உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
International Labour Organization
Organisation internationale du Travail
Organización Internacional del Trabajo
நிறுவப்பட்டது1919
வகைUN agency
சட்டப்படி நிலைactive
தலைமையகம்சுவிட்சர்லாந்து Geneva
இணையதளம்http://www.ilo.org/

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (International Labour Organization ) (ஐ.எல்.ஓ), தொழிலாளர் சிக்கல்களை நிர்வகிக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு நோக்கங்கொண்ட முகமையாகும். அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. அதன் செயலகம் - உலகம் முழுதும் அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்களால் - பன்னாட்டு தொழிலாளர் அலுவலகம் என அறியப்படுகிறது. நிறுவனமானது நோபல் அமைதி விருதினை 1969 ஆம் ஆண்டு பெற்றது.[1]

வரலாறு[தொகு]

1919 ஆம் ஆண்டின் அக்டோபர்-நவம்பர் மாதம் வாஷிங்டன் டி.சியில் நடந்த முதலாம் அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் ஈ.எச்.க்ரீன்வூட், அமெரிக்க பிரதிநிதி, ஹரோல்ட் பி. பட்லர், செயலர்-தலைவர், செயலக பணியாளர்களுடன் பான் அமெரிக்கன் கட்டடம் முன்பு நிற்கின்றனர்.

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பானது முதலாம் உலகப் போரை முடிவிற்கு கொண்டு வந்த வெர்செயில்ஸ் உடன்படிக்கையினைத் தொடர்ந்து லீக் ஆஃப் நேஷன்ஸ் மூலமாக ஒரு முகமையாக நிறுவப்பட்டது.

வல்லுநர்கள்[தொகு]

1919 ஆம் ஆண்டு முன்னோடி அறிஞர் தலைமுறையினர், சமூக கொள்கை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன் எப்போதும் கண்டிராத சர்வதேச நிறுவன பணிச்சட்டத்தினை தொழிலாளர் அரசியலிற்காக வடிவமைத்தனர். ஐ.எல்.ஓவின் நிறுவன தந்தையர் சமூக சிந்தனை மற்றும் நடவடிக்கையில் 1919 ஆம் ஆண்டிற்கு முன்பு பெரும் அகன்ற காலடித் தடங்களை ஏறபடுத்தியிருந்தனர். அனைத்து முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை முன்னர் இருந்த தனித்த தொழில்முறை மற்றும் கருத்தியல் இணைப்புக்களால் அறிவர். அதில் அவர்கள் சமூக கொள்கைகள் மீதான ஞானம், அனுபவம் மற்றும் யோசனைகள் பரிமாற்றிக் கொள்கின்றனர். போருக்கு முந்தைய 'மனிதருக்கான சிந்தனை சமூகங்கள்' 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'இண்டெர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் லேபர் லெஜிஸ்லேஷன்'(ஐ.ஏ.எல்.எல்) போன்றவையும், அரசியல் இணைப்புக்கள் 'இரண்டாம் சோஷலிச சர்வதேசியம்' போன்றவையும் சர்வதேச தொழிலாளர் அரசியலை நிறுவனமயமாக்கல் செய்வதில் தீர்மானிக்கும் காரணியாக இருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிலவிய நன்னிலை உணர்வில் 'செயல்படக்கூடிய சமூகத்தை' உருவாக்கும் யோசனையே சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தை கட்டமைத்த சமூக இயக்கவியலுக்கான முக்கிய உந்து சக்தியாகும். ஒரு புதிய ஒழுங்குமுறையாக சர்வதேச தொழிலாளர் சட்டம் சமூக சீர்த்திருத்தங்களை பயன் தரத்தக்க வகையில் நடைமுறைப்படுத்த வழிதுறையாக ஆனது. நிறுவனர்களின் மிகச் சிறந்த கற்பனாவாத நோக்கங்களான சமூக நீதி மற்றும் கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமை ஆகியவை 1919 ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் செய்யப்பட்ட ராஜதந்திர ரீதியிலான அரசியல் சமரசங்களால் மாற்றத்திற்குள்ளாயின. அது சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கருத்தியல் கோட்பாட்டிற்கும் செயல்பாட்டுத் தன்மைக்கும் இடையிலான சமநிலையை வெளிப்படுத்தியது.[2]

தொழிற்சங்கங்கள்[தொகு]

முதலாம் உலகப் போர் நடைபெறும் வேளையில் சர்வதேச தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினை பாதுகாக்க ஒரு விரிவாக தொகுக்கப்பட்ட திட்டம் ஒன்றினைப் பரிந்துரைத்தது. அது தொழிலாளர்களின் போர் ஆதரவிற்காக ஈடு செய்யும் எண்ணத்தைக் கொண்டதாகும். இந்த திட்டம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக போருக்குப் பிறகு மாறும் எனக் கருதப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அரசியல்வாதிகள் போருக்குப் பிந்தைய சமூக நிலைத்ததன்மையை உருவாக்க அதனைக் கையிலெடுத்தனர். இருப்பினும் அத்திட்டத்தில் நிறுவப்பட்ட வழிமுறை தொழிற்சங்கங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏமாற்றியது. அரசியல்வாதிகள் தொழிலாளருக்கு தொழிற்சங்க கோரிக்கைகளைச் சாதிக்க, சிறந்த முறையில் முயற்சித்து பயன்படுத்த ஒரு நிறுவனத்தை அளித்தனர். வெளிப்படையான ஏமாற்றமும் கூரான விமர்சனமும் இருந்த போதிலும் 1913 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பின்னர் மறுமீட்புச் செய்யப்பட்ட இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ் (ஐ.எஃப்.டி.யூ) விரைவாக இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது. ஐ.எஃப்.டி.யூ அதன் சர்வதேச நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் நிறுவனத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்கான நோக்கத்தில் அதிகரிக்கச் செய்தது.[3]

போருக்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கங்களை பாதுகாப்பது பல நாடுகளின் கவனத்தை முதலாம் உலகப் போரின் போதும் அதன் பிறகும் உடனடியாக ஆக்ரமித்திருந்தது. கிரேட் பிரிட்டனில் (இங்கிலாந்து) மறு சீரமைப்பு குழுவின் துணைக்குழுவான வொயிட்லி குழு அதன் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியறிக்கையில் உலகம் முழுதும் 'தொழிற் நிர்வாகக் குழுக்களை' நிறுவ பரிந்துரைத்தது.[4] பிரித்தானிய தொழிலாளர் கட்சி அதன் சொந்த மறு சீரமைப்பு திட்டத்தை லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர் எனும் தலைப்பிட்ட ஆவணத்தில் வெளியிட்டது.[5] 1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது இண்டெர்-அலைய்ட் லேபர் அண்ட் சோஷலிஸ்ட் கான்ஃபரன்ஸ் (கிரேட் பிரிட்டன், ஃபிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டது) அதன் அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் உரிமைகள் அமைப்பொன்றை நிறுவமும், இரகசியமான இராஜதந்திரம் மற்றும் இதர நோக்கங்களை முடிவுறுத்தவும் வாதிட்டு, வெளியிட்டது.[6] மேலும் 1918 ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர் (ஏ.எஃப்.எல்) அதன் சொந்த தனித்த அரசியலற்ற அறிக்கையை வெளியிட்டது. அது கூட்டாக பேரம் பேசும் செயல்பாட்டின் வழியாக எண்ணற்ற ஆதாயங்களின் மேம்பாட்டைச் சாதிக்க அழைப்பு விடுத்தது.[7]

போர் முடிவினை நெருங்கிய போது இரு போட்டியிடும் பார்வைகள் போருக்குப் பிந்தைய உலகிற்காக உருவாயின. முதலாவது இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ் (ஐ.எஃப்.டி.யூ) ஆல் அளிக்கப்பட்டது. அது 1919 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெர்னேயில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பெர்ன் கூட்டம் ஐ.எஃப்.டி.யூவின் எதிர்காலம் மற்றும் முன்னர் சில வருடங்களில் செய்யப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ளும். ஐ.எஃப்.டி.யூ மத்திய நாடுகளிடமிருந்தான பிரதிநிதிகளையும் கூட இணையானவர்களாக உட்படுத்துவதை முன் வைத்தது. ஏ.எஃப்.எல் தலைவரான சாம்யூல் கோம்பர்ஸ் (Samuel Gompers) கூட்டத்தைப் புறக்கணித்தார். மத்திய நாடுகளின் பிரதிநிதிகளை கீழ்படியும் பாத்திரத்தைக் கொடுக்க விரும்பினார். அவர்களின் நாடுகள் போரினை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக அவ்வாறு செய்ய விரும்பினார். அதற்கு பதிலாக கோம்பர்ஸ் பாரீஸில் ஒரு கூட்டத்தை கூட்டி, அதிபர் வூட்ரோவ் வில்சனின் (Woodrow Wilson) பதினான்கு அம்சங்களை மட்டும் ஒரு களமாகக் கொண்டு பரிசீலிக்க செய்யும்படி விரும்பினார். அமெரிக்காவின் புறக்கணிப்பு இருந்தாலும் கூட பெர்னே கூட்டம் திட்டமிட்டப்படி நடந்தேறியது. அதன் இறுதி அறிக்கையில், பெர்னே மாநாடு, கூலியுழைப்பிற்கு முடிவு கட்டி சோஷலிசத்தை நிறுவக் கோரியது. இந்த முடிவுகளை உடனடியாக எட்ட இயலாவிடில், பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ்சைச் சார்ந்ததொரு சர்வதேச அமைப்பானது தொழிலாளர்களையும் தொழிற் சங்கங்களையும் பாதுகாக்க சட்டத்தினை இயற்றி அமலாக்கம் செய்ய வேண்டும்.[7]

அதே நேரத்தில் பாரீஸ் அமைதி மாநாடு பொதுவுடைமைக்கான பகிரங்க ஆதரவை ஆர்வங்குறையச் செய்ய நோக்கங் கொண்டிருந்தது. பின்னர் அச்சு நாடுகள் உருவாகிவரும் அமைதி உடன்படிக்கையானது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் காப்பது தொடர்பான பிரிவு விதிகள் உட்சொருகப்பட வேண்டும் என்பதில் உடன்பட்டனர். மேலும் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிறுவப்பட்டு சர்வதேச தொழிலாளர் உறவுகளை எதிர்காலத்தில் வழிகாட்டி உதவ வேண்டும் என்றது. அமைதி மாநாட்டால் நிறுவப்பட்ட சர்வதேச தொழிலாளர் சட்டத்தின் மீதான ஆலோசனைக் குழு இத்தகைய பரிந்துரைகளை வரைவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்குழு முதல் முறையாக 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி கூடியது. அப்போது கோம்பர்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

குழுவின் கூட்டங்களில் போட்டியிடும் இரு பரிந்துரைகள் சர்வதேச அமைப்பினைக் குறித்து உருவாயின. பிரித்தானிய ஒரு சர்வதேச நாடாளுமன்றத்தை நிறுவி தொழிலாளர் சட்டங்களை இயற்ற பரிந்துரைத்தது. அதனை ஒவ்வொரு லீக் உறுப்பினரும் அமலாக்கம் செய்வது தேவைப்படும். ஒவ்வொரு நாடும் நாடாளுமன்றத்திற்கு தொழிலாளர் மற்றும் நிர்வாகம் ஆகிய இரு பிரதிநிதிகளை கொண்டிருக்கும் அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவர் இடம் பெறுவர். ஒரு சர்வதேச தொழிலாளர் அலுவலகம் தொழிலாளர் விவகாரங்களில் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் மேலும் புதிய சர்வதேச சட்டங்களை அமலாக்கும். தத்துவரீதியாக சர்வதேச நாடாளுமன்ற கருத்தாக்கத்திற்கு எதிர்ப்புடையதாலும், மேலும் சர்வதேச தரநிலைகள் அமெரிக்காவில் சாதிக்கப்பட்ட சில பாதுகாப்புக்களை குறைக்கும் என உறுதியாக நம்பியதாலும், கோம்பர்ஸ் சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைகளை மட்டுமே அதிகாரமளிக்கப்பட வேண்டும் என முன் வைத்தது. மேலும் அமலாக்கம் லீக் ஆஃப் நேஷன்ஸ்சிற்கு விடப்பட்டது. பிரிட்டிஷாரிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தப் போதிலும் அமெரிக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது.[7]

கோம்பர்ஸ்சும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்வரைவு பட்டியலின் அட்டவனையை நிர்ணயித்தார். அமெரிக்கர்கள் 10 பரிந்துரைகளைச் செய்தனர். மூன்று அம்சங்கள் மாற்றங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன. உழைப்பு ஒரு பண்டமாக கருதப்படக்கூடாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்வதற்குப் போதுமான அளவு ஊதியம் பெறும் உரிமை மற்றும் பெண்க்ள் தங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற வேண்டும். பேச்சு, அச்சு உரிமை, கூடுதல் உரிமை மற்றும் கூட்டமைப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும் பரிந்துரை ஒன்று திருத்தப்பட்டு கூட்டமைப்பு சுதந்திரம் மட்டும் உள்ளடக்கப்பட்டது. பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதிக்கானத் தடை ஆனது பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடையாக திருத்தப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை எனும் கோரிக்கைக்கான பரிந்துரை ஒரு வாரத்திற்கு எட்டு மணி நேர வேலை அல்லது வாரத்திற்கு 40 மணி நேர வேலை எனத் திருத்தப்பட்டது (இதற்கு குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது). இதர நான்கு அமெரிக்க பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் சர்வதேச பிரதிநிதிகள் மூன்று கூடுதல் விதிகளை பரிந்துரைத்தனர், அவை ஏற்கப்பட்டன. வாரத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ஓய்வு, அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கும் சட்டத்தில் இணைத் தகுதி மற்றும் தொழிற்சாலை நிலைகளை வழக்கமாகவும், அடிக்கடியும் பரிசோதிப்பது ஆகியவையாகும்.[7]

1919 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அன்று குழுவானது தனது இறுதி அறிக்கையைத் தந்தது. அமைதி மாநாடு எவ்வித திருத்தலுமின்றி ஏப்ரல் 11 ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டது. அறிக்கை வெர்சைய்ல்ஸ் உடன்படிக்கையின் 18 ஆம் பாகமாக சேர்க்கப்பட்டது.[7]

முதல் வருடாந்திர மாநாடு (சர்வதேச தொழிலாளர் மாநாடு அல்லது ச.தொ.மா) 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 29 தேதியன்று வாஷிங்டன் டி.சியில் துவங்கியது. அது முதல் ஆறு சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்களை, தொழிற்சாலை பணி நேரம், வேலையின்மை, மகப்பேறு பாதுகாப்பு, பெண்களுக்கு இரவு நேரப்பணி, குறைந்த பட்ச வயது மற்றும் தொழிற்துறையில் இளம் நபர்களுக்கு இரவு நேர வேலை ஆகியவற்றோடு தொடர்புடையவற்றை ஏற்றுக்கொண்டது.[8] முன்னணி பிரெஞ்சு சோஷலிசவாதியான ஆல்பர்ட் தாமஸ் அதன் தலைமை இயக்குநராக ஆனார். 1946 ஆம் ஆண்டு லீக் மறைந்தப் பிறகு சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர் அமைப்பாக மாறியது. அதன் பணியமைப்புச் சட்டம் தனது திருத்தல்கள் படி நிறுவனத்தின்As of April 2009 இலக்குகள் மற்றும் நோக்கங்களில் பிலெடெல்ஃபியா பிரகடனத்தையும் (1944) உள்ளடக்கியுள்ளது. அதன் தற்போதைய தலைமை இயக்குநராக ஜூவான் சோமாவியா உள்ளார் (1999 ஆம் ஆண்டிலிருந்து).

பிரதிநிதித்துவம்[தொகு]

ஐக்கிய நாட்டு சபையின் இதர சிறப்பு முகமைகள் போலில்லாமால் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் முத்தரப்பு நிர்வாக அமைப்பை - அரசுகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்டதாகவுள்ளது.[9]

நிர்வாக அமைப்பு[தொகு]

தற்போது நிர்வாக அமைப்பே சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தின் நிர்வாகக்குழுவாக உள்ளது. அது ஆண்டிற்கு மூன்று முறை மார்ச், ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் கூடுகிறது. அது சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளை எடுக்கிறது. சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் செயற்பட்டியலை தீர்மானிக்கிறது. மாநாட்டில் சமர்பிக்கப்படும் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கு மற்றும் முன்வரைவு திட்டம் ஆகியவற்றை ஏற்கிறது மற்றும் தலைமை இயக்குநரை தேர்ந்தெடுக்கிறது.

நிர்வாகக் குழு 28 அரசு பிரதிநிதிகள், 14 தொழிலாளர் குழு பிரதிநிதிகள் மற்றும் 14 முதலாளிகள் குழு பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பத்து அரசு பிரதிநிதித்துவ இடங்கள் நிரந்தரமாக பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்ய கூட்டமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவால் கைக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள அரசு பிரதிநிதிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அரசு பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[10]

சர்வதேச தொழிலாளர் மாநாடு[தொகு]

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டை நடத்துகிறது. அப்போது தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் வடிவமைக்கப்பட்டு ஏற்கப்படுகின்றன. மாநாடு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பொதுக் கொள்கைகள், பணித் திட்டம் மற்றும் வரவு-செலவு ஆகியவற்றைப் பற்றியும் முடிவுகளை எடுக்கிறது.

ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் மாநாட்டிற்கு இரு அரசு பிரதிநிதிகள், ஒரு முதலாளி பிரதிநிதி மற்றும் ஒரு தொழிலாளர் பிரதிநிதி ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும். அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வாக்குரிமைகள் உண்டு. அனைத்து வாக்குகளும் பிரதிநிதி நாடுகளின் மக்கட்தொகைக்கு அப்பாற்பட்டு சமமானவையாகும். முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் பிரதிநிதித்துவங்கள் சாதாரணமாக "அதிக பிரதித்துவம்" என்பதற்கு ஒப்ப உள்ள தேசிய முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் அமைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். வழமையாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அவர்களது வாக்கை ஒருங்கிணைப்பர் அவ்வாறே முதலாளிகளின் பிரதிநிதிகளும் செய்வர். [சான்று தேவை]

சர்வதேச தொழிலாளர் குறியீடு[தொகு]

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாடுகளில் ஒன்றானது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை அகன்ற விரிவகைகளுடைய தொழிலாலர் தொடர்பான பொருள்களில் உள்ளடக்கிய தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை ஏற்பதன் மூலம் நிறுவதாகும். அது சில நேரங்களில் சர்வதேச தொழிலாளர் குறியீடு என குறிக்கப்படுகிறது. உள்ளடக்கப்படும் தலைப்புகள் விரிவான விஷயங்களை கூட்டிணையும் சுதந்திரத்திலிருந்து பணியில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு, கடற்பணித் துறையில் வேலைச்சூழல், இரவு வேலை, பாகுபாடு, சிறார் தொழில் மற்றும் கட்டாய உழைப்பு வரை உள்ளடக்கியதாகும். 'குறியீடு' எனும் வரையறை ஏதோவொரு வகையில் தற்போதுவரையில் பொருந்தாத பெயராக உள்ளது. புதிய தரநிலைகள் மற்றும் பழையவற்றின் மறு திருத்தமும் முழுமையாக சட்டத்தின் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒத்ததன்மையுடையதாக ஏற்கப்பட்டு உறுதிப்படவில்லை. இதுவல்ல விஷயம். இருந்த போதிலும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் தரநிலைகளால் உள்ளிடப்பட்ட துறைகளின் அகன்ற பரப்பானது 'குறியீடு' பயன்படுத்த பொருத்தமானது என்பதைக் குறிப்பிடுகிறது.

கருத்தரங்குகள்[தொகு]

தீர்மானம் இயற்றல்[தொகு]

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் தீர்மானம் இயற்றல் அரசுகளை கையொப்பமிட அனுமதிக்கிறது. கருத்தரங்கு அதன் பிறகு சர்வதேச சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசுகள் அவ்வாறு செய்தப் பிறகு உடன்படிக்கையாக மாறுகிறது. ஆனால் அனைத்து சர்வதேச தொழிலாளர் நிறுவன தீர்மான இயற்றல்கள் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளாக எத்தனை அரசுகள் அவற்றில் கையொப்பமிட்டுள்ளன என்பதைக் கடந்து கருதப்படுகின்றன.

கையொப்பமிடல்[தொகு]

ஒரு கருத்தரங்கினை அமலாக்குவதென்பது ஒரு சட்டப் பொறுப்பாக அதன் ஷரத்துகளை அதனை ஏற்று கையப்பமிட்ட நாடுகளால் பொருத்தப்படுவதை உறுதியாக்குகிறது. ஒரு கருத்தரங்கினை கையொப்பமிட்டு ஏற்பது தன்னார்வம் கொண்டதாகும். உறுப்பினர் நாடுகளால் கையொப்பமிடப்படாத கருத்தரங்குகள் பரிந்துரைகளைப் போன்றதான சட்ட அமலாக்கங்களை கொண்டவையாகும். அரசுகள் தாங்கள் கையொப்பமிட்டு ஏற்ற கருத்தரங்குகளின் கடப்பாடுகளின் கீழ் ஒத்திருப்பதை விரிவாக விளித்து அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் சரவதேச தொழிலாலர் மாநாட்டின் தரநிலைகள் அணுகல் மீதான குழு சர்வதேச தொழிலாளர் தர நிலைகளின் எண்ணற்ற குற்றஞ்சாட்டப்பட்ட அத்துமீறல்களை ஆராய்கிறது. சமீப ஆண்டுகளில் அதிகமான கவனத்தைப் பெற்ற உறுப்பினர் நாடு மியான்மர்/பர்மாவாகும். அந்நாடானது திரும்பத் திரும்ப இராணுவத்தால் உண்மையாகச் செய்யப்பட்ட கட்டாய உழைப்பிலிருந்து அதன் குடிமக்களை பாதுகாக்கத் தவறியதற்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. [சான்று தேவை]

அடிப்படை கொள்கைகள் மற்றும் பணியில் உரிமைகள் பிரகடனம் 1998[தொகு]

1988 ஆம் ஆண்டின் 86 வது சர்வதேச தொழிலாளர் மாநாடு அடிப்படை கொள்கைகள் மற்றும் பணியில் உரிமைகள் மீதான பிரகடன த்தை ஏற்றது. பிரகடனமானது நான்கு 'கொள்கைகளை' முக்கியமானதாக அல்லது 'அடிப்படையாக' அடையாளம் கண்டது. சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் நிறுவனத்தின் உறுப்பினர்களாக நடைமுறையிலிருக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் நிறுவன கருத்தரங்குடன் தொடர்புடைய (கையொப்பமிடத்தக்க) கட்டுண்டிருக்கும் கொள்கைகளை நோக்கி முழு மதிப்புக்களுடன் செயல்படும் பொறுப்பு கொண்டவர்கள் ஆவர். அடிப்படை உரிமைகள் கூட்டிணையும் சுதந்திரம் மற்றும் கூட்டுப் பேரம், பாகுபாடு, கட்டாய உழைப்பு மற்றும் சிறார் தொழிலாளர் ஆகியவற்றின்பால் கவனம் கொண்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் நிறுவன கருத்தரங்குகளினால் உருவாக்கம் செய்யப்பட்ட கட்டுண்ட அடிப்படை கொள்கைகள் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அதிகபட்ச பெரும்பாலான உறுப்பினர் நாடுகளால் கையொப்பமிடப்பட்டுள்ளது. அது பிரகடனத்தின் கொள்கைகளின் சொற்கள் குறைந்தப்பட்ச 'அடிப்படையானவை' எனும் காரணத்தால் ஆகாததாகும்.[11]

முக்கிய அல்லது அடிப்படை தொழிலாளர் தரநிலைகளை நிறுவியதன் மீதான விமர்சனம்[தொகு]

அடிப்படையானவை என அடையாளம் காட்டப்படும் எட்டு கருத்தரங்குகளில் கொள்கைகளை விரைவாக பல நாடுகள் கையொப்பமிட்டிருந்தாலும், எண்ணற்ற கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தை தவறான பிளவை வேறுபட்டப் பல சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின் மத்தியில் உருவாக்கியதற்கு விமர்சித்தனர். அவற்றில் பல குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான மனித உரிமைகள் தலைப்புக்களை உட்கொண்டவை 1998 ஆம் ஆண்டு பிரகடனத்திலிருந்து நீக்கப்பட்டன. அதில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு, வேலை நேரங்கள் போன்றவையாகும். மேலும் குழப்பத்தைக் கூட்ட புதிய முக்கிய கருத்தரங்குகள் அடிக்கடி பிரத்யேகமாக மனித உரிமைகள் என குறிப்பிடப்படுகின்றன. அந்நிலையில் முன்பிருந்த அனைத்து சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் மனித உரிமைகளாகவே நோக்கப்பட்டன. நியூயார்க் பல்கலைகழகத்தின் ஜான் நார்டன் போமேராய் சட்டப் பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் மனித உரிமைகள் வாதம் என்றப் பெயரில் 'குறுகிவரும்' சர்வதேச தொழிலாளர் தரநிலைகளைப் பற்றி எழுதியுள்ளார். [சான்று தேவை]

இருப்பினும் கூட இந்த விமர்சனத்தையும் பத்தாண்டு காலம் அதன் வழியேற்பிற்கானதையும் பிரகடனத்தின் வரலாற்று சூழல்களின் பின்னணி வெளிச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். பல வருடங்களுக்கு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு சர்வதேச தொழிலாளர் கருத்தரங்குகள் மற்றும் பரிந்துரைகளின் அமைப்பை வகைப்படுத்தியுள்ளது. இந்த வகைப்படுத்தல் பெரியதாக-தொடர்ச்சியாகப் பெரியதாக முன்னுரிமை அடிப்படையை விட தொழில் நுட்ப இயல்புடனிருந்து அதாவது சில தரநிலைகள் இதரவற்றை விட அதிக முக்கியத்துவமுடையது என்பது போன்று இருக்கும். 1980 ஆம் ஆண்டுகளில் பொதுவுடைமை அமைப்புகள் வீழ்ச்சியுடன் முன்னுரிமை தரநிலைகளுக்கான தேவையின் பார்வை வளர்ந்தது. சில குழுக்களில் உலகமயமாக்கல் உண்மையிலேயே நிகழ்விலிருக்கும் தொழிலாளர் தரநிலைகளின் மீது அழுத்தத்தை இடும். மேலும் நிறுவனம் உண்மையில் தற்போது அதற்கான கட்டளையை ஏற்று இதயபூர்வமாக அவற்றை மேம்படுத்த வேண்டும். சில தரநிலைகளின் பகுதிகளில் ஒட்டவைப்பதான கையொப்பங்கள் இடப்படுகின்ற சூழ்நிலையில் இப்பார்வை மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான கையொப்பங்கள் உள்ளன. அதே போல பலசர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கருத்தரங்குகள் பேரளவிலான கையொப்பங்களை ஈர்க்கவில்லை. மேலும் இவற்றில் பலர் பெரும் முக்கியத்துவம் காண்கிற உடன்பாடுகள் இடம் பெற்றுள்ளன. அதிக முன்னுரிமையுடைய தரநிலைகள் எதுவாக இருக்கும் என்பது பற்றிய ஒத்தக் கருத்திற்கு வருவது, அவற்றை எவ்வாறு இயற்றுவது மேலும் என்ன வழிமுறைகளைக் கொண்டு அவற்றை அமலாக்குவது அல்லது மேம்படுத்துவது என்பது ச்ர்வதேச தொழிலாளர் நிறுவனத்திற்குள்ளேயே தொழிலாளர், முதலாளிகள் மற்றும் அரசு குழுக்கள் வேறுபட்ட நிலைகளை எடுப்பதால் கடினமான ஒன்றாகும்.

இக்காலகட்டத்தில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தின் சமூக பரிமாணங்களின் நிர்வாகக் குழுவின் பணியில் இப்பார்வைகள் விவாதிக்கப்பட்டன (பின்னர் உலகமயமாக்கலுக்கான சமூக பரிமாணங்களின் பணிக்குழு என்றழைக்கப்பட்டது). கணிசமான அளவில் வளரும் மற்றும் தொழில்மயமான நாடுகளின் மத்தியில் கூட பிளவுகள் இருந்தன. குறிப்பிடத்தக்க முதல் கணிசமான கருத்தொற்றுமை 1995 ஆம் ஆண்டின் மார்ச்சில் கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐநாவின் உலக சமூக உச்சி மாநாட்டில் பிரதிபலித்தது. சமூக வளர்ச்சி மீதான கோபன்ஹேகன் இறுதிப் பிரகடனத்தின் பகுதி சி பொறுப்புக்களின் 3(i) பொறுப்பு நான்கு துறை சார்ந்த பகுதிகளை 1998 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பிரகடனத்தின் உட்பகுதியில் மீண்டும் சேர்க்க அடையாளம் கண்டது. இந்தச் சூழலில்தான் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பிரகடனத்தின் மீதான விமர்சனத்தை ஆராய வேண்டும். விளைவாக தொடர்புடைய 8 சர்வதேச தொழிலாளர் நிறுவன கருத்தரங்குகளை உலகம் முழுதும் ஏறக்குறைய கையொப்பமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் வழக்கமான சர்வதேச கண்காணிப்பை அவற்றின் அமலாக்கத்தின் மீது செலுத்துதலைக் கொண்டு வருகிறது. முக்கியமாக எண்ணற்ற முக்கிய நாடுகள் பொருளாதார வலு மற்றும் கணிசமான அளவுடைய வேலைச் செய்யும் மக்கட்தொகைகளின் வரையின்படியானவை முக்கியமான கருத்தரங்குகளை கையொப்பமிடாததைத் தொடர்கின்றன. பிரகடத்தின் கீழான பொறுப்புகளின் வரையறைகளின் படி ஒரு முக்கிய கேள்வி அவர்களின் மீது பொருத்தப்படுகிறது. ஒருவேளை இதுவே உலகின் மிகப் பொதுவானதாக இருக்கலாம். அவற்றின் விளைவுகள் பெரியளவில் இருக்கும்.

பரிந்துரைகள்[தொகு]

பரிந்துரைகள் கருத்தரங்குகளை கட்டுப்படுத்தக்கூடிய வலுவற்றவை மேலும் உறுப்பினர் நாடுகளின் கையொப்பத்திற்கு பொருந்துவனவும் கிடையாது. பரிந்துரைகள் அதே நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அப்போது கருத்தரங்குகள் பின்னர் காணப்படுவதை கூடுதலாக அல்லது அதிக விரிவான அம்சங்களுடன் இணை சேர்க்கும். இதர விஷயங்களில் பரிந்துரைகள் தனியாக ஏற்கப்படலாம். மேலும் இடம் பெறாத விஷயங்களை விளிக்கலாம் அல்லது குறிப்பிட்ட எந்தவொரு கருத்தரங்கிலும் தொடர்புடையது அல்ல. [சான்று தேவை]

குழந்தைத் தொழிலாளர்[தொகு]

'சிறார் தொழில்' எனும் வரையறை பலமுறை சிறார்களிடமிருந்து குழந்தைப் பருவத்தை, அவர்களின் திறனை, கண்ணியத்தைப் பறிக்கும் வேலையை விவரிப்பதாகும். மேலும் அது உடல் நல மற்றும் மேம்பாட்டிற்கு தீமையானதாகும்.

அது பணியைப் பற்றிக் குறிப்பிடுவதானது:

 • சிந்தனையில், உடல் ரீதியில், சமூக ரீதியில் அல்லது நெறிமுறையில் ஆபத்தானது மற்றும் சிறார்களுக்கு தீமையானது; மற்றும்
 • அவர்களின் பள்ளிக் கல்வியில் குறுக்கிடுகிறது:
 • அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பினை மறுக்கிறது;
 • பள்ளியிலிருந்து அவர்கள் முன் கூட்டியே வெளியேற வற்புறுத்துகிறது; அல்லது
 • அவர்களை பள்ளிக்குச் செல்லுதலுடன் அதிகமாக நீண்ட மற்றும் கடும் பணியுடன் இணைத்துச் சேர்க்க முயற்சிக்க அவசியப்படுத்துகிறது.

அதன் உச்சபட்ச வடிவங்களில், சிறார் தொழில் சிறார்களை அடிமைப்படுத்துவதில் ஈடுபடுகிறது, அவர்களது குடும்பத்திலிருந்து பிரிக்கிறது, கடுமையான பாதுகாப்பற்ற மற்றும் நோய்களுக்கு ஆளாக்குகிறது மேலும்/அல்லது அவர்களை பெரும் நகரங்களின் தெருக்களில் இருத்திக் கொள்ள விடுகிறது - பலமுறை வெகு இளம் வயதிலேயே இருக்கும்படி செய்கிறது. குறிப்பிட்ட வடிவங்களான "வேலை" 'சிறார் தொழில்' என அழைக்கப்படலாம் அல்லது இன்றியும் இருக்கலாம், அது குழந்தையின் வயது, வகை மற்றும் வேலை செய்யப்படும் நேரம், அது செய்யப்படும் சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட நாடுகளால் மேற்கொள்ளப்படும் நோக்கங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். விடை நாட்டிற்கு நாடு மாறுபடும் அதேப்போல நாடுகளுக்குள்ளான துறைகளின் மத்தியிலும் மாறுபடும்.

சிறார்களால் செய்யப்படும் அனைத்து வேலைகளும் சிறார்த் தொழிலாக வகைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை, அவை நீக்கப்பட இலக்கு குறிக்கப்பட வேண்டும். சிறார்களின் அல்லது வளர் பருவத்தினரின் வேலையில் பங்கேற்பது அவர்களின் உடல் நலத்தில் மற்றும் தனி நபர் மேம்பாட்டினை பாதிக்காமல் அல்லது பள்ளி செலவதில் இடையூறு செய்யாதது பொதுவாக சில வகையில் சாதகமானதாக கருதப்படுகிறது. இது வீட்டில் பெற்றோர்க்கு உதவுதல், குடும்ப வணிகத்தில் உதவுதல் அல்லது பள்ளி நேரத்திற்கு வெளியே மற்றும் விடுமுறை நாட்களில் சிறு செலவுகளுக்கு பணம் ஈட்டுவது உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சிறார்களின் மேம்பாட்டிற்கும் அவர்களின் குடும்பத்தின் நலத்திற்கும் பங்களிக்கின்றன. அவை அவர்களுக்குத் திறனையும் அனுபவத்தையும் கொடுக்கின்றன. மேலும் அவர்களது முதிர் வயது வாழ்வில் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களாக தயார்படுத்திக் கொள்ள உதவுகிறது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சிறார் தொழிலாளருக்கான எதிர்வினை[தொகு]

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சிறார் உழைப்பு ஒழிப்பிற்கான சர்வதேச திட்டம் (IPEC) 1992 ஆம் ஆண்டு சிறார் உழைப்பை முற்போக்காக நீக்கும் ஒட்டுமொத்த குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது. சிறார் உழைப்பை எதிர்த்துப் போராடுவதற்கான உலகம் தழுவிய அமைப்பொன்றை மேம்படுத்துவதன் மூலமும் பிரச்சினையை நாட நாடுகளின் தகுதியை வலுப்படுத்துவதன் மூலமும் அக்குறிக்கோளை அடையலாம். IPEC தற்போது 88 நாடுகளில் இயக்கத்தைக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் தொழில் நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டங்களுடன் வருடாந்திர செலவாக US$74 மில்லியனை கடந்து அடைந்தது. அதன் வகைகளில் உலகம் முழுவதற்குமான பெரிய திட்டம் மேலும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் ஒரே பெரிய செயல்பாட்டு திட்டமும் ஆகும்.

IPEC கூட்டாளிகளின் எண்ணிக்கையும் வரிசையும் வருடங்கள் கடந்து விரிவடைந்தது தற்போது முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் நிறுவனங்கள், இதர சர்வதேச அரசு முகமைகள், தனியார் வர்த்தகங்கள், சமூக-அடிப்படை நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகம், நாடாளுமண்ற உறுப்பினர்கள், நீதித்துறை, பல்கலைகழகங்கள், மதக் குழுக்கள் மற்றும் இயல்பாகவே சிறார் மற்றும் அவரது குடும்பங்களை உள்ளடக்கியுள்ளது.

IPEC இன் சிறார் தொழில் ஒழிப்பு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கண்ணிய வேலை செயற்பட்டியலில் ஒரு முக்கிய முகமாகும்.[12] சிறார் தொழில் குழந்தைகளை திறன் பெறுவது மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வியை பெறுவதிலிருந்து தடுக்கிறது, அது வறுமையைத் தூண்டி போட்டியிடும் திறனில், உற்பத்தித் திறன் மற்றும் சாத்தியமான வருமானம் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தி தேசியப் பொருளாதாரங்களைப் பாதிக்கிறது. சிறார் உழைப்பிலிருந்து குழந்தைகளை மறுமீட்புச் செய்து, அவர்களுக்கு கல்வி கொடுத்து மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை அளித்து மூத்தவர்களுக்கு கண்ணியமான வேலையை உருவாக்குவதில் நேரடியாக பங்களிக்கிறது.

கட்டாய உழைப்பு[தொகு]

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் அதன் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக கட்டாய உழைப்பிற்கு எதிரான போரை எப்போதும் கருதிவருகிறது. போர்களுக்கிடையிலான வருடங்களின் போது, விஷயம் முக்கியமாக காலனியாதிக்க போக்காக கருதப்பட்டது. மேலும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கவனம் குறைந்த பட்ச தரநிலைகளை நிறுவி காலனிய மக்களை பொருளாதார நலன்களால் செய்யப்படும் தவறான பயன்பாடுகளிலிருந்து பாதுகாப்பதாகும். 1945 ஆம் ஆண்டிற்குப் பிறகு நோக்கமானது ஒரேமாதிரியான மற்றும் உலகம் முழுமைக்குமான தரநிலையை அமைப்பதாகும். அது இரண்டாம் உலகப் போரின் போது பெறப்பட்ட கட்டாய உழைப்பிற்கான அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களின் அமைப்பினாலான உயர் விழிப்புணர்வினால் தீர்மானிக்கப்பட்டதாகும். ஆனால் விவாதங்கள் பனிப் போராலும் காலனிய சக்திகளின் தவிர்ப்பு கோரிக்கைகளாலும் தடுக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து தொழிலாலர் தரநிலைகளை மனித உரிமைகளின் கூறாக அறிவிப்பது பின் காலனிய அரசுகளால் பலவீனப்படுத்தப்பட்டது. அதற்குக் தொழிலாளர்களின் உழைப்பின் மீது அசாதரணமான ஆதிக்கம்அவர்களின் நெருக்காடியான அரசுகள் எனும் பாத்திரத்தால் விரைவான பொருளாதார மேம்பாட்டை முன்னெடுக்கும் தேவையை முன்னிட்டதாகக் கூறப்பட்டது.[13]

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சரவதேச தொழிலாளர் மாநாடு ஒரு பிரகடனத்தை பணியிடத்தில் அடிப்படை கொள்கைகள் உரிமைகள் மற்றும் பின் தொடரலை ஏற்றது. மேலும் அதன் உறுப்பினர் நாடுகளை பொறுப்பாக, கூட்டுரிமை சுதந்திரம் மற்றும் கூட்டு பேர உரிமைகளை மதிக்க, மேம்படுத்த மற்றும் உண்மையாக்க, கட்டாய மற்றும் வற்புறுத்தப்பட்ட உழைப்பின் அனைத்து வடிவங்களையும் நீக்க, சிறார் தொழிலை திறம்பட ஒழிக்க மற்றும் வேலை மற்றும் தொழிலில் முறையே பாகுபாட்டினை நீக்கக் கொண்டது.

பிரகடனத்தின் ஏற்புடன் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் பிரகடனத்தை மேம்படுத்தும் கவனக் குவிப்பு திட்டத்தை உருவாக்கியது. அது பிரகடனத்துடன் கூடி இணைந்த அறிக்கை வழிமுறைகள் மறும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகும். மேலும் அது விழிப்புணர்வு எழுச்சியை, வாதிடல் மற்றும் அறிவு இயக்கங்களை மேற்கொள்கிறது.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டாய உழைப்பின் மீதான கவனக் குவிப்பு திட்டத்தின் முதல் உலக அறிக்கையின் வெளியீட்டிற்கும் பிறகு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒரு கட்டாய உழைப்பு தடுப்புப் போர் சிறப்பு நடவடிக்கைக் திட்டத்தை (SAP-FL) உருவாக்கியது. அது 1998 ஆம் ஆண்டின் பணியிடத்தில் அடிப்படை கொள்கைகள் மற்றும் உரிமைகள் பிரகடனம் மற்றும் பின் தொடரலை மேம்படுத்தும் அகன்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

SAP-FL அதன் துவக்கத்திலிருந்து கட்டாய உழைப்பின் பல்வேறு வடிவங்களின் மீதான அதிகரித்து வரும் உலக விழிப்புணர்வில் கவனம் கொண்டது. மேலும் அதன் வெளிப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகலை திரட்டுவதிலும் கவனம்கொண்டது. பல கருத்தியல் ரீதியிலான மற்றும் குறிப்பிட்ட நாடுகளின் ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகள் அதிலிருந்து கட்டாய உழைப்பு கொத்தடிமைத் தொழிலாக, ஆட் கடத்தல், கட்டாய வீட்டு வேலை, பண்ணையம் மற்றும் கட்டாய சிறை உழைப்பு ஆகிய மாறுபட்ட அம்சங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

எச் ஐ வி/எய்ட்ஸ்[தொகு]

ஐ.எல்.ஓ.எயிட்ஸ் என்றப் பெயரின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கோட் ஆஃப் பிராக்டீஸ் ஆன் எச் ஐ வி/எய்ட்ஸ் அண்ட் தி வோர்ல்ட் ஆஃப் வொர்க் கை ஆவணமாக 'கொள்கை மேம்பாடு மற்றும் நடைமுறை வழிகாட்டல்களை நிறுவனங்கள், சமூகம் மற்றும் தேசிய மட்டத்திலான திட்டங்களுக்கு கொள்கைகளை கொடுத்தது. அதில் உள்ளடங்கியவை பின்வருமாறு:[14]

 • எச் ஐ வியை தடுப்பது
 • எய்ட்ஸ்சின் பணி உலகின் மீதான பாதிப்பை குறைக்க மற்றும் நிர்வகிக்க
 • எச் ஐ வி/எய்ட்சினால் பாதிக்கப்பட்ட நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு கவனம் மற்றும் ஆதரவு
 • உண்மையான அல்லது அனுமானிக்கப்பட்ட எச் ஐ வி அந்தஸ்தின் அடிப்படையிலான அடையாளப்படுத்தல் மற்றும் பாகுபாட்டை நீக்குதல்.

பூர்வ குடிமக்கள்[தொகு]

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கருத்தரங்கு 169 சுதந்திர நாடுகளிலுள்ள பூர்வகுடிகள் மற்றும் மலையக மக்களின் மீது கவனம் கொண்டுள்ளது. அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் பொது மாநாட்டில் அதன் 76 வது அமர்வில் ஏற்கப்பட்டது. அதன் அமலாக்கம் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதியன்று நடந்தது.[15][16]

உறுப்பினராதல்[தொகு]

உறுப்பினராவது 1945 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று நிறுவனத்தின் புதிய நிர்வாக அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த போது இருந்த அனைத்து உறுப்பினர்கள் உட்பட நாடுகள்-அரசுகள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்டது. அதோடு ஐக்கிய நாட்டுச் சபையின் மூல உறுப்பினர் மற்றும் அதன் பிறகு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு அரசும் கூட இணையலாம். இதர அரசுகள் எவ்வொரு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் பொது மாநாட்டின் மிகப் பெரும்பான்மையான வாக்குகளாலும் அனுமதிக்கப்படலாம். ஐ.எல்.ஓ நிர்வாக அமைப்புச் சட்டம்[தொடர்பிழந்த இணைப்பு]

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 182 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்குறிப்புகள்[தொகு]

 1. "The Nobel Peace Prize 1969". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2006-07-05.
 2. வாண்டேல், (2005)
 3. ரீனர் டோஸ்டோஃப்," தி இண்டர்நேஷனல் டிரேட்-யூனியன் மூவ்மெண்ட் அண்ட் தி பவுண்டிங் ஆஃப் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன் 2005 50(3): 399-433
 4. ஹைம்சன், லியோபோல்ட் எச். அண்ட் சபேலி, குய்லியோ. ஸ்டிரைக்ஸ், சோஷியல் கான்பிளிக்ட், அண்ட் தி ஃபர்ஸ்ட் வெர்ல்ட் வார்: அன் இண்டர்நேஷனல் பெர்ஸ்பெக்டிவ். மிலன்: ஃபோண்டாசியோன் ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-07-99047-4.
 5. ஷாபிரோ, ஸ்டான்லி. "தி பாஸேஜ் ஆஃப் பவர்: லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்." ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி அமெரிக்கன் பிலாசபிகள் சொசைட்டி. 120:6 (29 டிசம்பர் 1976).
 6. அயுசாவா, ஐவோ பிரெடிரிக். இண்டர்நேஷனல் லேபர் லெஜிஸ்லேஷன். கிளார்க்,என்.ஜே.: லாபுக் எக்ஸ்சேஞ்ச், 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58477-461-4.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 ஃபோனர், பிலிப் எஸ். ஹிஸ்டரி ஆஃப் தி லேபர் மூவ்மெண்ட் இன் தி யுனைடெட் ஸ்டேட்ஸ். தொகு. 7: லேபர் அண்ட் வோர்ல்ச்ட் வார் I, 1914-1918. நியூ யார்க்: இண்டர் நேஷனல் பப்ளிஷர்ஸ், 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7178-0638-3.
 8. ilo.org
 9. Cornell.edu
 10. See Article 7 of the ILO's constitution at ilo.org பரணிடப்பட்டது 2009-12-25 at the Portuguese Web Archive
 11. See the list of ratifications at ilo.org
 12. "ILo.org". Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
 13. டேனியல் ரோஜர் மௌல்," தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன் அண்ட் தி ஸ்ட்ரக்குள் அகைன்ஸ்ட் ஃபோர்ஸ்ட் ஃப்ரம் 1919 டு தி பிரசண்ட்லேபர் ஹிஸ்டரி 2007 48(4): 477-500
 14. "The ILO Code of Practice on HIV/AIDS and the world of work". ILOAIDS. Archived from the original on 2006-08-11. பார்க்கப்பட்ட நாள் 2006-07-05.
 15. UNHCHR.ch
 16. "ilo.org". Archived from the original on 2011-10-31. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.

அதிகாரபூர்வ ஐ எல் ஓ வலைத்தளத்திற்கான இணைப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]