கிரேக்கம் (மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரேக்க மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரேக்கம் (எல்லினிக்கா)
Ελληνικά
Εlliniká
நாடு(கள்) கிரீசு,சைப்பிரசு, அல்பேனியா, பல்கேரியா,
மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, ஆர்மேனியா,
ஜியார்ஜியா,உக்ரைன்,மால்டோவா,
ருமேனியா,உருசியா,
எகிப்து, ஜோர்டான், தென் ஆப்பிரிக்கா,
கசக்ஸ்தான், பிரான்ஸ், புலம்பெயர் கிரேக்கர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன்[1]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
கிரேக்க அகரவரிசை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 கிரேக்க நாடு
 சைப்பிரசு
 ஐரோப்பிய ஒன்றியம்
சிறுபான்மை மொழியாக அறியப்பட்ட நாடுகள்:
 அல்பேனியா
 இத்தாலி
 துருக்கி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 el
ISO 639-2 gre (B)
ell (T)
ISO 639-3 Either:
grc — பழைய கிரேக்கம்
ell — தற்கால கிரேக்கம்

கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா (ελληνική γλώσσα IPA[eliniˈci ˈɣlosa] அல்லது சுருக்கமாக ελληνικά IPA[eliniˈka] — "எல்லினிக்கா", "Hellenic") ஏறத்தாழ 3,500 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி. இது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலேயே யாதொரு மொழியினும் மிகநெடிய வரலாறு கொண்ட மொழியாகும். இந்திய ஐரோப்பிய மொழிகளுள் இதுவே எழுத்து வடிவிலும் (மைசீனிய கிரேக்கம் மொழி), சிறு குறிப்புகளாக இருப்பினும், வரலாற்றில் முன்மையான பதிவு கொண்ட மொழி ஆகும். இப்பதிவுகள் கி.மு 15 ஆவது 14ஆவது நூற்றாண்டுகளைச் சேரும். இன்று கிரேக்க மொழியை 15-25 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். கிரேக்க மொழியானது கிரீசு, சைப்பிரசு, அல்பேனியா, பல்கேரியா, மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, ஆர்மேனியா, ஜியார்ஜியா,உக்ரைன்,மால்டோவா,ருமேனியா,உருசியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. இது தவிர கிரேக்க மொழியை உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்த கிரேக்க மொழியாளர்களும் அன்றாடம் பயன்படுத்துகின்றனர் (குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்).

வரலாறு[தொகு]

சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டு[2] அல்லது அதற்கு முன்னரே[3] பால்கன் குடாவில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய எழுத்து வடிவம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்ட அசையெழுத்துக்கள் கொண்ட சான்றுகளில் உள்ளது[4]. இதனடிப்படையில் ஆகப்பழைய எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது.

புவியியற் பரம்பல்[தொகு]

கிரேக்க மொழி சுமார் 13 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மயோர் கிரேக்கம், அல்பேனியா, சைப்பிரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். புலம்பெயர் கிரேக்கர்களாலும் கிரேக்கம் பேசப்படுகிறது. பாரம்பரிய கிரேக்கக் குடியேற்றங்கள், அல்பேனியா, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களிலும் கருங்கடல் பகுதி நாடுகளான உக்ரைன், இரசியா, உரோமானியா, சியார்சியா, ஆர்மேனியா, அசர்பைசான் ஆகிய நாடுகளிலும் மத்திய தரைக்கடலை அண்டிய தென் இத்தாலி, சிரியா, இஸ்ரேல், எகிப்து, லெபனான், லிபியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. மேலும் ஐக்கிய இராச்சியம், செருமனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் கிரேக்க மொழி பேசும் புலம்பெயர் கிரேக்கர்கள் வாழ்கின்றனர்.

அலுவல் மொழி நிலை[தொகு]

கிரேக்க மொழி கிரேக்க நாட்டில் அலுவல் மொழியாக உள்ளது. இது ஏறத்தாழ கிரேக்கத்தின் மொத்தச் சனத்தொகையாலும் பேசப்படுகிறது[5]. மேலும் இது துருக்கி மொழியுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது[6]. இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது[7]. இத்தாலியின் சில பகுதிகளிலும் அல்பேனியாவிலும் இது சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இயல்புகள்[தொகு]

கிரேக்க மொழியின் ஒலியனியல், உருபனியல், சொற்றொடரியல் மற்றும் சொற்றொகுதி என்பவற்றின் அடிப்படையில், இம்மொழி பண்டைய காலத்திலிருந்து தற்காலம் வரை பழைமையைப் பேணும் அதேவேளை புதுமையைப் புகுத்த இடம் கொடுப்பதாகவும் உள்ளது.

எழுத்து முறை[தொகு]

நேரான பி[தொகு]

மைசீனிய கிரேக்க காலத்தினதான அசையெழுத்து முறையான நேரான பி (Linear B) என்ற எழுத்துமுறை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இம்முறையிலான எழுத்துக்களைக் கொண்ட மைசீனிய கிரேக்கம், கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.

சைபீரிய அசையெழுத்து[தொகு]

ஏறத்தாழ நேரான பி எழுத்துமுறையை ஒத்த சைபீரிய அசையெழுத்து முறை கி.மு. பதினோராம் நூற்றாண்டளவில் சைபீரியாவில் கிரேக்க மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

கிரேக்க நெடுங்கணக்கு[தொகு]

கிரேக்க இலக்கியம்[தொகு]

கிமு 800[தொகு]

கிமு 400[தொகு]

 • The Dialogues of Plato: The Republic (Plato)
 • Corpus Aristotelicum
 • Epicureanism
 • Stoicism

மேற்கோள்கள்[தொகு]

 1. "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. பார்த்த நாள் 2007-02-18.
 2. Renfrew 2003, ப. 35; Georgiev 1981, ப. 192.
 3. Gray & Atkinson 2003, பக். 437–438; Atkinson & Gray 2006, ப. 102.
 4. "Ancient Tablet Found: Oldest Readable Writing in Europe". National Geographic Society (30 March 2011). பார்த்த நாள் 22 November 2013.
 5. "Greece". The World Factbook. Central Intelligence Agency. பார்த்த நாள் 23 January 2010.
 6. "The Constitution of Cyprus, App. D., Part 1, Art. 3". மூல முகவரியிலிருந்து 7 April 2012 அன்று பரணிடப்பட்டது. states that The official languages of the Republic are Greek and Turkish. However, the official status of Turkish is only nominal in the Greek-dominated Republic of Cyprus; in practice, outside Turkish-dominated Northern Cyprus, Turkish is little used; see A. Arvaniti (2006): Erasure as a Means of Maintaining Diglossia in Cyprus, San Diego Linguistics Papers 2: pp. 25–38, page 27.
 7. "The EU at a Glance – Languages in the EU". Europa. European Union. பார்த்த நாள் 30 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்கம்_(மொழி)&oldid=2427841" இருந்து மீள்விக்கப்பட்டது