உள்ளடக்கத்துக்குச் செல்

தீவு நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நாடானது ஒரு தீவினிலோ அல்லது ஒரு தீவுக்கூட்டத்திலோ முழுமையாக அடங்கியிருந்தால் அது தீவு தேசம் அல்லது தீவு நாடு (Island country) எனப்படுகிறது.[1] அனைத்து விடுதலையடைந்த நாடுகளிலும் 25% நாடுகள் தீவு நாடுகளாகும்.[2] வரலாற்றுரீதியாக தீவுகளில் அமைந்துள்ள நாடுகள் கண்டப்பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளோடு ஒப்பிடும் போது அதிக அரசியல் நிலைப்புத்தன்மை வாய்ந்தனவாக இருந்துள்ளன.[3] இருப்பினும் இவை கடல்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. உலகில் மொத்தமுள்ள நாடுகளில் 47 நாடுகள் தீவு நாடுகள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை சிறியவை ஆகும். உலகின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்டதும் பரப்பளவில் பெரியதுமான தீவு நாடு இந்தோனேசியா ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Island nation | Definition, meaning & more | Collins Dictionary". www.collinsdictionary.com (in ஆங்கிலம்). Retrieved 6 February 2025.
  2. Ott, Dan (1996). Small is Democratic. Routledge. p. 128. ISBN 0-8153-3910-0. Retrieved March 23, 2019.
  3. Ott, Dan (1996). Small is Democratic. Routledge. p. 128. ISBN 0-8153-3910-0. Retrieved March 23, 2019.

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவு_நாடு&oldid=4244933" இலிருந்து மீள்விக்கப்பட்டது