தி அப்சர்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி அப்சர்வர் என்பது இங்கிலாந்தில், ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் நாளேடு. இதை தி கார்டியன் குழுமம் வெளியிடுகிறது. இது 222 வருடங்களாக வெளியாகிறது. இதன் ஆசிரியர், ஜான் முல்கோலண்டு ஆவார். இதுவே உலகளவில் முதன்முதலாக, ஞாயிற்றுக் கிழமை வெளியான நாளேடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழுக்கும், ஆசிரியர்களுக்கும் இங்கிலாந்து இதழியல் துறை விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கூடுதல் தகவல்[தொகு]

  1. 1990ம் ஆண்டு பர்சாத் பசோப்ட் ஈராக்கில் உளவாளி என்ற குற்றச்சாட்டால் தூக்கில் போடப்பட்டார், ஆனால் பின்னர் அது உண்மை அல்ல என ஈராக் ஒப்புக்கொண்டது.
  2. 2005ல் இணையத்திற்குள் வந்தது.
  3. 2007ம் ஆண்டில் 1971 முதல் 2003 வரையான இதழ்கள் இணையத்தில் கிடைக்கும்.
  4. 2008ம் ஆண்டு முகமது நபி பற்றிய கார்டூனால் எகிப்தில் தடை.[1]

2018இல் டேப்ளாய்ட் வடிவம்[தொகு]

சூன் 2017இல் கார்டியன் ஊடகப் பிரிவு கார்டியன் இதழும், இவ்விதழும் சனவரி 2018இல் மறுபடியும் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறவுள்ளதாகத் தெரிவித்தது. [2] 2018 சனவரி 21 முதல் டேப்ளாய்ட் வடிவத்தில் வெளிவருகிறது. [3]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அப்சர்வர்&oldid=2474778" இருந்து மீள்விக்கப்பட்டது