சட்டப்படி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெ ஜூரே (de jure, அல்லது de iure), தமிழாக்கமாக சட்டப்படி என்ற சட்டம் சார் சொல் இலத்தீன் மொழியின் வேரிலிருந்து பெறப்பட்டதாகும்.[1][2] இலத்தீனில் டெ என்பது தொடர்புடையது, குறித்தானது எனவும் ஜூரே என்பது சட்டம் என்பதையும் குறிக்கிறது. இதனை வேறுபாடாக நடைமுறைப்படி (de facto) என்ற சட்டவழக்குக்கிற்கு மாறாக காணலாம். அரசியல் அல்லது சட்டபூர்வ நிலைகளை விளக்கும்போது இந்த இரு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சட்ட கலைச்சொற்களில், டெ ஜூரே என்பது "சட்டம் குறித்தானது" என்பதற்கும் பயனாகிறது. ஓர் நடைமுறையை, காட்டாக வாய்மொழி உறுதிகளை மதிப்பது என்பதை சட்டம் எதுவும் வரையறுக்காவிடினும், மக்கள் கடைபிடிக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

அப்காசியா ... ஒரு சட்டப்படி ஜோர்ஜியாவிற்குள் தன்னாட்சியுடைய குடியரசு, ஆனால் நடைமுறைப்படி ஜோர்ஜியாவிடமிருந்து தனியானது

இதன் பொருள் சட்டத்தின் பார்வையில் அப்காசியா நிலப்பகுதி ஜோர்ஜியா நாட்டின் பகுதியாகும்; ஆனால் உண்மையில் அது தன்னாட்சி பெற்றது.

பில் கிளின்டனின் சட்டப்படியான பெயர் வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன். இதுவே அலுவல்முறை ஆவணங்களில் புழங்கும் பெயராகும். இவரது நடைமுறைப்படியான பெயர் அவரை அனைவரும் அழைக்கும் பில் கிளின்டனாகும்.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டப்படி&oldid=3552686" இருந்து மீள்விக்கப்பட்டது