மக்கள்
Jump to navigation
Jump to search
மக்கள் என்ற தமிழ்ச் சொல்லிற்கு மானுடவினம், ஐம்பொறியுணர்வோடு மனவறிவு உடைய உயிரினம் என்று பொருள் கொள்ளலாம்[1]. இவர்கள் குறிப்பிட்ட பண்புகளுடன் குழுப்படுத்தப்படலாம் (காட்டாக, தமிழ் மக்கள்) அல்லது எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். நபர்கள் என்ற சொல் நபர்களின் தொகுதியைக் குறிக்கிறது. மக்களும் தனிநபர் தொகுதியைக் குறித்தாலும் இங்கு தனிநபர் பண்புகள் ஒருங்கிணைந்து ஒரு குழுப் பண்பு குறிக்கப்படுகிறது. காட்டாக காணாமல் போன நபர்கள் என்ற சொல்லில் எண்ணக்கூடியத் தன்மையைக் காணலாம். காணமல் போன மக்கள் என்ற சொல்லில் மானுடத்தில் இழக்கப்பட்ட ஏதாவதொரு கூறினைக் குறிக்கிறோம்.
மக்கள் என்ற சொல் மகன்/மகள் ஆகியோரையும் குறிக்கும் பலபொருள் ஒருமொழியாகும்.
குறிப்புகள்[தொகு]
![]() |
விக்சனரியில் மக்கள் என்னும் சொல்லைப் பார்க்கவும். |