தி கார்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தி கார்டியன் (The Guardian) என்பது இங்கிலாந்தில் வெளியாகும் நாளேடு. இது 1959 ஆம் ஆண்டு வரை, மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இதன் தற்போதைய ஆசிரியர், ஆலன் ரஸ்பிரிட்சர் ஆவார். தி அப்சர்வர், தி கார்டியன் வீக்லீ ஆகியன இதே நிறுவனத்தாரால் வெளியிடப்படும் ஏடுகள். இங்கிலாந்தில் மட்டுமின்றி, உலகளவில் முன்னணி நாளேடுகளில் ஒன்றாக, அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

தி கார்டியன் ஒரு இடதுசாரி தினசரி. 1821ல் தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 1959 வரை அப்பெயரிலேயே விளங்கியது. ஆரம்பத்தில் உள்ளுரில் மட்டும் இருந்தது. பின்னாளில் ஒரு தேசிய செய்தித்தாளாக மாறி இன்று உலகளாவிய ஊடகமாக இணையத்திலும் தொடர்புடையதாக மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. அதற்கு இரண்டு கணினி சார்ந்த கிளைகள் கார்டியன் ஆஸ்திரேலியா மற்றும் கார்டியன் US என்ற பெயரில்  ஐக்கிய இராச்சியத்திற்கு  வெளியே செயல்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கார்டியன்&oldid=2297549" இருந்து மீள்விக்கப்பட்டது