பிலிப்பீன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repúbliká ng̃ Pilipinas
ரெபுப்பிலிகா ங் பிலிபினாஸ்
பிலிப்பீன்ஸ் குடியரசு
பிலிப்பீன்ஸ் கொடி பிலிப்பீன்ஸ் சின்னம்
குறிக்கோள்
Maka-Diyos, Makatao, Makakalikasan, at Makabansa (பிலிப்பினோ)
("கடவுளுக்கும், மக்களுக்கும், இயற்கையும், நாட்டுக்கும்")
நாட்டுப்பண்
லுபாங் ஹினிராங்
"தேர்ந்த நாடு"
Location of பிலிப்பீன்ஸ்
தலைநகரம் மனிலா
14°35′N 121°0′E / 14.583, 121
பெரிய நகரம் குயெசோன் நகரம்
ஆட்சி மொழி(கள்) பிலிப்பினோ, ஆங்கிலம்
பிரதேச மொழிகள் பிகொல், செபுவானொ, இலொகானொ, ஹிலிகய்னொன், கபம்பங்கன், பங்கசினன், டகாலொக், வரே-வரே[1]
மக்கள் பிலிப்பினோ, பினொய்
அரசு ஒன்றிய அரசியலமைப்புக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் குளோரியா மகபகல்-அறோயோ
 -  அநுசாரிக் குடியரசுத் தலைவர் நொலி டெ காஸ்ட்ரோ
விடுதலை ஸ்பெயினிலிருந்து
அமெரிக்காவிலிருந்து 
 -  தோற்றம் மார்ச் 16 1521 
 -  கூற்றம் ஜூன் 12 1898 
 -  தனி அரசு மார்ச் 24 1934 
 -  திட்டப்படம் ஜூலை 4 1946 
 -  அரசியலமைப்பு பிப்ரவரி 2 1987 
பரப்பளவு
 -  மொத்தம் 3,00,000 கிமீ² (72வது)
1,15,831 சது. மை 
 -  நீர் (%) 0.61%[2]
மக்கள்தொகை
 -  2000 மதிப்பீடு 88.701 million[3] (12வது)
 -  2000 குடிமதிப்பு 76,498,735 [4] 
 -  அடர்த்தி 290/கிமீ² (32வது)
112/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $466.632 பில்லியன்[3] (25வது)
 -  நபர்வரி $5,365.287[3] (99வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $117.562 பில்லியன்[3] (47வது)
 -  நபர்வரி $1,351.718[3] (117வது)
ஜினி சுட்டெண்? (2003) 44.5[2] (மத்தியம்
ம.வ.சு (2007/2008) Green Arrow Up Darker.svg 0.771[5] (மத்தியம்) (90வது)
நாணயம் பேசோ PhilippinePeso.svg) (PHP)
நேர வலயம் பிலிப்பீன் (ஒ.ச.நே.+8)
இணைய குறி .ph
தொலைபேசி +63

பிலிப்பீன்சு (Philippines, தகலாகு மொழி: pɪlɪˈpinɐs, பிலீப்பினாஸ்), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடாகும். இதன் தலைநகரம் மணிலா. இத் தீவு நாடானது பசுபிக் சமுத்திரத்தின் மேற்க்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸின் எல்லைகளாக வடக்கே லூசான் நீரிணைக்கு அப்பாலுள்ள தாய்வானும்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பாலுள்ள வியட்னாமும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பாலுள்ள புரூணை தீவுகளும்; தெற்கே ஏனைய தீவுகளை இந்தோனேசியாவிலிருந்து பிரிக்கும் செலேபெஸ் கடலும் அமைந்துள்ள அதேவேளை; கிழக்கில் பிலிப்பைன் கடலும் பலாவு எனப்படும் ஒரு தீவுத் தேசமும் உள்ளன. பிலிப்பைன்ஸ் தீவுத் தேசமானது பசிபிக் நெருப்பு வட்டப் பகுதியில் அமைந்துள்ளதாலும் பூமத்திய ரேகைக்கு அண்மையில் உள்ளதாலும் பூகம்பங்களும் சூறாவளிகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் பிலிப்பைன்ஸ் ஏராளமான இயற்கை வளங்களையும் உலகின் மிகப்பெரிய உயிரியற் பல்வகைமையையும் கொண்டுள்ளது.

300,000 சதுர கிலோமீற்றர் (115,831 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட பிலிப்பைன்ஸ் உலகின் பாரிய நாடுகளின் பட்டியலில் 73 ஆவது இடத்திலுள்ளது.[6] மொத்தம் 7,107 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமாக விளங்கும் பிலிப்பைன்ஸ் புவியியல் ரீதியாக லூசொன், விசயாஸ் மற்றும் மின்டனோ என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகர் மணிலா ஆகும். பிரசித்திபெற்ற நகரமாக குவிசோன் நகரம் விள்ங்குகின்றது.

பிலிப்பைன்ஸ் தீவுகளில் வாழும் மக்கள் பிலிப்பினோக்கள் என அழைக்கப்படுகின்றனர். பிலிப்பைன்ஸ் 98 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[7] இதுவே ஆசியாவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 12 ஆவது இடத்திலும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏறத்தாழப் 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். உலகிலேயே புலம்பெயர்ந்தோர் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் பிலிப்பைன்சும் ஒன்றாகும்.[8] இங்கே பல்வகைப்பட்ட இனங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றும் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் நெகிரிடோ இனத்தவர்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் வந்த அவுஸ்திரேலிய ஆசிய மக்களின் மூலம் மலாய், இந்து, இசுலாமிய மக்களால் அவர்களுடைய பண்பாட்டம்சங்களும் இங்கு கொண்டுவரப்பட்டன. பல்வேறு நாடுகள் டாடு, ராஜா, சுல்தான் மற்றும் இலாகன் ஆகியோரின் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தின் காரணமாக சீனக் கலாச்சாரம் இங்கே பரவியதோடு இன்றும் சீன மக்கள் இங்கே வாழ்ந்துவருகின்றார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "General information". Government of the Philippines. பார்த்த நாள் 2007-10-01.
     "Official Website". Government of the Philippines. பார்த்த நாள் 2007-10-01.
  2. 2.0 2.1 "World Factbook — Philippines". CIA. பார்த்த நாள் 2008-07-24.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IMF2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 2000 Census of Population and Housing (Final Counts), National Statistics Office, Republic of the Philippines, http://www.census.gov.ph/census2000/c2khighlights_final.html, பார்த்த நாள்: 2007-12-12 
  5. Philippines—The Human Development Index - going beyond income, United Nations Development Programme, 2007/2008, http://hdrstats.undp.org/countries/country_fact_sheets/cty_fs_PHL.html, பார்த்த நாள்: 2007-12-14 
  6. General Profile of the Philippines : Geography (archived from the original on 2005-11-04), Philippine Information Agency.
  7. Projected Population as of May 6, 2013, PH: Commission on Population, May 6, 2013, http://www.popcom.gov.ph/ 
  8. Global Pinoys to rally at Chinese consulates – The Philippine Star » News » Headlines. Philstar.com (2012-04-27). Retrieved on 2012-07-04.


"http://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்சு&oldid=1557656" இருந்து மீள்விக்கப்பட்டது