கத்தோலிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தோலிக்கம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் இறையியல், கோட்பாடு, திருவழிபாடு, அறநெறி கொள்கைகள் மற்றும் ஆன்மீக சார்ந்தவற்றில் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் பதமாகும்.

இப்பதம் பொதுவாக கிறித்தவர்களையும் கிறித்தவ சபையையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பெருவாரியாக கத்தோலிக்க திருச்சபையைக் குறிக்கவே பயன்படுகின்றது.[1] ஆயினும், ஏனையோர் முதலாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்துவரும் கிறித்தவ சபைகளை குறிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கத்தோலிக்கம் என்னும் அடைமொழியினை பயன்படுத்தும் திருச்சபைகளை பின்வருமாறு பிரிக்கலாம்:

  1. கத்தோலிக்க திருச்சபை, உரோமைத் தலைமைக்குருவோடு முழு உறவு ஒன்றிப்பில் இருப்பதை கத்தோலிக்கத்தின் அடையாளமாகக் கருதுகின்றது. இவற்றுள் பல்வேறு வழிபாட்டுமுறைகளைச் சேர்ந்த தனித் திருச்சபைகளும் அடங்கும்.[2]
  2. கிழக்கு மரபுவழி திருச்சபைகள் மற்றும் மரபுவழி திருச்சபைகள் பலவற்றில் அப்போஸ்தலிக்க வழிமரபு இருப்பதையே கத்தோலிக்கத்தின் அடையாளமாகக் கருதுகின்றன. மேலும் அவை திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடம் என்பது மரியாதைக்குறிய பதவி மட்டுமே என்றும், பேதுருவின் வழிவரும் திருத்தந்தைக்கு வேறு எவ்வித அதிகாரமும் தனது ஆட்சிப்பகுதிக்கு வெளியே இல்லை எனவும் நம்புகின்றன.[3][4][5][6]
  3. பழைய கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம் மற்றும் சில லூதரனிய சபைகளும் கத்தோலிக்கம் என்பதனை எல்லா கிறித்தவ பிரிவுகளின் கூட்டமைப்பாக கருதுகின்றது.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catholicism
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தோலிக்கம்&oldid=3792429" இருந்து மீள்விக்கப்பட்டது