பேச்சு:புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Renewable energy என்னும் சொல்லை நேரடியாக மொழிபெயர்த்தால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்றுதான் சொல்ல வேண்டும், ஆனால் ஆற்றலைப் புதுப்பிக்க இயலாது. வற்றா ஆற்றல் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். அல்லது வற்றா ஆற்றல்வாய் எனலாம். ஆற்றல்வாய் (source of energy) என்னும் கருத்தை முன்வைத்தால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்வாய் என்னும் சொல்லாட்சி சரியாக அமையும் என்று நினைக்கிறேன்.--செல்வா 15:27, 19 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரியாகத்தான் தெரிகிறது. ஆனால் கட்டுரையில் நாங்கள் மூலங்களையன்றி அவற்றிலிருந்து கிடைக்கும் ஆற்றல் பற்றியே பேசுவதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்வாய் என்பதிலும் வற்றா ஆற்றல் பொருந்தும். ஆனால் ஆற்றலை விட ஆற்றல் மூலங்கள் வற்றுவதில்லை என்பது தான் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அப்படியானால் வற்றாமூல ஆற்றல் என்றால் சரியாக இருக்குமா? மயூரநாதன் 16:39, 19 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
பேச்சு:நீர் மின் ஆற்றல் என்னும் பக்கத்தைப் பார்க்கவும். புதுறும் ஆற்றல்வாய் என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். --செல்வா 16:30, 13 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]