சுவிட்சர்லாந்து

ஆள்கூறுகள்: 46°50′N 8°20′E / 46.833°N 8.333°E / 46.833; 8.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவிட்சர்லாந்துக் கூட்டமைப்பு
Swiss Confederation
ஐந்து அதிகாரப்பூர்வப் பெயர்கள்
கொடி of சுவிட்சர்லாந்து
கொடி
சின்னம் of சுவிட்சர்லாந்து
சின்னம்
குறிக்கோள்: 
"Unus pro omnibus, omnes pro uno"
"அனைவருக்கும் ஒன்று, ஒன்றே அனைவருக்கும்"
நாட்டுப்பண்: "சுவிசுப் பண்"
அமைவிடம்: சுவிட்சர்லாந்து  (பச்சை) ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சையும் சாம்பலும்)
அமைவிடம்: சுவிட்சர்லாந்து  (பச்சை)

ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சையும் சாம்பலும்)

தலைநகரம்
46°57′N 7°27′E / 46.950°N 7.450°E / 46.950; 7.450
பெரிய நகர்சூரிக்கு
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(2020)[5]
 • 74.3% சுவிசு மக்கள்
 • 25.7% வெளிநாட்டினர்
சமயம்
(2020)[6]
மக்கள்சுவிசு
அரசாங்கம்கூட்டாட்சி அரசு[7][8] நேரடி மக்களாட்சியுடன் இயக்குநரகக் குடியரசு
• கூட்டாட்சிப் பேரவை
 • அலைன் பெர்செட் (அரசுத்தலைவர்)
 • வியோலா ஆம்கெர்டு (துணைத்தலைவர்)
• சான்சிலர்
வால்ட்டர் துர்கெர்
சட்டமன்றம்சட்டமன்றம்
மாநிலங்களின் பேரவை
தேசியப் பேரவை
வரலாறு
• நிறுவல்
1 ஆகத்து 1291
• இறையாண்மை அங்கீகாரம் (வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்)
24 அக்டோபர் 1648
• கூட்டாட்சி ஒப்பந்தம்
7 ஆகத்து 1815
• கூட்டாட்சி நாடு
12 செப்டம்பர் 1848
பரப்பு
• மொத்தம்
41,285 km2 (15,940 sq mi) (132-வது)
• நீர் (%)
4.34 (2015)[9]
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
Neutral increase 86,36,896[10] (99-வது)
• 2015 கணக்கெடுப்பு
8,327,126[11]
• அடர்த்தி
207/km2 (536.1/sq mi) (48-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
$739.49 பில்.[12] (35-வது)
• தலைவிகிதம்
$84,658 [12] (5-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
$841.69 billion[12] (20-வது)
• தலைவிகிதம்
$92,434[12] (7-வது)
ஜினி (2018)positive decrease 29.7[13]
தாழ்
மமேசு (2021) 0.962[14]
அதியுயர் · 1-வது
நாணயம்சுவிசு பிராங்க் (CHF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
திகதி அமைப்புநாள்.மா. ஆண்டு (அனோ டொமினி)
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+41
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCH
இணையக் குறி.ch, .swiss

சுவிட்சர்லாந்து (Switzerland) அதிகாரப்பூர்வமாக சுவிசுக் கூட்டமைப்பு என்பது மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். சுவிட்சர்லாந்தானது மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பேர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இதன் இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன.[2]

இதன் வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லீக்கின்ஸ்டைன் ஆகிய நாடுகள் சுவிசின் எல்லைகளாக உள்ளன. சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. இது புவியியல் ரீதியாக சுவிஸ் பீடபூமி, ஆல்ப்ஸ் மற்றும் ஜூரா என பிரிக்கப்பட்டுள்ளது. 41,285 கிமீ2 (15,940 ச.மை) பரப்பளவில் 39,997 கிமீ2 (15,443 ச.மை) நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. ஆல்ப்ஸ் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 8.7 மில்லியன் மக்கள் தொகை (2009) கொண்ட நாடான இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136ம் இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. இங்கு சூரிச், ஜெனிவா மற்றும் பாசல் உட்பட மிகப்பெரிய நகரங்களும்பொருளாதார மையங்களும் அமைந்துள்ளன. இந்த மூன்று நகரங்களிலும் உலக வணிக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அவைகளின் இரண்டாவது பெரிய அலுவலகம் போன்ற சர்வதேச அமைப்புகளின் தலைமையகம் அல்லது அலுவலகங்கள் உள்ளன.

பேர்ன், கூட்டாட்சி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சுவிட்சர்லாந்து, தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதன் சராசரி தனிநபர் GDP இன் மதிப்பு $67,384.என்பதாக உள்ளது.[15]. உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள நகரங்களில் சூரிச் மற்றும் ஜெனீவா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.[16].

சுவிட்சர்லாந்து நீண்ட நடுநிலைத்தன்மையுடைய வரலாற்றினைக் கொண்டது. ஆஸ்திரியா மற்றும் பர்கண்டிக்கு எதிரான தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளைத் தொடர்ந்து இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட பழைய சுவிஸ் கூட்டமைப்பிலிருந்து சுவிட்சர்லாந்து உருவானது. 1291 இன் கூட்டமைப்பு சாசனம் நாட்டின் நிறுவன ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்த நாள் சுவிஸ் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தத்திலிருந்து, சுவிட்சர்லாந்து ஆயுதமேந்திய நடுநிலைக் கொள்கையைப் பராமரித்து வருகிறது. புனித உரோமானியப் பேரரசிலிருந்து 1648இல் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. 1815 முதல் சுவிட்சர்லாந்து சர்வதேசப் போரில் ஈடுபடவில்லை. இது 2002 இல் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது. இருப்பினும் அது உலகளவில் அடிக்கடி அமைதியை கட்டியெழுப்பும் செயல்முறைகளில் பங்கேற்பது உட்பட தீவிரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. [17]

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடான இது செர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு முதலிய நான்கு தேசிய மொழிகளையும், பலமொழிகள் பேசப்படும் நாடாகவும் விளங்குகிறது. பெரும்பான்மையான மக்கள் ஜெர்மன் மொழி பேசுபவர்களாக இருந்தாலும், கூட்டாட்சி நேரடி மக்களாட்சி, ஆல்பைன் குறியீட்டுவாதம் போன்ற பொதுவான மதிப்புகள் தேசிய அடையாளமாக இதன் பொதுவான வரலாற்று பின்னணியில் வேரூன்றியுள்ளது.[18] and Alpine symbolism.[19][20] மொழி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றைக் கடந்த இந்த அடையாளம், சுவிட்சர்லாந்தை ஒரு தேசிய அரசாகக் காட்டிலும் "விருப்பத்தின் தேசம்" என்று விவரிக்க வழிவகுத்தது.[21]

சுவிட்சர்லாந்து உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகும். இது எந்த நாட்டிலும் ஒரு வயது வந்தவருக்கு மிக உயர்ந்த பெயரளவிலான செல்வத்தையும்,[22] ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தையும் கொண்டுள்ளது.[23][24] 2021 முதல் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது. மேலும் இது பொருளாதார போட்டித்தன்மை மற்றும் ஜனநாயக ஆளுமை உட்பட பல சர்வதேச அளவீடுகளிலும் உயர்ந்த இடத்தில் உள்ளது.[25][26] இதன் நகரங்களான சூரிச், ஜெனிவா மற்றும் பேசல் ஆகியவை வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தாலும் சில உயர்தர வாழ்க்கைச் செலவுகளும் உள்ளன.[27]

வரலாறு[தொகு]

சுவிட்சர்லாந்து 1848 இல் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து தனது தற்போதைய வடிவத்தில் ஒரு மாகாணமாக விளங்குகிறது. நவீன சுவிட்சர்லாந்தின் முன்னோடிகள் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பாதுகாப்பான கூட்டணியை உருவாக்கியிருந்தனர். அதன் அமைப்பில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கின்ற பல மாகாணங்களின் ஒருங்கிணைப்பாக அது உருவாக்கப்பட்டது.

முற்கால வரலாறு[தொகு]

கி.மு.44 இல் கண்டறியப்பட்ட அகஸ்டா ரௌரிகா என்பது ரைனில் அமைந்த முதல் ரோமானிய குடியேற்ற நாடு ஆக இருந்தது, மேலும் இது தற்சமயம் சுவிட்சர்லாந்தின் முக்கியமான தொல்லியல் சார்ந்த தளமாக உள்ளது.[28]

150,000 ஆண்டுகளுக்கும் முன்பே சுவிட்சர்லாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்கள் இருக்கின்றன.[29] கி.மு. 5300 ஆம் ஆண்டு வாக்கில் சுவிட்சர்லாந்தின் காக்லிங்கெனில்[30]</ref> மிகப்பழமையான விவசாயக் குடியிருப்புகள் காணப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்புகள்[தொகு]

 1. பெர்ன் "கூட்டாட்சி நகரம்" என்று குறிப்பிடப்படுகிறது. சுவிசு சட்டம் அத்தகைய தலைநகரைக் குறிப்பிடவில்லை, ஆனால் பெர்னில் நடுவண் அரசின் நாடாளுமன்றமும் அரசாங்கமும் உள்ளன, அதே வேளை நடுவண் நீதிமன்றங்கள் போன்ற பிற கூட்டாட்சி நிறுவனங்கள் ஏனைய நகரங்களில் உள்ளன.
 2. ஆங்கிலம் ஒரு அதிகாரபூர்வ மொழியாக இல்லாவிட்டாலும், அது சில சமயங்களில் பல அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஒரு மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 5.2% (கிட்டத்தட்ட அரை மில்லியன்) மக்கள் - பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் - ஆங்கிலத்தை முதல் மொழியாகப் பேசுகிறார்கள், மேலும் ஐந்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பேசுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Confoederatio helvetica in the Historical Dictionary of Switzerland
 2. 2.0 2.1 Federal city in German, French and Italian in the online Historical Dictionary of Switzerland. Version of 20 March 2015.
 3. Holenstein, André (2012). "Die Hauptstadt existiert nicht" (in de). UniPress – Forschung und Wissenschaft an der Universität Bern (Berne: Department Communication, University of Berne) 152 (Sonderfall Hauptstatdtregion): 16–19. doi:10.7892/boris.41280. "1848 ஆம் ஆண்டில், புதிய கூட்டமைப்பிற்கான அரசியல் மற்றும் நிர்வாக மையம் தீர்மானிக்கப்பட்டபோது, ​​அரசியலமைப்பின் நிறுவனர்கள் சுவிட்சர்லாந்திற்கு ஒரு தலைநகரை நியமிப்பதில் இருந்து விலகி, அதற்கு பதிலாக 108 வது பிரிவில் உருவாக்கப்பட்டது: "அதிகாரிகளின் இருக்கையுடன் தொடர்புடைய அனைத்தும், கூட்டாட்சி சட்டத்திற்கு உரியது." எனவே கூட்டாட்சி நகரமானது கூட்டாட்சி அதிகாரிகளின் இருக்கையை விட அதிகமாகவும் குறைவாகவும் இல்லை.". 
 4. "Languages". https://www.swissinfo.ch/eng/languages/29177618. 
 5. "DSTAT-TAB – interactive tables (FSO): Demographic balance by citizenship". Neuchâtel, Switzerland: Federal Statistical Office, FSO. 2020. https://www.pxweb.bfs.admin.ch/pxweb/de/px-x-0103010000_151/px-x-0103010000_151/px-x-0103010000_151.px. 
 6. "Religion". Neuchâtel, Switzerland: Swiss Federal Statistical Office. 21 March 2022. https://www.bfs.admin.ch/bfs/en/home/statistics/population/languages-religions/religions.assetdetail.21784427.html. 
 7. Shugart, Matthew Søberg (December 2005). "Semi-Presidential Systems: Dual Executive And Mixed Authority Patterns". French Politics 3 (3): 323–351. doi:10.1057/palgrave.fp.8200087. 
 8. Elgie, Robert (2016). "Government Systems, Party Politics, and Institutional Engineering in the Round". Insight Turkey 18 (4): 79–92. பன்னாட்டுத் தர தொடர் எண்:1302-177X. 
 9. "Surface water and surface water change". பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD). https://stats.oecd.org/Index.aspx?DataSetCode=SURFACE_WATER#. 
 10. "Popolazione della Confederazione Svizzera". DataCommons.org. 25 August 2022. https://datacommons.org/place/country/CHE?utm_medium=explore&mprop=count&popt=Person&hl=en. 
 11. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 12. 12.0 12.1 12.2 12.3 "World Economic Outlook Database, October 2022". அனைத்துலக நாணய நிதியம். 11 October 2022. https://www.imf.org/en/Publications/WEO/weo-database/2022/October/weo-report?c=512,914,612,171,614,311,213,911,314,193,122,912,313,419,513,316,913,124,339,638,514,218,963,616,223,516,918,748,618,624,522,622,156,626,628,228,924,233,632,636,634,238,662,960,423,935,128,611,321,243,248,469,253,642,643,939,734,644,819,172,132,646,648,915,134,652,174,328,258,656,654,336,263,268,532,944,176,534,536,429,433,178,436,136,343,158,439,916,664,826,542,967,443,917,544,941,446,666,668,672,946,137,546,674,676,548,556,678,181,867,682,684,273,868,921,948,943,686,688,518,728,836,558,138,196,278,692,694,962,142,449,564,565,283,853,288,293,566,964,182,359,453,968,922,714,862,135,716,456,722,942,718,724,576,936,961,813,726,199,733,184,524,361,362,364,732,366,144,146,463,528,923,738,578,537,742,866,369,744,186,925,869,746,926,466,112,111,298,927,846,299,582,487,474,754,698,&s=NGDPDPC,&sy=2020&ey=2027&ssm=0&scsm=1&scc=0&ssd=1&ssc=0&sic=0&sort=country&ds=.&br=1. 
 13. "Gini coefficient of equivalised disposable income – EU-SILC survey". Eurostat. https://ec.europa.eu/eurostat/tgm/table.do?tab=table&init=1&language=en&pcode=tessi190&plugin=1. 
 14. "Human Development Report 2021/2022" (in en). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. https://hdr.undp.org/system/files/documents/global-report-document/hdr2021-22pdf_1.pdf. 
 15. "Switzerland". International Monetary Fund. http://www.imf.org/external/pubs/ft/weo/2014/02/weodata/index.aspx. பார்த்த நாள்: 2 November 2014. 
 16. சுவிஸ் மற்றும் ஜெர்மன் நகரங்கள் உலகின் சிறந்த நகரங்களின் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றன
 17. Thomas Fleiner; Alexander Misic; Nicole Töpperwien (5 August 2005). Swiss Constitutional Law. Kluwer Law International. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-411-2404-3. https://www.google.com/books/edition/Swiss_Constitutional_Law/-S1fHJiawHUC?hl=en&gbpv=1&pg=PA28&printsec=frontcover. 
 18. Prof. Dr. Adrian Vatter (2014) (in de). Das politische System der Schweiz. Studienkurs Politikwissenschaft. Baden-Baden: UTB Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8252-4011-0. http://www.nomos-shop.de/Vatter-politische-System-Schweiz/productview.aspx?product=21055. பார்த்த நாள்: 20 December 2015. 
 19. Zimmer, Oliver (12 January 2004). "In Search of Natural Identity: Alpine Landscape and the Reconstruction of the Swiss Nation". Comparative Studies in Society and History (London) 40 (4): 637–665. doi:10.1017/S0010417598001686. 
 20. Josef Lang (14 December 2015). "Die Alpen als Ideologie" (in de). Tages-Anzeiger (Zürich, Switzerland). http://www.tagesanzeiger.ch/schweiz/standard/die-alpen-als-ideologie/story/22155483. 
 21. Schmock, Nico (30 January 2019) (in de). Die Schweiz als "Willensnation"? Die Kernelemente des Schweizer Selbstverständnisses. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-668-87199-1. https://www.grin.com/document/454871. 
 22. "Global wealth databook 2019". கிரெடிட் சூஸ். https://www.credit-suisse.com/media/assets/corporate/docs/about-us/research/publications/global-wealth-databook-2019.pdf. Archived . The country data comes from Table 3.1 on page 117. The region data comes from the end of that table on page 120.
 23. Subir Ghosh (9 October 2010). "US is still by far the richest country, China fastest growing". Canada. http://www.digitaljournal.com/article/298716. 
 24. Simon Bowers (19 October 2011). "Franc's rise puts Swiss top of rich list". The Guardian (London, UK). https://www.theguardian.com/business/2011/oct/19/currency-appreciation-makes-swiss-wealthiest. 
 25. Bachmann, Helena (23 March 2018). "Looking for a better quality of life? Try these three Swiss cities". USA Today. https://eu.usatoday.com/story/news/world/2018/03/23/swiss-cities-rank-high-quality-life/448843002/. 
 26. Taylor, Chloe (20 May 2019). "These cities offer the best quality of life in the world, according to Deutsche Bank". CNBC. https://www.cnbc.com/2019/05/20/these-cities-offer-the-best-quality-of-life-deutsche-bank-says.html. 
 27. "Coronavirus: Paris and Zurich become world's most expensive cities to live in because of COVID-19". Euronews. 18 November 2020. https://www.euronews.com/2020/11/18/coronavirus-paris-and-zurich-become-world-s-most-expensive-cities-to-live-in-because-of-co. 
 28. "Switzerland's Roman heritage comes to life". https://www.swissinfo.ch/eng/switzerland-s-roman-heritage-comes-to-life/4707054. 
 29. "History". http://www.swissworld.org/en/history/prehistory_to_romans/prehistoric_times/. 
 30. வரலாறு swissworld.org. 2009-06-27 இல் பெறப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிட்சர்லாந்து&oldid=3647604" இருந்து மீள்விக்கப்பட்டது