட திறன்;[6] கீழுள்ள பச்சைக்கோடு கிடைக்கும் உற்பத்தி.[2]

மின்சாரத்தின் தேவை கூடுதலாக அதனை உற்பத்தி செய்யும் மாற்றுவழிகளும் ஆராயப்பட்டன. இத்தாலியின் லார்டெல்லோவில் சூலை 4, 1904 அன்று இளவரசர் பியரோ கினோரி கொன்டி முதல் புவிவெப்ப மின்னாக்கியை சோதித்தார். அதன்மூலம் நான்கு மின்விளக்குகள் எரிந்தன.[7] 1911இல் உலகின் முதல் வணிகத்ததிற்கான புவிவெப்ப மின் நிலையம் அங்கு கட்டப்பட்டது. 1920களில் சோதனையோட்ட மின்னாக்கிகள் சப்பானின் பேப்புவிலும் கலிபோர்னியாவின் கெய்சர்சிலும் கட்டப்பட்டன; இருப்பினும் 1958 வரை உலகத்தில் வணிகமுறையில் புவிவெப்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கியது இத்தாலி மட்டுமே.

1958ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் வைரக்கே மின் நிலையம் அமைக்கப்பட்டபோது நியூசிலாந்து இரண்டாவது நாடாக வணிகமுறையில் புவிவெப்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கிய பெருமை பெற்றது. வைரக்கே மின்நிலையம் பளீரடி நீராவி தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திய முதலாவது நிலையமாகும்.[8]

ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் கெய்சர்சில் 1960ஆம் ஆண்டு பசிபிக் காஸ் & எலெக்ட்ரிக் முதல் வணிகமுறை புவிவெப்ப மின் நிலையத்தை இயக்கியது.[9] அப்போது நிறுவப்பட்ட சுழலிகள் 30 ஆண்டுகள் இயங்கியதுடன் 11 மெகாவாட்(MW) மின்னாற்றலை உற்பத்தி செய்தது.[10]

உருசியாவில் 1967ஆம் ஆண்டு முதன்முதலில் இருமை சுழற்சி மின் நிலையம் செயலாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஐக்கிய அமெரிக்காவில் 1981ஆம் அறிமுகப்படுத்தப்பட்டது.[9] இந்தத் தொழில்நுட்பத்தில் முந்தைய வெப்பநிலைகளை விட குறைந்தநிலை வெப்ப வளங்களைக் கொண்டு இயக்க முடிந்தது. 2006ஆம் ஆண்டில் அலாஸ்காவின் செனா வெந்நீரூற்றுகளில் அமைந்த மின் நிலையத்தில் இந்தவகைத் தொழில்நுட்பம் மூலம் மிகக் குறைந்த நீர்ம வெப்பநிலையாக 57 °C (135 °F)இல்[11] இயக்கப்பட்டு சாதனை படைத்தது.

தற்காலத்தில் புவிவெப்ப மின் நிலையங்கள் புவிப்பரப்பிற்கு அண்மையில் உயர்வெப்ப வளங்கள் கிடைக்குமிடங்களில் மட்டுமே நிறுவப்படுகின்றன. இருமை சுழற்சி மின் நிலையத் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் மற்றும் துளையிடுதல்,வெப்பமகற்றல் தொழில்நுட்ப மேம்பாடுகள் வருங்காலங்களில் மேம்படுத்தப்பட்ட புவிவெப்ப அமைப்புகளை பரந்த நிலப்பரப்புகளில் அமைக்க வாய்ப்பு நல்கும்.[12] இத்தகையச் சோதனை நிலையங்கள் செருமனியின் லண்டௌ-ப்ஃபால்சு, பிரான்சின் சூல்ட்சு-சூ-பாரெட்சு ஆகிய இடங்களில் இயக்கப்படுகின்றன. முன்னதாக சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் முயற்சிக்கப்பட்ட சோதனை நிலநடுக்கங்களைத் தூண்டியதால் கைவிடப்பட்டது. மேலும் செயல்முறைக்காட்சி திட்டங்கள் ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.[13]

புவிவெப்ப மின் நிலையங்களின் வெப்ப வினைத்திறன் மிகவும் குறைவு, ஏறத்தாழ 10-23% ஆகும்.[14] இது புவிவெப்ப நீர்மங்கள் கொதிகலன்களில் உள்ள நீராவியைவிட குறைந்த வெப்பநிலையில் உள்ளதால் ஏற்படுகிறது. வெப்ப இயக்கவியல் விதிகளின்படி இந்த குறைந்த வெப்பநிலைகள் மின்சார உற்பத்தியின்போது பயனுள்ள ஆற்றலை உட்கொள்ளும் வெப்ப எந்திரத்தின் வினைத்திறனை குறைக்கின்றன. வெளியேறும் வெப்பத்தை நேரடியாகவும் அண்மையிலும் மர ஆலைகள், பசுமை இல்லங்கள், குடியிருப்பு சூடாக்கல் போன்றவற்றில் பயன்படுத்தாவிடில் வீணாகிறது. இந்த வினைத்திறன் நிலையத்தின் இயக்கச் செலவுகளில் தாக்கமேற்படுத்தாவிடினும் நிலையத்தின் ஒப்பேறு வாய்ப்புநிலையை பாதிக்கின்றன. புவிவெப்ப மின் நிலையங்களின் வெப்ப வளங்கள் காற்று, சூரியவெப்பம் போன்று மாறுபடுகின்ற தன்மையை கொண்டில்லாதிருப்பதால் இதன் வழங்கு திறன் மிக கூடுதலாக, 96% வரை, செயல்முறையில் காட்டப்பட்டுள்ளது.[15] 2005இல் உலகளவில் இந்த சராசரி 73% ஆக இருந்தது.

மின்நிலையங்களின் வகைகள்[தொகு]

உலர் நீராவி நிலையம்
பளீரடி நீராவி நிலையம்

புவிவெப்ப மின்நிலையங்கள் அனல் மின் நிலையங்களைப் போன்றே இயங்குகின்றன - எரிபொருளினால் (புவிவெப்ப நிலையங்களில் புவியின் மையம்) ஏற்படும் வெப்பத்தைக் கொண்டு நீரை அல்லது பிற நீர்மத்தை சூடாக்கி மின்னாக்கியின் சுழலியை சுற்ற வைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகும். பயன்படுத்தப் பட்ட நீர்மம் மீண்டும் குளிர்விக்கப்பட்டு எரிபொருளினால் சூடாக்கப்படும்.

உலர் நீராவி மின் நிலையம்[தொகு]

உலர் நீராவி மின் நிலையங்கள் உள்ளவைகளிலேயே எளிமையானதும் பழமையானதுமான வடிவமைப்பாகும். இவை புவிவெப்பத்தால் ஏற்படும் 150 °C க்கும் கூடுதலான நீராவியை நேரடியாக சுழலியைச் சுழற்றப் பயன்படுத்துவதாகும்.[2]

பளீரடி நீராவி மின் நிலையம்[தொகு]

பளீரடி நீராவி மின் நிலையங்களில் கூடிய அழுத்தத்தில் உள்ள சூடான வெந்நீர் குறைந்த அழுத்த கலன்களில் உள்ளிழுக்கப்படும்போது ஏற்படும் உடனடி நீராவி சுழலிகளை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெந்நீரின் வெப்பம் 180°Cக்கும் கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய நாட்களில் மிகவும் வழமையான வடிவமைப்பாக இது விளங்குகிறது.[16]

இருமை சுழற்சி மின் நிலையம்[தொகு]

இருமை சுழற்சி மின் நிலையங்கள் மிக அண்மையில் வடிவமைக்கப்படும் ஒன்றாகும். இவற்றில் நீரின் வெப்பம் மிகக் குறைவாக 57 °C வரை இருக்கலாம்.[11] சுமாரான சூட்டில் உள்ள புவிவெப்ப நீரில் மிகக்குறைந்த கொதிநிலை கொண்ட இரண்டாம்நிலை நீர்மம் செலுத்தப்படுகிறது. இதனால் பளீரென ஆவியாகும் இரண்டாம்நிலை நீர்மம் சுழலிகளை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. இன்று வடிவமைக்கப்படும் புவிவெப்ப மின் நிலையங்கள் பெரும்பாலும் இந்த வகையினால் ஆனவையே.[17] கரிம ரான்கைன் முறையும் கலினா சுழற்சியும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிலையங்களின் வெப்ப வினைத்திறன் பொதுவாக 10-13% ஆக உள்ளது.

உலகளாவிய உற்பத்தி[தொகு]

இத்தாலியிலுள்ள லார்டெரெல்லோ புவிவெப்ப நிலையம்

பன்னாட்டு புவிவெப்ப சங்கம் (IGA) அறிக்கையின்படி 24 நாடுகளில் 10,715 மெகாவாட் (MW) புவிவெப்ப மின்சாரம் உற்பத்தியாகிறது; இது 2010இல் 67,246 கிகாவாட்டாக உயரும் என மதிப்பிட்டுள்ளது.[1] இதுவரை வாய்ப்பில்லாத பகுதிகளாக கருதப்பட்ட நிலப்பகுதிகளில் பல திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருவதால் இத்தகைய உயர்வு எதிர்பார்க்கக்கூடியது என்று கூறியுள்ளது.[1]

2010இல் ஐக்கிய அமெரிக்கா 77 மின்நிலையங்களில் 3,086 மெகாவாட் நிறுவல்திறனுடன் உலகில் முதலிடத்தில் உள்ளது.[3] உலகில் பல மின்நிலையங்கள் ஒருங்கே அமைந்த இடமாக கலிபோர்னியாவின் கெய்சர்ஸ் புவிவெப்பக் களம் விளங்குகிறது.[18] உலக புவிவெப்ப மின் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் பிலிப்பைன்சு நாடு உள்ளது. 1,904 மெவா திறன் கொண்ட புவிவெப்ப மின் உற்பத்தி மொத்த மின் உற்பத்தியில் 18%ஆக உள்ளது.[3]

நுகர்வுத் தகுதி மின்நிலையங்கள்[தொகு]

உலகின் மிகக் கூடுதலான புவிவெப்ப மின் நிலையங்கள் ஐக்கிய அமெரிக்காவில் கெய்சர்ஸ் என அழைக்கப்படும் கலிபோர்னியாவிலுள்ள புவிவெப்ப களத்தில் இயங்குகின்றன.[19] 2004ஆம் ஆண்டு வரை, ஐந்து நாடுகள் (எல் சால்வடோர், கென்யா, பிலிப்பைன்ஸ், ஐஸ்லாந்து, கோஸ்ட்டா ரிக்கா) தங்களது மின்சாரத் தேவையில் 15%க்கும் கூடுதலாக புவிவெப்ப வளங்களிலிருந்து பெறுகின்றன.[2]

கீழுள்ள அட்டவணையில் உள்ள 24 நாடுகளில் புவிவெப்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2005ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் மேலும் 500 மெகாவாட் மின் நிலையத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்படுள்ளன. 11 பிற நாடுகளில் மின் நிலையங்கள் கட்டமைக்கப்படுகின்றன.[12] பிரான்சு|பிரான்சிலும் செருமனியிலும் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் மேம்பட்ட புவிவெப்ப அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றைப் போன்ற அமைப்புக்களை நான்கு பிற நாடுகள் உருவாக்கி அல்லது மதிப்பிட்டு வருகின்றன.

நிறுவப்பட்ட புவிவெப்ப மின்சாரத் திறன்
நாடு செயற் திறன் (MW)
2007[6]
செயற் திறன் (MW)
2010[20]
தேசிய
உற்பத்தியில்
விழுக்காடு
அமெரிக்க ஐக்கிய நாடு 2687 3086 0.3%
பிலிப்பீன்சு 1969.7 1904 27%
இந்தோனேசியா 992 1197 3.7%
மெக்சிகோ 953 958 3%
இத்தாலி 810.5 843 1.5%
நியூசிலாந்து 471.6 628 10%
ஐசுலாந்து 421.2 575 30%
ஜப்பான் 535.2 536 0.1%
எல் சால்வடோர் 204.4 204 25%[21][22]
கென்யா 128.8 167 11.2%
கோஸ்ட்டா ரிக்கா 162.5 166 14%
துருக்கி 38 94 0.3%
நிக்கராகுவா 87.4 88 10%
உருசியா 79 82
பப்புவா நியூ கினி 56 56
குவாத்தமாலா 53 52
போர்த்துகல் 23 29
சீன மக்கள் குடியரசு 27.8 24
பிரான்சு 14.7 16
எதியோப்பியா 7.3 7.3
செருமனி 8.4 6.6
ஆஸ்திரியா 1.1 1.4
ஆஸ்திரேலியா 0.2 1.1
தாய்லாந்து 0.3 0.3
மொத்தம் 9,731.9 10,709.7

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Geothermal Energy Association. Geothermal Energy: International Market Update May 2010, p. 4-6.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
 3. 3.0 3.1 3.2 Geothermal Energy Association. Geothermal Energy: International Market Update May 2010, p. 7.
 4. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 5. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
 6. 6.0 6.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 7. Tiwari, G. N.; Ghosal, M. K. Renewable Energy Resources: Basic Principles and Applications. Alpha Science Int'l Ltd., 2005 ISBN 1842651250
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.ipenz.org.nz/heritage/itemdetail.cfm?itemid=84. 
 9. 9.0 9.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 10. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 11. 11.0 11.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 12. 12.0 12.1 Lua error in Module:Citation/CS1 at line 1373: attempt to call field 'set_message' (a nil value).
 13. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 14. http://gafoen.com/site/index.php?page=geothermalenergy[தொடர்பிழந்த இணைப்பு]
 15. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 16. US DOE EERE Hydrothermal Power Systems
 17. "Geothermal Basics Overview". Office of Energy Efficiency and Renewable Energy. http://www1.eere.energy.gov/geothermal/geothermal_basics.html. பார்த்த நாள்: 2008-10-01. 
 18. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 19. Reuters. "Calpine Corporation (CPN) (NYSE Arca) Profile". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2009-10-14. பரணிடப்பட்டது 2012-11-14 at the வந்தவழி இயந்திரம்
 20. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 21. Lua error in Module:Citation/CS1 at line 4294: attempt to call field 'set_message' (a nil value).
 22. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிவெப்ப_மின்சாரம்&oldid=3625440" இருந்து மீள்விக்கப்பட்டது