உயிரியல் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உயிரியல் வகைப்பாடு

அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரினங்களை வகைப்படுத்துதலை, உயிரியலாளர்கள், உயிரியல் வகைப்பாடு (biological classification) அல்லது அறிவியல் வகைப்பாடு (Scientific classification) எனக் குறிப்பிடுகிறார்கள். கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) என்பவர் உயிரினங்களை அவற்றின் பொதுவான இயற்பியல் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால அறிவியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். டார்வினுடைய பொது மரபுவழிக் கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இதற்கு அமைய கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டது.[1] மூலக்கூற்றுத் தொகுப்பியலின் (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வகைப்பாடானது வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் தொகுப்பியலுள் (biological systematics) அடங்குகின்றது.

வரைவிலக்கணம்[தொகு]

பாக்டீரியா தொல்பாக்டீரியா மெய்க்கருவுயிரி Aquifex Thermotoga நீலப்பச்சைப்பாசி Bacteroides Bacteroides-Cytophaga Planctomyces Cyanobacteria Proteobacteria Spirochetes கிராம்-நேர் பாக்டீரியா Green filantous bacteria Pyrodicticum Thermoproteus Thermococcus celer Methanococcus Methanobacterium Methanosarcina Halophiles Entamoebae Slime mold விலங்கு பூஞ்சை தாவரம் Ciliate Flagellate Trichomonad Microsporidia Diplomonad
பரிணாமத்தோற்ற மரபியல் நெறிமரம்

உயிரியல் வகைப்பாட்டுக்கு வரைவிலக்கணம் கொடுத்தவர் எர்ணஸ்ட் மாயர் ஆவார்[2]. அவரால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகுப்பிற்குள் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகுப்புக்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது". (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் "வகுப்பு" என்ற பதம் வகைப்பாட்டியலின் ஒரு படிநிலையான வகுப்பு என்பதைக் குறிக்கவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ளவும். இங்கு வகுப்பு என்பது ஒரு குழுவைக் குறிக்கின்றது).

அண்மித்த ஒரு பொதுவான மூதாதையருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான பாரம்பரிய இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, ஒத்தவமைப்பு (homologous), அதாவது, ஒரு பொது மூதாதையிலிருந்து பரம்பரையாகப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன[3]. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய அமைப்பு, அல்லது செயலொத்த (analogous) இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ.கா. பறவையும், வவ்வாலும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே மூதாதையிலிருந்து பாரம்பரியமாகக் பெறப்படாத ஒரு இயல்புகளாக இருப்பதனால், அவற்றை ஒரே வகுப்பிற்குள் அடக்குவதில்லை. அதேவேளை வவ்வாலும், திமிங்கிலமும் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் பாலூட்டிகள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்கால வளர்ச்சிகள்[தொகு]

உயிரியல் வகைப்பாடு

1960 களிலிருந்து, வகைப்பாட்டு அலகுகளை (taxon) படிவளர்ச்சி மர அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது ஒருவழித்தோற்றம் (monophyletic) எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, பல்தொகுதிமுறைத் தோற்றம் (polyphyletic) எனப்படும்.

வகைப்பாட்டியலில் ஆட்சிகள் ஒப்பீட்டளவில் அண்மைக்காலப் பகுப்புகள் ஆகும். மூன்று-ஆட்சி முறைமை (three-domain system) 1990 இல் உருவாக்கப்பட்டுப் பின்னரே ஏற்பு பெற்றது. இன்று பெரும்பான்மையான உயிரியலாளர்கள் மூன்று-ஆட்சி முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனினும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஐந்து திணைப் பகுப்பு முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.

லின்னேயசின் இருபடிநிலை வகைப்பாடு[தொகு]

லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

 1. திணை(இராச்சியம்) (kingdom)
 2. வகுப்பு (class)
 3. வரிசை (order)
 4. பேரினம் (genus)
 5. இனம் (species)

திணைகள் (இராச்சியங்கள்), பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

ஏழு படிநிலை வகைப்பாடு[தொகு]

வகுப்பு மட்டத்தில் முதுகெலும்பியின் கூர்ப்பு, கதிர்களின் அகலம் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கதிர்ப்படமானது கூர்ப்பு வகைப்பாட்டியலின் குறிப்பிடத்தக்க மாதிரியாகும்
தொடர்புகளைக் காட்டும் பாகுபாட்டு வரைபடம்

லின்னேயசின் ஐந்து படிகளுடன் மேலும் இரண்டு படிகளைச் சேர்த்துத் தற்கால வகைப்பாடு ஏழு படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது.

 1. திணை(இராச்சியம்) (kingdom)
 2. தொகுதி (phylum) – பிரிவு (division) (தாவரங்களுக்கு)
 3. வகுப்பு (class)
 4. வரிசை (order)
 5. குடும்பம் (family)
 6. பேரினம் (genus)
 7. இனம் (species)

பெயர் முடிப்பு[தொகு]

பேரினங்களுக்கு மேலுள்ள படிநிலைகளில் வகைப்பாட்டு அலகுகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் முடிவடையுமாறு ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள அட்டவணை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

படிநிலை தாவரங்கள் பாசிகள் பூஞ்சணங்கள் விலங்குகள்
பிரிவு/தொகுதி -பைட்டா (-phyta) -மைகொட்டா
(-mycota)
துணைப்பிரிவு/துணைத்தொகுதி -பைட்டினா (-phytina) -மைகொட்டினா
(-mycotina)
வகுப்பு -ஒப்சிடா
(-opsida)
-பைசியே
(-phyceae)
-மைசெடேஸ்
(-mycetes)
துணைவகுப்பு -இடே
(-idae)
-பைசிடே
(-phycidae)
-மைசெட்டிடே
(-mycetidae)
பெருவரிசை -ஏனே (-anae)
வரிசை -ales
துணைவரிசை -ineae
உள்வரிசை -ஏரியா (-aria)
பெருங்குடும்பம் -ஏசே (-acea) -oidea
குடும்பம் -ஏசியே (-aceae) -idae
துணைக்குடும்பம் -oideae -inae


உயிரியல் இராச்சியங்களின் வகைப்பாடு[தொகு]

லின்னேயசு
1735[4]
ஹேக்கல்
1866[5]
எடியார்ட் சாட்டன் (Édouard Chatton)
1925[6][7]
ஹேர்பேர்ட் கோப்பலாண்ட் (Herbert Copeland)
1938[8][9]
ரோபேர்ட் விட்டாக்கர் (Robert Whittaker)
1969[10]
கார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)
1977[11][12]
கார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)
1990[13]
தோமஸ் கவாலியர்-ஸ்மித் (Thomas Cavalier-Smith)
2004[14]
உருகீரோவும் ஏனையோரும் (Ruggiero et al.)
2015[15]
2 இராச்சியங்கள் 3 இராச்சியங்கள் 2 Empires 4 இராச்சியங்கள் 5 இராச்சியங்கள் 6 இராச்சியங்கள் 3 ஆட்சிப்பிரிவுகள் 6 இராச்சியங்கள் 7 இராச்சியங்கள்
(-) அதிநுண்ணுயிரி

(Protista)

நிலைக்கருவிலி

(Prokaryota)

மொனேரா

(Monera)

மொனேரா

(Monera)

இயூபாக்டீரியா

(Eubacteria)

பாக்டீரியா

(Bacteria)

பாக்டீரியா

(Bacteria)

பாக்டீரியா

(Bacteria)

ஆர்க்கீயா

(Archaebacteria)

ஆர்க்கீயா

(Archaea)

ஆர்க்கீயா

(Archaea)

மெய்க்கருவுயிரி

(Eukaryota)

அதிநுண்ணுயிரி

(Protista)

அதிநுண்ணுயிரி

(Protista)

அதிநுண்ணுயிரி

(Protista)

மெய்க்கருவுயிரி

(Eukarya)

மூத்தவிலங்கு

(Protozoa)

மூத்தவிலங்கு

(Protozoa)

குரோமிஸ்டா

(Chromista)

குரோமிஸ்டா

(Chromista)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)


அங்கீகாரம் (ஆசிரியர் சான்று)[தொகு]

அங்கீகாரம் ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் கரோலஸ் லின்னேயஸ் (Linnaeus) ஆசிய யானைக்கு Elephas maximus என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் "Elephas maximus Linnaeus, 1758" எனவும் எழுதப்படுகின்றது. இம் முறையில் விஞ்ஞானிகளின் பெயர்களை அவ்வப்போது சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக லி = L. என்ற சுருக்க எழுத்தானது கரோலஸ் லின்னேயஸைக் குறிக்குமென உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு தாவரவியலில் நிலையான சுருக்கப்பெயர்களைக் கொண்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட பட்டியலும் உள்ளது. (பார்க்க தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை) அங்கீகாரம் ஒதுக்கப்படும் விதமானது விலங்கியலுக்கும் தாவரவியலுக்கும் இடையில் சற்று வேற்படுகின்றது.

இலங்கை வழக்குச் சொற்கள்[தொகு]

 • Domain- பேரிராச்சியம்
 • Kingdom - இராச்சியம்
 • Phylum/Division - கணம்/ பிரிவு
 • Class - வகுப்பு
 • Order - வருணம்
 • Family - குடும்பம்
 • Genus - சாதி
 • Species - இனம்

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Michel Laurin (2010). "The subjective nature of Linnaean categories and its impact in evolutionary biology and biodiversity studies". Contributions to Zoology 79 (4). http://www.ctoz.nl/ctz/vol79/nr04/art01. பார்த்த நாள்: 21 March 2012. 
 2. Ernst W. Mayr; Bock, W.J. (2002). "Classifications and other ordering systems". J. Zool. Syst. Evol. Research 40 (4): 169–94. doi:10.1046/j.1439-0469.2002.00211.x. 
 3. Mayr & Bock 2002, ப. 178
 4. Linnaeus, C. (1735). Systemae Naturae, sive regna tria naturae, systematics proposita per classes, ordines, genera & species. 
 5. Haeckel, E. (1866). Generelle Morphologie der Organismen. Reimer, Berlin. 
 6. Chatton, É. (1925). "Pansporella perplexa. Réflexions sur la biologie et la phylogénie des protozoaires". Annales des Sciences Naturelles - Zoologie et Biologie Animale 10-VII: 1–84. 
 7. Chatton, É. (1937). Titres et Travaux Scientifiques (1906–1937). Sette, Sottano, Italy. 
 8. Copeland, H. (1938). "The kingdoms of organisms". Quarterly Review of Biology 13: 383–420. doi:10.1086/394568. 
 9. Copeland, H. F. (1956). The Classification of Lower Organisms. Palo Alto: Pacific Books. doi:10.5962/bhl.title.4474. 
 10. Whittaker, R. H. (January 1969). "New concepts of kingdoms of organisms". Science 163 (3863): 150–60. doi:10.1126/science.163.3863.150. பப்மெட் 5762760. 
 11. Woese, C. R.; Balch, W. E.; Magrum, L. J.; Fox, G. E.; Wolfe, R. S. (August 1977). "An ancient divergence among the bacteria". Journal of Molecular Evolution 9 (4): 305–311. doi:10.1007/BF01796092. பப்மெட் 408502. 
 12. Woese, C. R.; Fox, G. E. (November 1977). "Phylogenetic structure of the prokaryotic domain: the primary kingdoms". Proceedings of the National Academy of Sciences of the United States of America 74 (11): 5088–90. doi:10.1073/pnas.74.11.5088. பப்மெட் 270744. 
 13. Woese, C.; Kandler, O.; Wheelis, M. (1990). "Towards a natural system of organisms: proposal for the domains Archaea, Bacteria, and Eucarya.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 87 (12): 4576–9. doi:10.1073/pnas.87.12.4576. பப்மெட் 2112744. PMC 54159. Bibcode: 1990PNAS...87.4576W. http://www.pnas.org/cgi/reprint/87/12/4576. 
 14. Cavalier-Smith, T. (2004), "Only six kingdoms of life", Proceedings of the Royal Society of London B Biological Sciences 271: 1251–62, doi:10.1098/rspb.2004.2705, பப்மெட் 15306349, PMC 1691724, http://www.cladocera.de/protozoa/cavalier-smith_2004_prs.pdf, பார்த்த நாள்: 2010-04-29 
 15. Ruggiero, Michael A.; Gordon, Dennis P.; Orrell, Thomas M.; Bailly, Nicolas; Bourgoin, Thierry; Brusca, Richard C.; Cavalier-Smith, Thomas; Guiry, Michael D. et al. (2015). "A higher level classification of all living organisms". PLOS ONE 10 (4): e0119248. doi:10.1371/journal.pone.0119248. பப்மெட் 25923521. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_வகைப்பாடு&oldid=2248746" இருந்து மீள்விக்கப்பட்டது