மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன்
புதைப்படிவ காலம்:
இடை காம்பீரிய காலம்-தற்போது வரை
Georgia Aquarium - Giant Grouper edit.jpg
பெருங்களவாய் மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி

மீன் (fish) என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும். இவற்றை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று வரையறை செய்யலாம். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்குத் தனியாகக் கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன.

பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அவை தங்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். ஆனாலும் வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.[1][2]

இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.

நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. உயரமான மலை நீரோடைகள் (எ.கா., கேர், கட்சன்) இருந்து தாழ்ந்த, ஆழ்ந்த கடல்களின் ஆழத்திலும் (எ.கா., கல்பர்சு (குள்ள மீனினம், தூண்டி மீன்), எனக் கிட்டத்தட்ட அனைத்து நீர் சூழல்களிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 33,100 மீன் சிற்றினங்கள், மற்ற எந்த ஒரு முதுகெலும்பிகளிலும் இல்லாத அளவிற்கு உயிரினப்பல்வகைமையைக் கொண்டுள்ளன.[3]

உலகப்பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும். மேலும் உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக உருவெடுத்துள்ளது. மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாகவும் சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. பல்வேறு காலகட்டங்களில் கதை, இலக்கியம், காவியம், வானுடவியல், வரலாறு, போன்றவற்றில் முக்கியப் பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளது.

பரிணாமம் (அ) கூர்ப்பு[தொகு]

வகைப்பாட்டியலில் மீன் ஒரு ஒற்றைத்தொகுதியைச் சார்ந்து முன்னிலைப்படுத்துவதில்லை, ஏனெனில் மீனின் பரிணாம வளர்ச்சி ஒரே நிகழ்வாகக் கொள்ள இயலாது. முதுகெலும்பிலிகளிலிருந்து முதுகெலும்புள்ளவைகளின் கூர்ப்பு நுழைவாயிலாக மீனினம் விளங்குகின்றன. இவை முதுகெலும்பிகளின் ஆதிவுயிரினமாகக் கொள்ளப்படுகிறது.[4]

புதைபடிவ பதிவுகளில் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து மீனினத்தின் ஆதிவுயிரி, சிறிய அளவில், கவசம் கொண்டு, தாடைகளற்றதாக இருந்தது. இதற்கு ஆஸ்ட்ரகோடர்ம்ஸ் என்று பெயர். ஆனால் தற்போது தாடையற்ற பல்வேறு மீனினங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. லாம்பயர்ஸ் தாடையுள்ள மீன்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறது. முதல் தாடையுள்ள மீனினம் பிளாக்கோடெர்மி படிமத்திலிருந்து பெறப்பட்டது.

தாடையுள்ள முதுகெலும்பிகளின் பன்முகத்தன்மை அவற்றின் பரிணாமத் தேவை, நன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மீன் தாடையின் பரிணாம வளர்ச்சி உணவு விழுங்கல், வேட்டையாடல், கடிக்கும் ஆற்றல், மேம்பட்ட சுவாசம், அல்லது அதன் காரணிகளின் கலவையாக இருந்திருக்கலாம்.

மீன் ஒரு பவளப்பாறை போன்று பாம்பு வடிவ உயிரினத்திலிருந்து பரிணமித்து உருவாகியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஏனெனில் மீனின் இளவுயிரி தோற்றத்தில் ஆதிமீன் இனத்தைப் போன்றது. மீன்களின் ஆதிவுயிரிகள் இளவுயிரியைப் போன்றே இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இன்றும் சில கடற்பீச்சிகளின் (சீ-ஸ்கர்ட்ஸ்) தோற்றம் முதிருயிரி, இளவுயிரிலிருந்து எவ்வித மற்றமும் அடைவதில்லை.

தாடையற்ற மீன்கள்


ஹைபரார்சியா (லாம்பயர் மீன்கள்)Nejonöga, Iduns kokbok.jpg



?†யூகோனோலோன்டா (விலாங்கு போன்ற மீன்வகை)


unnamed


தெரஸ்பிடோமார்ஃபி (தாடையற்ற மீன்கள்)Astraspis desiderata.png



?†திலோடொன்டி (தாடையற்ற செதிலுள்ள மீன்கள்)Sphenonectris turnernae white background.jpg


unnamed


?†அனாஸ்பிடா (தாடையற்ற ஆதி லாம்பயர் மீன்கள்)Pharyngolepis2.png


unnamed


காலிஸ்பிடா (தாடையற்ற எலுப்புச்சட்டக மீன்கள்)


unnamed


?†பிடுரியாஸ்பிடா (பெரிய முன்னீட்டி முற்கொண்ட கவசத்துடன் கூடிய தாடையற்ற மீனினம்)



ஆஸ்டியோஸ்ட்ரெசி (தாடையற்ற வலுவான எலுப்புச்சட்டக மீன்கள்)Cephalaspis.png



நதொஸ்டொமெட்டா → தொடர்ச்சி கீழ்வருமாறு








தாடையுள்ள மீன்கள்


பிளாகோடெர்மி (கவச மீன்கள்)Dunkleosteus intermedius.jpg


unnamed


அகாந்தொடியன்ஸ் and கோண்ட்ரித்யஸ் (குருத்தெலும்பு மீன்கள்)Acanthodes BW.jpgCarcharodon carcharias drawing.jpg


ஆஸ்டெய்தியஸ் எலும்பு மீன்கள்


அக்டினொடெரிஜீ கதிர்முள் மீன்கள் <தற்போதைய அதிகபட்ச மீனினங்கள் இவ்வகையின Cyprinus carpio3.jpg


சார்கோப்டெரிஜீ கதுப்புத்துடுப்பு மீன்கள்


?†ஆனிகோடொன்டிஃபார்மிஸ் கதுப்புத்துடுப்பு மீன்கள் OnychodusDB15 flipped.jpg



ஆக்டினிஸ்டியா (சீலகாந்து மீன்கள்)Coelacanth flipped.png


unnamed


போரோலுபிஃபார்மிஸ் கதுப்புத்துடுப்பு மீன்கள் Reconstruction of Porolepis sp flipped.jpg



திப்னாய் (நுரையீரல் சுவாச மீன்கள்)Protopterus dolloi Boulenger.jpg



unnamed


ரைசோடோன்டிடே (வேட்டையாடும் கதுப்புத்துடுப்பு மீன்கள்)Gooloogongia loomesi reconstruction.jpg




ட்ரிஸ்டிகொப்டெரிடே (நாற்காலுருக்கொண்டவை)Elginerpeton BW.jpg



டெட்ராபோடா (நாற்காலிகள்)Deutschlands Amphibien und Reptilien (Salamandra salamdra).jpg








வகைப்பாடு[தொகு]

மீனின வகைப்பாடு இணை ஒற்றைத்தொகுதிக் குழுவில் வகைப்படுத்தப்படுகிறது, ஏனெனில் டெட்ராபோடுகள் எனும் நாற்காலிகளும் பழைய முறையில் வகைப்படுத்தப்பட்டன. இக் காரணத்திற்காக, பழைய குறிப்புகளில் காணப்படும் மீன்களுக்கென்ற தனி வகுப்பு முறையாக பயன்படுத்தப்படவில்லை.

மரபுவழி வகைப்பாடு மீன் வகைகளை மூன்று வகுப்புகளாகவும், சில நேரங்களில் வகைப்பட்டியல் கிளையின் கீழ் அழிவுற்ற இனங்களுடன் வகைப்படுத்தவும் செய்கின்றன. சில நேரங்களில் அவை அவற்றின் சொந்த வகுப்புகளாகவும் உள்ளன: [5][6]

லீக்சிக்திஸ் மீனினம் (இடது), துணைவகுப்பு : அக்டினோட்டெரிகீயை, மிகப்பெரிய ஆதி மீனினமாக 2005ல் அறியப்பட்டது, அதன் மிகப்பெரிய அளாவாக 16 மீட்டர்s (52 ft)

மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடு பொதுவாக நுணுக்கமின்றி மேலோட்டமான குழுக்காளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இதில் கோண்ட்ரிக்தியஸின் முன்னொடிகளாக அக்னதன்கள் உள்ளன. இவை ஒருசேர அகாந்தோடீயன்களாகவும், ஆஸ்டெய்தியஸின் முன்னோடிகளாகவும் இருந்துள்ளன. புதிய வகைப்பாட்டுத் தொகுதியில் இவை மேலும் நுணுக்கமாக வகைப்படுத்தப்படுகிறது. அவை கீழ்வருமாறு :

† – அழிந்த வகையினத்தைக் குறித்தல்
தொல்லுயிராய்வாளர்கள் கோனடோன்ட்டா வகுப்பினங்கள் முதுகெலும்பிகளின் முதன்மை விலங்காகக் கருதுகின்றனர்.

மீனினப் பல்வகைமை[தொகு]

உடற்கூற்றியல் மற்றும் உடற்செயலியல்[தொகு]

லாம்பனிக்டோட் ஹெக்டோரிஸ்யின் உடற்கூற்றியல்
(1) – ஓபர்குலம் (செவுள்மூடி), (2) – பக்கக்கோடு, (3) – முதுகுத்துடுப்பு, (4) – கொழுமியத்துடுப்பு, (5) – வால் பகுதி, (6) – வால்துடுப்பு, (7) – குதத்துடுப்பு, (8) – ஒளிக்கால்கள், (9) – இடுப்புத்துடுப்புகள் (இணை), (10) – மார்புத்துடுப்புகள் (இணை)

உடலமைப்பு[தொகு]

மீனின் உடலமானது, தலை, நடுவுடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

இவற்றில் மிகப்பெரும்பாலானவை உடலில் செதில்களைக் கொண்டவை. சில தட்டையாகவும் சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும்.

பிலிப்பைன்சு நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் இருக்கும். ஆனால் திமிங்கிலச்சுறாமீன் என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்).

சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில இனங்கள் உடல் முழுதும் பல நிறக் கோலங்களையும், கோடுகளையும், திட்டுகளையும் கொண்டவையாக இருக்கும்.

சுவாச மண்டலம்[தொகு]

இவை செவுள்கள், நுரையீரலால் சுவாசிக்கின்றன.

செவுள்கள்[தொகு]

5-7 இணைகள் செவுள் பிளவுகளைக் கொண்டுள்ளன. செவுள்களின் மீது செவுள்மூடி காணப்படுகிறது.

காற்று சுவாசம்[தொகு]

சில மீன்கள் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றன. சில மீன்கள் காற்றுபை முலம் மிதக்கின்றன

இரத்தச் சுழற்சி மண்டலம்[தொகு]

மீன் ஒரு மூடிய-வளைய இரத்த ஓட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. இதயம் உடல் முழுவதும் ஒரு வளையத்துள் இரத்தத்தை இயக்குகிறது. பெரும்பாலான மீன்களில், இதயத்தில் நான்கு பகுதிகளைக்கொண்டுள்ளன, இதில் இரண்டு அறைகள், நுழைவுப்பகுதி மற்றும் வெளியேறும் பகுதி என நான்கு கூறுகளாக உள்ளன. இதன் முதல் பகுதி சைனஸ் வெனோசஸ் ஆகும். இது ஒரு மெல்லிய தசையறையைக் கொண்டுள்ளது. இது சிரைகளிலிருந்து இரத்தத்தை இரண்டாவது பகுதிக்கு கடத்துகின்றது. தமனி ஒரு கூறு புகவிடும் தன்மையது. இது மூன்றாம் பகுதியான சிரைக்கு இரத்தத்தை அனுப்புகிறது. நான்காவது பகுதிக்கு இரத்தத்தை முடுக்குவது பல்பஸ் அர்ட்ரியோஸஸ் எனும் பகுதி ஆகும். இதன் மூலம் இரத்தம் ஆக்ஸிஜனேற்றத்திற்கான ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

உணவுச்செரிமான மண்டலம்[தொகு]

உணவுப்பாதையில் தெளிவான இரைப்பை, கணையம், போன்ற உறுப்புகள் உண்டு.

கழிவு நீக்க மண்டலம்[தொகு]

சிறுநீரகம் மீசோநெஃப்ரிக் வகையைச் சார்ந்தது.

தோல் - செதில்கள்[தொகு]

செதில்கள் பிளக்காய்டு, சைக்ளாய்டு, டீனாய்டு, கேனாய்டு எனப் பலவகைகள் உண்டு.

மத்திய நரம்பு மண்டலம்[தொகு]

உணர்வு உறுப்புகள்[தொகு]

பெரும்பாலான மீனினங்கள் மேம்பட்ட உணர்வு உறுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா பகல் வேளையிலும் ஒரு மனிதனைப் போன்றே வண்ணன்களை அறியும் பார்வைத்திறன்களை மீன்கள் பெற்றுள்ளன. பல மீனினங்கள் சுவை, மணம் அறியும் திறன் பெற்ற அசாதாரண உணர்வுறுப்புகளான வேதிவுணர்விகளை (கீமோரெசப்டார்ஸ்) கொண்டுள்ளன. பெரும்பாலான மீன்களின் உணர்திறன் அவற்றின் பக்கவாட்டு கோடு களில் உள்ளன, இது மென்மையான நீரோட்டங்களையும், அதிர்வுகளையும் கண்டறிந்து, அருகிலுள்ள மீன், இரையை அணுகத்தூண்டுகிறது.

கெளுத்தி, சுறா மீன்களில் சிறப்பானதொரு லோரன்ஜினி அம்பல்லே எனும் உணர்வுறுப்பைக் கொண்டிருக்கின்றன. அவை உறுப்புகளில் பலவீனமான மில்லிவோல்ட் மின்னோட்டங்களையும் கண்டறியும் திறன் பெற்றவை. ஏனெனில் தென் அமெரிக்க பகுதியில் வாழும் சில மின்சார மீன்கள் (ஜிம்னோடிஃபார்ம்ஸ்) பலவீனமான சில மின்னோட்டங்களை உருவாக்கலாம், அவை வழியறிதல் மற்றும் சமூகத் தொடர்புகளுக்காக பயன்படுத்துகின்றன.

மீன்கள் உள்ளத்தில் வரைபடமாக இடங்கள், சமிக்ஞைகள், அடையாளங்கள், அமைவிடச்சின்னங்கள், போன்றவற்றை நினைவுகூர்கின்றன. இவற்றின் சிறப்பான நினைவகம் மற்றும் காட்சி பாகுபாடறியும் திறன் ஆகியன அறிவியல் அதிசயங்களாகும்.

கேட்டல் திறன்[தொகு]

பெரும்பாலான மீனினங்களில் கேட்டல் திறன் மிக முக்கிய உணர்திறன் ஆகும். அவற்றின் பக்கவாட்டு கோடுகளினாலும், அவற்றின் காதுகளைப் பயன்படுத்தியும் மீன்கள் உணர்வு ஒலிகளை அறிந்துகொள்கின்றன. மீன்களுக்கு காதுகள் இருந்தாலும், பல மீன்களால் நன்றாக கேட்க இயலுவதில்லை.

பார்வைத்திறன்[தொகு]

பெரும்பாலான விலங்குகளுக்கு பார்வைத்திறன் ஒரு முக்கிய உணர்திறனாகும். மீன்களுக்கும் நிலவாழ் முதுகெலும்பிகளான பறவைகள், பாலூட்டிகளைப் போன்ற, அதேசமயத்தில் ஒப்புமையில் பெரிய கோளவடிவ வில்லைகளாக இருக்கின்றன. இவற்றின் விழித்திரை (ரெடினாக்கள்) பொதுவாக தண்டு, கூம்பு வடிவமுடையவை. இதனால் இருள் [ஸ்கோட்டோபிக்] மற்றும் ஒளியறிதல் திறன், சில சிற்றினங்கள் வண்ணமறியும் திறனும் பெற்றுள்ளன. சில மீன்கள் புற ஊதாக்கதிரையும், சில மீன்கள் துருவமுனைப்பு ஒளியியும் காண இயலும். தாடையற்ற மீன்களுள், லேம்ப்ரே மீன் இனங்கள் நன்கு வளர்ந்த கண்களைக் கொண்டன. அதேவேளையில் ஹேக் மீனினம் மட்டும் பழமையான ஒளிநேர்ப்பகுதியைக் கொண்டிருக்கின்றன. மீன் பார்வைதிறன் காட்சி சூழலுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கின்றன. உதாரணமாக ஆழ்கடல் மீன்கள் இருண்ட சூழலுக்குத் தகுந்தாற்போல் மிகவும் பொருத்தமாக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன.

வெப்பத் தகவமைப்பு[தொகு]

மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ்வெப்பநிலை விலங்குகள் என்று சொல்வர். சில வெப்ப மண்டல நாடுகளின் நீர்நிலைகளிலும், சில மீன் இனங்கள் கடுங்குளிர்ப்பகுதியான ஆர்ட்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றன.

இனப்பெருக்க அமைப்பு[தொகு]

மீன்கள் முட்டையிட்டு படிநிலைகளில் குஞ்சுகளைப் பெறுபவை. இவற்றில் ஒரு பாலினக் கருவுறல் உடலினுள்ளோ அல்லது வெளிபுறத்திலோ நிகழலாம். எ.கா. சுறா, கட்லா

அழிவுறும் நிலை[தொகு]

  • எக்கச்சக்கமாக மீன்களைப் பிடித்தல்
  • கடல் எச்சங்கள், கதிரியக்கக் கழிவுகள்
  • புவி வெப்பமடைதல்
  • நீர் மாசுபாடு

முக்கியத்துவம்[தொகு]

  • மீன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகச் சந்தையில் பெரும்பங்காற்றுகின்றன. இந்தியாவிலிருந்து பெரும்பான்மையான மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • உணவிற்காக மீன் வளர்த்தல் - பெரும்பாலான கடல் மீன்களும், நன்னீர் மீன்களும் உணவிற்காக பிடிக்கப்பட்டு சமைத்து உண்ணப்படுகின்றன. சாளை, நெத்திலி, கிழாத்தி, வாளை, நவரை, இறால் போன்றவை உணவிற்காக பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் கடல் மீன் வகைகளாகும்.
  • மீன் வளர்ப்பு - மீன் வளர் தொழில்நுட்பம் அழகுக்காகவும், உணவுக்காகவும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
  • மீன் பிடித்தல் பல நாடுகளில் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.
  • பண்பாட்டு அடையாளங்கள் - மீன் சில மதங்களில் கடவுளாகவும் (மச்ச அவதாரம் - திருமால்), பண்பாட்டுச் சின்னமாகவும் (பாண்டிய நாட்டின் கொடி - மீன் கொடி) விளங்குகின்றன.

மீன் வகைகள் பட்டியல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: மீன் வகைகள் பட்டியல்

மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:

கப்பிவகை மீன்
திருக்கை மீன்
ஆழ்கடலில் வாழும் கூன்முதுகு மீன்
  • வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),
  • குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,
  • குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)
  • செதில் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldman, K.J. (1997). "Regulation of body temperature in the white shark, Carcharodon carcharias". Journal of Comparative Physiology. B Biochemical Systemic and Environmental Physiology 167 (6): 423–429. doi:10.1007/s003600050092. http://www.mendeley.com/research/temperature-and-activities-of-a-white-shark-carcharodon-carcharias/. பார்த்த நாள்: 12 October 2011. 
  2. Carey, F.G.; Lawson, K.D. (February 1973). "Temperature regulation in free-swimming bluefin tuna". Comparative Biochemistry and Physiology A 44 (2): 375–392. doi:10.1016/0300-9629(73)90490-8. 
  3. "FishBase". FishBase. April 2015. 29 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. G. Lecointre & H. Le Guyader, 2007, The Tree of Life: A Phylogenetic Classification, Harvard University Press Reference Library
  5. Romer, A.S. & T.S. Parsons. 1977. The Vertebrate Body. 5th ed. Saunders, Philadelphia. (6th ed. 1985)
  6. Benton, M. J. (1998) The quality of the fossil record of vertebrates. Pp. 269–303, in Donovan, S. K. and Paul, C. R. C. (eds), The adequacy of the fossil record, Fig. 2. Wiley, New York, 312 pp.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்&oldid=3517501" இருந்து மீள்விக்கப்பட்டது