ஆர்க்டிக் பெருங்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்க்டிக் சமுத்திரம்.

ஆர்க்டிக் பெருங்கடல் அல்லது ஆர்க்டிக் சமுத்திரம் உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் மிகச் சிறியதும் ஆழமற்றதாகும். புவியின் வடமுனை இச்சமுத்திரத்திலேயே உள்ளது. இது முழுமையாக புவியின் வடவரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இச்சமுத்திரம் புவியின் குளிர்மையான பிரதேசங்களில் ஒன்றாகும். முற்காலத்தில் கடற்பனியால் மூடப்பட்டிருந்த இப்பெருந்கடல் தற்போது காலநிலை மாற்றம் காரணமாகப் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.

ஆர்க்டிக் சமுத்திரமானது கிட்டத்தட்ட நிலத்தால் சூழப்பட்டு உள்ளது. ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இப்பெருங்கடலைச் சுற்றியுள்ளது. இப்பெருங்கடலின் வெப்பநிலையும் உப்புத்தன்மையும் காலத்திற்குக் காலம் மாறுபடும். ஏனைய சமுத்திரங்களுடன் ஒப்பிடும் போது இதன் உப்புத்தன்மை மிகவும் குறைவாகும்.

புவியியல்[தொகு]

ஆர்க்டிக் பெருங்கடல் கிட்டத்தட்ட 14,056,000 km2 (5,427,000 sq mi) பரப்பைக் கொண்டுள்ளது. இது ரஸ்ஸியாவின் நிலப்பரப்பிற்குச் சமமானதாகும்.

ஆர்க்டிக் பெருங்கடலின் பிரதான நீர்ப் பரப்புகள்

ஆர்க்டிக் பெருங்கடலின் கடற்பனி[தொகு]

ஆர்க்டிக் சமுத்திரத்தில் பெரும்பகுதி கடற்பனியால் மூடப்பட்டுள்ளது. எனினும் இந்நிலை 1980 முதல் மாற்றமடைந்துள்ளது. 1980 முதல் வருடத்திற்கு 3% வீதம் குளிர்கால கடற்பனியின் பரப்பு குறைவடைந்து வருகின்றது. இதன் சராசரி கடற்பனி பரப்பு 15,600,000 km2 ஆகக் காணப்படுவதுடன் இது கோடை காலத்தில் 7,000,000 km2 (2,702,700 sq mi) வரை குறைவடையும்.

1980 முதல் 2010 வரையிலான கோடைக்கால கடற்பனியின் பரப்பு. 2010இல் இதன் பரப்பு மிகவும் குறைவாக உள்ளது.
2005இற்கும் 2007இற்கும் இடையிலான கடற்பனி வேறுபாடு


பெருங்கடல்கள்
அத்திலாந்திக்குப் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்தென்முனைப் பெருங்கடல்அமைதிப் பெருங்கடல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்டிக்_பெருங்கடல்&oldid=1862937" இருந்து மீள்விக்கப்பட்டது