உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசுலாந்து

ஆள்கூறுகள்: 65°N 18°W / 65°N 18°W / 65; -18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசுலாந்து
Iceland
கொடி of ஐசுலாந்து
கொடி
சின்னம் of ஐசுலாந்து
சின்னம்
நாட்டுப்பண்: Ó Guð vors lands
"எங்கள் நிலத்தின் கடவுளே"
ஐசுலாந்தின் அமைவிடம் (கடும் பச்சை)
தலைநகரம்ரெய்க்யவிக்
64°08′N 21°56′W / 64.133°N 21.933°W / 64.133; -21.933
பெரிய நகர்தலைநகர்
அதிகாரபூர்வ மொழிஐசுலாந்து
இனக் குழுகள்
(2021)[a][1]
சமயம்
(2022)[3]
    • 72.4% கிறித்தவம்
      • 60.9% ஐசுலாந்துத் திருச்சபை (அதிகாரபூர்வம்)[2]
      • 11.5% ஏனைய கிறித்தவர்
  • 25.2% சமயமில்லாதோர்
  • 1.5% ஆசாத்ரு சங்கம்
  • 0.9% ஏனையோர்
மக்கள்ஐசுலாந்தர்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு
• அரசுத்தலைவர்
அலா தோமசுதோட்டிர்
• பிரதமர்
கிறிசுதுருன் புரொசுட்டாடோட்டிர்
சட்டமன்றம்ஆல்திங்
தோற்றம்
• குடியேற்றம்
9-ஆம் நூற்றாண்டு
• பொதுநலவாயம்
930–1262
• நோர்வேயுடன் ஒன்றியம்
1262–1397
• கல்மார் ஒன்றியம்
1397–1523
• டென்மார்க்கு-நோர்வே
1523–1814
• டென்மார்க்கிற்கு வழங்கப்படல்
14 சனவரி 1814
• அரசியலமைப்பும் வரையறுக்கப்பட்ட தன்னாட்சியும்
5 சனவரி 1874
• மேலதிக தன்னாட்சி
1 பெப்ரவரி 1904
• டென்மார்க்குடனான இறையாண்மையும் தனிப்பட்ட ஒன்றியமும்
1 திசம்பர் 1918
• குடியரசு
17 சூன் 1944
பரப்பு
• மொத்தம்
103,125[4] km2 (39,817 sq mi) (106-ஆவது)
• நீர் (%)
2.07 (2015)[5]
மக்கள் தொகை
• 2025 கணக்கெடுப்பு
Neutral increase 393,160[6] (172-ஆவது)
• அடர்த்தி
3.78/km2 (9.8/sq mi) (235-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $31.076 பில்.[7] (153-ஆவது)
• தலைவிகிதம்
Increase $81,220[7] (14-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $35.310 பில்.[7] (105-ஆவது)
• தலைவிகிதம்
Increase $90,280[7] (5-ஆவது)
ஜினி (2018)positive decrease 23.2[8]
தாழ்
மமேசு (2023)Increase 0.972[9]
அதியுயர் · 1st
நாணயம்ஐஸ்லாந்திய குரோனா (ISK)
நேர வலயம்ஒ.அ.நே±00:00 (GMT/WET)
திகதி அமைப்புநா.மா.ஆ
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+354
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIS
இணையக் குறி.is

ஐசுலாந்து (Iceland, பலுக்கல்: [ˈistlant] , ஈஸ்ட்லாந்து) என்பது ஒரு நோர்டிக்கு தீவு நாடு ஆகும். இது ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் வட அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கும் இடையில், ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள நடு அத்திலாந்திக் முகட்டில் அமைந்துள்ளது. இது கலாச்சார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, பிராந்தியத்தின் நேர்-மேற்குத் திசையிலும், மக்கள்தொகை குறைவாகவும் உள்ள நாடாகும்.[10] இதன் தலைநகரும், மிகப்பெரியதுமான நகரம் ரெய்க்யவிக், இங்கு நாட்டின் கிட்டத்தட்ட 390,000 மக்கள்தொகையில் 36% மக்கள் வாழ்கின்றனர் (தனித்தனி நகராட்சிகளாகவுள்ள அருகிலுள்ள நகரங்கள்/புறநகர்ப் பகுதிகளைத் தவிர). நாட்டின் அதிகாரபூர்வமான மொழி ஈசுலாந்தியம் ஆகும். ஐசுலாந்து தட்டுப் புவிப்பொறைத் தகடுகளுக்கு இடையில் ஒரு பிளவில் உள்ளது, இதன் புவியியல் செயல்பாட்டில் பீறிடும் வெந்நீரூற்றுகளும், எரிமலை வெடிப்புகளும் அடங்கும்.[11][12] உட்புறம் மணல், எரிமலை வயல்கள், மலைகள், பனியாறுகள் போன்றவற்றைக் கொண்ட எரிமலை மேட்டுநிலத்தைக் கொண்டுள்ளது, அத்துடன் பல பனியாறுகள் தாழ்நிலங்கள் வழியாக கடலுக்குச் செல்கின்றன. ஐசுலாந்து வளைகுடா நீரோடையால் வெப்பமடைகிறது, இது ஆர்க்டிக் வட்டத்திற்கு சற்று தெற்கே ஒரு நிலநேர்க்கோட்டில் இருந்தாலும், மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இதன் நிலநேர்க்கோடு, கடல் செல்வாக்கு போன்ற காரணிகளால் கோடைகாலத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது, அத்துடன் இதன் பெரும்பாலான தீவுகள் துருவ காலநிலையைக் கொண்டுள்ளன.

பண்டைய கையெழுத்துப் பிரதியான லேண்ட்நாமபோக்கின் படி, ஐசுலாந்தின் குடியேற்றம் கிபி 874 இல் தொடங்கியது, அப்போது நோர்வே குடிகளின் தலைவர் இங்கோல்ஃபர் அர்னார்சன் தீவின் முதல் நிரந்தரக் குடியேறி ஆனார்.[13] அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், நார்வே நாடினரும், ஓரளவுக்கு ஏனைய இசுக்காண்டிநேவியர்களும், ஐசுலாந்திற்குக் குடிபெயர்ந்தனர், அவர்களுடன் கேலிக் வம்சாவளியைச் சேர்ந்த அடிமைகளை அழைத்து வந்தனர். உலகின் பழமையான செயல்படும் சட்டமன்றங்களில் ஒன்றான ஆல்திங் என்ற பூர்வீக நாடாளுமன்றத்தின் கீழ் இந்தத் தீவு ஒரு சுயாதீனமான பொதுநலவாய நாடாக நிர்வகிக்கப்பட்டது. உள்நாட்டு மோதல்களுக்குப் பிறகு, ஐசுலாந்து 13-ஆம் நூற்றாண்டில் நோர்வேயின் ஆட்சியில் இணைந்தது. 1397-ஆம் ஆண்டில், டென்மார்க், சுவீடன் ஆகிய இராச்சியங்களுடன் நோர்வே கால்மார் ஒன்றியமக இணைந்ததைத் தொடர்ந்து ஐசுலாந்தும் இவ்வொன்றியத்தில் இணைந்தது. 1523 இல் இந்த ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிறகு நடைமுறைப்படி டென்மார்க்கு ஆட்சியின் கீழ் வந்தது. டென்மார்க்கு இராச்சியம் 1550-இல் லூதரனியத்தை வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்தியது,[14] 1814-இல் கீல் ஒப்பந்தம் ஐசுலாந்தை முறையாக டென்மார்க்கிற்கு வழங்கியது.

பிரான்சியப் புரட்சிக்குப் பிறகு தேசியவாதத்தின் கொள்கைகளால் செல்வாக்குப் பெற்ற ஐசுலாந்தின் விடுதலைப் போராட்டம், 1918-இல் டென்மார்க்கு-ஐஸ்லாந்து ஒன்றியச் சட்டத்துடன் உச்சக்கட்டத்தை அடைந்து, ஐசுலாந்து இராச்சியம் நிறுவப்பட்டது, விரும்பிய ஒன்றிணைப்பு மூலம் டென்மார்க்கின் அன்றைய டென்மார்க்கின் முடியாட்சியைப் பகிர்ந்து கொண்டது. இரண்டாம் உலகப் போரில் டென்மார்க் ஐசுலாந்தை ஆக்கிரமித்தபோது, ​ஐசுலாந்து 1944-இல் ஒரு குடியரசாக மாறுவதற்கு பெரும்பான்மையாக வாக்களித்து, டென்மார்க்குடனான மீதமுள்ள முறையான உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1799 முதல் 1845 வரை ஆல்திங் (நாடாளுமன்றம்) இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், உலகின் மிக நீண்ட காலமாக இயங்கும் நாடாளுமன்றங்களில் ஒன்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமையை ஐசுலாந்து கொண்டுள்ளது. 20-ஆம் நூற்றாண்டு வரை, ஐசுலாந்து பெரும்பாலும் மீன்பிடித்தலையும், வேளாண்மையையும் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீன்வளத்தின் தொழில்மயமாக்கல் மற்றும் மார்சல் திட்ட உதவி தீவிற்கு செழிப்பைக் கொண்டு வந்தது, இதனால் ஐசுலாந்து உலகின் பணக்கார, மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. 1950-இல், ஐசுலாந்து ஐரோப்பியப் பேரவையில் இணைந்தது.[15] 1994 இல் இது ஐரோப்பியப் பொருளாதார வலயத்தின் ஒரு பகுதியாக மாறியது, அதன் பொருளாதாரத்தை நிதி, உயிரித் தொழில்நுட்பம், உற்பத்தி போன்ற துறைகளில் மேலும் பன்முகப்படுத்தியது.

ஐசுலாந்து ஏனைய OECD நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைந்த வரிகளைக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது..[16] அத்துடன் இது உலகின் மிக உயர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.[17] இது உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, மூன்றாம்-நிலைக் கல்வி போன்றவற்றை வழங்கும் ஒரு நோர்டிக் சமூக நல அமைப்பை நடத்தி வருகிறது.[18] வாழ்க்கைத் தரம், கல்வி, குடிமை உரிமைகளைப் பாதுகாத்தல், அரசாங்க வெளிப்படைத்தன்மை, பொருளாதார சுதந்திரம் போன்ற தேசிய செயல்திறனின் சர்வதேச ஒப்பீடுகளில் ஐசுலாந்து உயர்ந்த இடத்தில் உள்ளது. இது எந்த நேட்டோ நாட்டையும் விட மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளதுடன் நிலையான இராணுவம் இல்லாத ஒரே நாடும் ஆகும், லேசான ஆயுதம் ஏந்திய கடலோரக் காவல்படை மட்டுமே இங்கு உள்ளது.[19]

வரலாறு

[தொகு]

874-ல் நார்வேயிலிருந்து வந்த அரசியல் அகதிகள் இங்கு குடியேறினார்கள். சு. 930-ல் குடியரசு அமைக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயம் 1000-ல் ஏற்கப்பட்டது. 1262-ல் குடியரசு மறைந்து நாடு நார்வே மன்னரின் ஆட்சிக்குட்பட்டது. 100 ஆண்டுகள் சென்றபின் டென்மார்க்கின் ஆட்சிக்குட்பட்டு, டேனியர் வசம் இருந்துவந்தது.[20] நெப்போலிய யுத்தங்களின்போது ஐஸ்லாந்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், ஆனால் 1815-ல் மீண்டும் இதை டேனியருக்குக் கொடுத்துவிட்டனர். 1918-ல் சுதந்திரம் பெற்றது, எனினும் டென்மார்க்கின் அரசரே இதற்கும் அரசராக இருந்து வந்தார். 1944-ல் முழுச் சுதந்திரமுள்ள குடியரசு நாடாயிற்று.

அரசியலமைப்பு

[தொகு]

17-6-1944 லிருந்து ஐஸ்லாந்து ஒரு குடியரசு நாடாக இருந்து வருகிறது. சட்ட மியற்ற ஆல்திங் (Althing) என்ற பார்லிமென்டு உள்ளது. அதில் மேற்சபை கீழ்ச்சபை என இரு சபைகள் உள்ளன, ஜனாதிபதியே நிருவாகத் தலைவர். அவருக்குத் துணையாக ஆறு அமைச்சர் களடங்கிய அமைச்சர் குழு ஒன்று உண்டு. ஜனாதிபதி நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். பார்லிமென்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வயது வந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு, சட்டசபை வேலை அமெரிக்க ஐக்கிய நாட்டினதை ஒக்கும்.

அமைப்பு

[தொகு]

இதன் நீளம் 300 மைல் ; அகலம் 200 மைல் ஆகும். மொத்த பரப்பு 39,758 சதுர மைல்கள் ஆகும். இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஸ்காந்தினேவியர் ஆவர். ரேக்யவீக் (Reykjavik) தலைநகரம் ஆகும். இது ஒன்றே பெரிய பட்டணமாக உள்ளது. இங்கு ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. இத்தீவு எரிமலைப் பீடபூமி. இப்போது இங்கு 20 விழி எரிமலைகள் உள்ளன. மற்றும், பல வெந்நீர் பீச்சுக்களும் உள்ளன. அடிக்கடி பூகம்பம் நிகழ்வதுண்டு, கடற்கரைப் பகுதிகளே மக்கள் வாழத் தகுந்தவை. கோடையில் பெரும்பாலும் நாள்முழுதும் பகலாகவும், குளிர் காலத்தில் நாள் முழுதும் இரவாகவும் இருக்கும். பெரிய மரங்கள் இல்லை ; ஓக் மரமும் சிறுத்தே வளரும். மக்கள் கல்வீட்டில் வாழ்கிறார்கள். கோடை காலம் குறைந்திருப்பதால் கோதுமையும் மற்ற தானியங்களும் விளையா. சுமார் எட்டில் ஏழு பகுதியே விவசாயத்திற்கு ஏற்றது. ஆங்காங்குக் காற்றடைப்பான வெ ளி க ளி ல் உருளைக்கிழங்கு போன்ற வேர்ப்பயிர்கள் வளர்கின்றன, கால்நடைகள், ஆடுகள், குதிரைகள் முதலியவைகளை வளர்ப்பதும் மீன் பிடித்தலுமே முக்கியமான தொழில்கள். கூட்டுறவுப் பால்பண்ணைத் தொழிலும் நடைபெற்று வருகிறது. காய்கறிகள், பழங்கள், நிலக்கரி, மரம் முதலியன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகின்றன . உப்பிட்டு உலர்த்திய மீன் ஏற்றுமதியாகின்றது. ஐஸ்லாந்தில் இருப்புப்பாதை இல்லை. பெரும்பாலும் குதிரைகளில் ஏறியே பிரயாணம் செய்கிறார்கள். மக்கள் அனைவரும் எழுத்தறிவு உடையவராக உள்ளனர். குழந்தைகள் ஏழு முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்வர், பள்ளிக்கு வரமுடியாத குழந்தைகளுக்கு , அவர்கள் இருப்பிடத்துக்கே ஆசிரியர்கள் சென்று கற்பிப்பர்.

குறிப்புகள்

[தொகு]
  1. நாட்டுக் குடியுரிமை வாரியாக

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population by country of citizenship, sex and age (2021)". Statistics Iceland. Archived from the original on 10 June 2024. Retrieved 11 September 2022.
  2. Constitution of the Republic of Iceland பரணிடப்பட்டது 28 பெப்ரவரி 2018 at the வந்தவழி இயந்திரம்: Article 62, Government of Iceland.
  3. "Populations by religious and life stance organizations 1998–2022". Archived from the original on 20 September 2022. Retrieved 20 September 2022.
  4. "Ísland er minna en talið var". RÚV. 26 February 2015. Archived from the original on 15 March 2015. Retrieved 10 March 2015.
  5. "Surface water and surface water change". பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD). Archived from the original on 24 March 2021. Retrieved 11 October 2020.
  6. "The population grew by 1,350 in the third quarter". www.statice.is. Statistics Iceland. 31 October 2025. Archived from the original on 19 December 2025. Retrieved 31 October 2025.
  7. 7.0 7.1 7.2 7.3 "World Economic Outlook Database, April 2025".
  8. "Gini coefficient of equivalised disposable income – EU-SILC survey". ec.europa.eu. Eurostat. Archived from the original on 9 October 2020. Retrieved 9 August 2021.
  9. "Human Development Report 2025" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 6 May 2025.
  10. "Statistics Iceland". Government. The National Statistical Institute of Iceland. 14 September 2008. Archived from the original on 2 December 1998. Retrieved 14 September 2008.
  11. Rae, Alison. Earthquakes and Volcanoes. Page 9. 2008. "மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்து நிற்கும் ஒரே பகுதி ஐஸ்லாந்து மட்டுமே, மேலும் அதன் மைய எரிமலை பீடபூமி கிட்டத்தட்ட தொடர்ந்து வெடித்து வருகிறது."
  12. Philippon, Mélody; Von Hagke, Christoph; E. Reber, Jacqueline. Cutting-Edge Analogue Modeling Techniques Applied to Study Earth Systems. Page 99. 2020. "வட அமெரிக்கத் தட்டு மற்றும் யூரேசியத் தட்டு ஆகியவற்றைப் பிரிக்கும் நீட்டிக்கப்பட்ட தட்டு எல்லையின் மேல், ஒரு நடுக்கடல் முகடு கடல் மட்டத்திற்கு மேலே வெளிப்படும் இடம் பூமியில் ஐசுலாந்து மட்டுமே உள்ளது."
  13. Tomasson, Richard F. (1980). Iceland, the first new society. University of Minnesota Press. p. 63. ISBN 978-0-8166-0913-0.
  14. Jón R. Hjálmarsson (1993). History of Iceland: From the Settlement to the Present Day. Iceland Review.
  15. "CoE Presidency".
  16. "OECD Tax Database". Oecd.org. Archived from the original on 25 January 2010. Retrieved 26 January 2010.
  17. "Industrial relations". ILOSTAT. Archived from the original on 13 August 2019. Retrieved 9 October 2018.
  18. Ólafsson, Stefán (12 May 2004). "The Icelandic Welfare State and the Conditions of Children". borg.hi.is. Archived from the original on 18 August 2005. Retrieved 22 April 2010.
  19. The Military Balance 2014. The International Institute of Strategic Studies (IISS). 2014.
  20. "For Iceland, an exodus of workers". The New York Times. 5 December 2008. Archived from the original on 11 December 2008. Retrieved 10 February 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]

65°N 18°W / 65°N 18°W / 65; -18

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசுலாந்து&oldid=4473140" இலிருந்து மீள்விக்கப்பட்டது