புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2006ஆம் ஆண்டின் இறுதியில் உங்கெங்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள். Source: REN21[1]
புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்
காற்றாலை
உயிரி எரிபொருள்
உயிர்த்திரள்
புவிவெப்பம்
நீர்மின்சாரம்
சூரிய ஆற்றல்
நீர்ப்பெருக்கு
ஆற்றல்

அலை ஆற்றல்
காற்றுத் திறன்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது.

2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களான புவிவெப்பம், காற்று, சூரியஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 0.8% ஆகக் காணப்பட்டது. தொழில்நுட்ப அடிப்படையில் இவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலின் அளவு மிகப் பெரியது.

தொடர்ச்சியாக ஆற்றலைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், பார்வைக்கு அழகாக இல்லாத தன்மை குறித்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனாலும் பலவகையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வடிவங்களுக்குச் சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதிலும் சுமார் 100 GW உற்பத்தி அளவு கொண்ட காற்றுவலு, ஆண்டுக்கு 30% என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது ஐரோப்பிய நாடுகளிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பரவலாகப் பயன்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. உலக நிகழ்நிலை அறிக்கை 2007 (PDF).