போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

போக்குவரத்து என்ற சொல் ஆட்களும், பொருட்களும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்வதைக் குறிக்கின்றது ஆகும். போக்குவரத்துத் துறை பல்வேறு அம்சங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. இவற்றைப் பொதுவாக மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். அவை, உள்ளகக் கட்டமைப்பு, வாகனங்கள், மற்றும் செயற்பாடு என்பனவாம்.

உள்ளகக் கட்டமைப்பு, வீதிகள், தொடர்வண்டிப் பாதைகள், விமானப் போக்குவரத்து வழிகள், கால்வாய்கள், குழாய் அமைப்புக்கள் போன்றவற்றுடன், விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், துறைமுகங்கள் என்பவற்றை உள்ளடக்கும். மோட்டார் வண்டிகள், தொடர்வண்டிகள், விமானங்கள் போன்றன வாகனப் பிரிவுக்குள் அடங்கும். போக்குவரத்துச் சைகைகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, இவற்றுக்கான நிதி தொடர்பான கொள்கைகள் முதலியன செயற்பாடு பிரிவைச் சேர்ந்தவை.

போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, பொதுவாகக் குடிசார் பொறியியலாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்களுடைய பணியாகும். வாகனங்களின் உருவாக்கம், இயந்திரப் பொறியியலினுள் அடங்கும். வெவ்வேறுவகை வாகனங்கள் தொடர்பில், nautical பொறியியல், விமானப் பொறியியல் போன்ற சிறப்புப் பிரிவுகளும் உண்டு. செயற்பாட்டுக்கான பொறுப்பு, செயற்பாட்டு ஆய்வாளர்களையும், முறைமைப் பொறியாளர்களையும் (systems engineering) சாரும்.

போக்குவரத்து விதங்கள்[தொகு]

தமிழ்நாட்டின் சாலையொன்றில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடை

இது வலையமைப்பு (network), வாகனங்கள், செயற்பாடு என்பன கலந்த ஒன்றாகும். இதுநடத்தல், மோட்டார் வண்டிகள்/ நெடுஞ்சாலை முறைமை, தொடர்வண்டிப் பாதகள், கடல்வழிப் போக்குவரத்து (கப்பல்கள், நீர்வழிகள், மற்றும்துறைமுகங்கள்), மற்றும் நவீன விமானப் போக்குவரத்து (ஆகாயவிமானங்கள், விமான நிலையங்கள், மற்றும் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாடு).

மனித சக்தி மூலம்[தொகு]

மனித சக்தி மூலமான போக்குவரத்து நிலையான போக்குவரத்து வகையொன்றாகும். இது மனிதனது தசையின் சக்தி மூலம் மனிதர்களையோ அல்லது உற்பத்திப் பொருட்களையோ போக்குவரத்துச் செய்யும் ஒரு வழி அல்லது முறை ஆகும். நடத்தல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்றவற்றின் ஒரு வடிவமாகவே இது காணப்படுகின்றது. புதிய தொழினுட்பமானது அறிமுகப்படுத்திய இயந்திரங்களால் மனித சக்தி வழிமுறைப் போக்குவரத்த் முறையை மேலும் அதிகரித்தது. மனித சக்திப் போக்குவரத்து பிரபலமானதாகவே நிலைத்திருக்கிறது, ஏனெனில் இவ்வழி பணச்சேமிப்பில் அல்லது சிக்கனத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. அத்துடன் பொழுதுபோக்காகவும், சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தாததுமான, உடலுக்கு நல்ல உடற்பயிற்சியைக் கொடுப்பதாகவும் காணப்படுகின்றது. இவ்வகையான மனித சக்திப் போக்குவரத்து முறை வளர்ச்சி குறைந்த பிரதேசங்களிலும் மற்றும் அணுக முடியாத பிரதேசங்களிலும் இவ்வகையான மனித சக்திப் போக்குவரத்து முறை மட்டுமே காணப்படுகின்றன.

இருப்பினும் உள்கட்டமைப்பு ஒன்று இல்லாமல் மனிதர்களால் நடக்க முடியும். போக்குவரத்து வசதிகளை வீதிகள் மேம்படுத்துகின்றன. எப்போதெனில், மனித வலுவைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் போதாகும். இதற்கு சிறந்த உதாரணம் துவிச்சக்கரவண்டி. இவ்வாறான மனித வலுவுடனான வாகனங்கள் கடினமான போக்குவரத்துப் பிரதேசங்களிலும் (நீர், பனி) செலுத்தப்படக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

நீர் மூலம்[தொகு]

நீர் வழிப்போக்குவரத்து என்பது நீரில் அதாவது கடல், சமுத்திரம், ஏரி, வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளின் மேலாக செல்லக்கூடிய படகு, கப்பல்கள், பாய்மர படகுகள் போன்றவற்றைப்பயன்படுத்தி மனிதர்களை அல்லது பொருட்களை நகர்த்துவது ஆகும். நீருர்திகளுக்கு அதவது நீரில் செல்லக்கூடிய வண்டிகளுக்கு நீரில் மிதக்கும் தன்மை மிகவும் முக்கியமானதாகும்.

19 ஆம் நூற்றாண்டிலே முதலாவது நீராவிக் கப்பலானது உருவாக்கப்பட்டது. இதை அசைப்பதற்கு ஓட்டு கருவியும், ஓட்டுவதற்கு நீராவி இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. நீராவியானது, மரம் அல்லது நிலக்கரி போன்றவற்றை கொதி கலன் ஒன்றினுள் இடுவதனூடாக உற்பத்தி செய்யப்பட்டது. நவீன கப்பல்கள் உள் எரிபொருள் இயந்திரம் மூலம் சற்று சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய வகையான பங்கர் எண்ணெய் என்பதைப் பயன்படுத்தி இயந்திரத்தை இயக்கு கின்றனர். நீர்மூழ்கிக்கப்பல் போன்ற கப்பல்கள் அணு ஆற்றலைப் பயன்படுத்தி நீராவியைப் பிறப்பிக்கின்றன.

வீதிகள்[தொகு]

இரண்டு அல்லது அதற்கும் மேலான இடங்களை இணைப்பதுமான, இலகுவாக அடையாளங் காணக்கூடியதுமான வழி அல்லது பாதையே வீதிகள் ஆகும்.[1] பொதுவான வீதிகள் சீரானவையாகவும், ஒரே தளமானவையாகவும், இலகுவாகப் பயணிக்ககூடியனவாகவும் காணப்படுகின்றன.[2] நகர்ப்புறப் பகுதிகளில் (urban areas) வீதிகள் நகரங்களையோ கிராமங்களையோ கடக்கத்தான் செய்யும், இவ்வாறு கடப்பவையை தெருக்கள் (streets) என அழைக்கின்றனர்.[3]

மிகப் போதுவாகப் பயன்படுத்தப்படும் வீதிப்போக்குவரத்து வண்டி மோட்டார் வாகனங்கள் ஆகும். பேருந்துகள், சரக்கு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள், பாதசாரிகள் போன்றவையும் இதனுள்ளேயே அடங்குகின்றன. 2002 ஆம் ஆண்டளீலே உலகம் பூராகவும் 590 மில்லியன் மோட்டார் வாகனங்கள் இருந்துள்ளன.

கூறுகள்[தொகு]

வண்டிகள்[தொகு]

வண்டி அல்லது வாகனம் என்பது மனிதனை அல்லது பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றைய இடத்திற்கு எடுதுச்செல்ல உதவும் ஒரு உயிரற்ற பொருளாகும். உள்கட்டமைப்பு போலல்லாமல், சரக்குப் பொருட்களையும் அதில் சாஅரி செய்பவர்களையும் கூட அது எடுத்துச் செல்லக்கூடியது. இதற்கு கேபிளினால் இழுக்கவேண்டிய தேவையோ தசை வலுவோ தேவையில்லை. இது தனது சொந்த உந்து விசை மூலமே இயங்கக்கூடியது. இந்நுந்து விசை நீராவி இயந்திரம், மின்சார மோட்டார், உள்ளெரி இயந்திரம், ஜெட் இயந்திரம், ரொக்கட் எயந்திரம் போன்றவற்றல் பிறப்பிக்கப்படுகின்றது. வாகனங்களுக்கு இவ்வாறான ஒரு தொகுதி தேவைப்படுகின்றது; அதாவது சக்தி அல்லது ஆற்றலை அசைவிற்கு மாற்றக்காடிய ஒரு தொகுதி தேவை, இவ்வகையான செயலை பொதுவாக சில்லுகளும், சுழல்கருவிகளும் மற்றும் அழுத்தமுமே செய்கின்றன.

வாகனங்கள் பொதுவாக சாரதிகளாலேயே ஓட்டப்படுகின்றன. பயணிகள் போக்குவரத்திற்கான வாகனங்களில் கட்டாயமாக பயணிகளுக்கான ஆசனங்கள் இருக்க வேண்டும். இலகு வண்டிகளான மோட்டார் வண்டிகள், துவிச்சக்கர வண்டிகள், இலகு வானூர்திகள் போன்றவற்றில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வகைகள்[தொகு]

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Major Roads of the United States". United States Department of the Interior (2006-03-13). பார்த்த நாள் 24 March 2007.
  2. "Road Infrastructure Strategic Framework for South Africa". National Department of Transport (South Africa). பார்த்த நாள் 24 March 2007.
  3. "What is the difference between a road and a street?". Word FAQ. Lexico Publishing Group (2007). பார்த்த நாள் 24 March 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்குவரத்து&oldid=2212419" இருந்து மீள்விக்கப்பட்டது