உள்ளடக்கத்துக்குச் செல்

உருபனியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருபனியல் (Morphology) என்பது சொற்களின் அமைப்புப் பற்றி ஆராயும் மொழியியலின் துணைத் துறையாகும். பொருள் தரும் மிகச்சிறிய ஒலியக்கூறு உருபன் எனப்படுகிறது. உருபனே பொருளோடு நேரடியான தொடர்பு கொண்டது ஆகும். அன்பு, பண்பு, உலகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருபன். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பொருள் உடையன. இவற்றை மேலும் சிறு கூறுகளாகப் பிரிக்கமுடியாது.

சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொல், வேறு பல சொற்களுடன் ஓர் ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக, தொழில், தொழில்கள், தொழிலாளி என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்திருப்பர். இந்த அனுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் தொழில் என்பதற்குத் தொழில்கள் எப்படியோ, அதுபோல, போர் என்பதற்குப் போர்கள் என அவர்கள் அறிவார்கள். இது போலவே, தொழிலாளி என்ற சொல் உருவானது போல, போராளி என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும்.

வரலாறு

[தொகு]

இந்தியாவில் மிகப் பழைய காலத்திலேயே உருபனியல் சார்ந்த பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன.

பாணினி எழுதிய சமசுகிருத மொழி இலக்கண நூலான அட்டாத்தியாயியும், தமிழ் மொழி இலக்கணமான தொல்காப்பியமும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பாணினி தாதுபதம் என்ற நூலில் ஏறத்தாழ 2000 வினை வேர்களை குறிப்பிட்டுள்ளார். இவர் மேலும் சமசுகிருத சொல்லாக்கத்துக்கான 3959 விதிகளை விளக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுபோலவே கிரேக்க - உரோமானிய மொழியியல் மரபிலும், உருபனியல் பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன.

தமிழ் இலக்கணத்தில் உருபனியல்

[தொகு]
  • யாப்பு: எழுத்து, அசை
  • ஆக்கப்பெயர்கள்
  • எழுத்து: சுட்டு, வினா, இடை, விகுதி
  • வேற்றுமை உருபுகள்

பகுபத உறுப்புகள்

[தொகு]

பதம்: பகு, பகா

பகுப்பத உறுப்புகள்: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம், எழுத்துப்பேறு.

கட்டமைப்பு

[தொகு]
தமிழ்: வேர்ச்சொற்கள்+விகுதிகள்

எடுத்துக்காட்டுகள்:

  • தமிழ்+அன்
  • தமிழ்+அகம்
  • தமிழ்+ஓடு
  • தமிழ்+அர்+கள்
  • வேர்கள்: தமிழ், அகம்
  • விகுதிகள்: அன், ஓடு, அர், கள்
  • (விகுதிகள் - பின் ஒட்டுகள்)


ஆங்கிலம்: ஒட்டுகள்+வேர்கள்+ஒட்டுகள்

எடுத்துக்காட்டுகள்:

  • run+s
  • operate+ion
  • re+arrange
  • en+joy+ment
  • வேர்கள்: run, operate, arrange, joy
  • ஒட்டுகள்: s, ion, re, en, ment

உருபன்கள்

[தொகு]
  • சொற்களின் பாகங்கள் உருபன்.
  • மொழியின் மிகச்சிறிய பொருள் கொள்ளக்கூடிய உருக்கட்டமைவுகள்‌.
  • சொல்லின் அலகு
  • ஒலி மற்றும் எழுத்துக்களின் இயல்பில் அமையும்.

உருபன் வகைகள்:

1. தனி நிலைவுருபன்கள்

2. கட்டு நிலைவுருபன்கள்

எ.கா

  • உரு+ப்+உ=உருபு
  • உரு+ப்+அன்=உருபன்
  • உரு=தனி; உ, அன், ப்=பிணை.

உருபன் வகைகள்

[தொகு]

1. தனி

[தொகு]
  • 1.1.1. தனி வேர்

2. பிணை

[தொகு]
  • 1.2.1. வேற்றுமை
    • 1.2.1.1. திணை, பால், எண், இடம், காலம்
    • 1.2.1.2. பெயர், வினை, இடை, உரி
  • 1.2.2. ஆக்கம்
    • 1.2.2.1. பெயர், வினை, உரி
  • 1.2.3. பிணை வேர்

தனி உருபன்கள்

[தொகு]
  • தனி உருபன்கள்- பகாப்பதம்- மேலும் கூறுபிரிக்க முடியாத தனியாக பொருள் தரக்கூடிய சொல்.
  • எ.கா: வேர்கள்=வேர்+கள்; இங்கு வேர் என்பது தனி வேர்ச்சொல்

பாடலில் உள்ள தனிவேர்ச்சொற்கள்

பாடல்: நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல் போலே… யார் எனை அசைத்தே ரசித்தாரோ… சலிக்காமல் பேரலை மேலே விளையாடும் காகம் போலே… யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்… -பயணம், கார்த்திக் நேதா

தனி வேர்கள்: நான், என், உள், அசை, ஊஞ்சல்*, போல், யார், என், அசை, ரசி, சலி, அலை, மேல், விளையாடு*, காகம், போல், யார், என், துணி, படை,

பிணை உருபன்கள்

[தொகு]
  • மற்றொரு சொல்லுடன் சேரந்தால் மட்டுமே பொருள் தரும்.
  • பிணைந்து மட்டுமே வரும்.
  • ஒட்டுகள்: முன், உள், பின்(விகுதி)
  • தமிழில் இடைநிலை உருபுகள்
  • எ.கா. ஆங்கிலம்: Morphemes- eme, s
  • பிணை வேர்கள்: ject- eject, inject, project,
  • முளை வேர்கள்: *peh₂, அழ்(அழ்+அகு, அழ்+உ, அழ்+இ, அழ்+ஐ)


வகை:

1. வேற்றுமை உருபன்கள் (அ) திரிபுகள்

2. ஆக்க உருபன்கள்

3. பிணை வேர்கள்

வேற்றுமை உருபன்கள்

[தொகு]
  • வேர்ச்சொல்லின் சொல் வகைப்பாடு மாறாமல் வேறுபடுத்திக் காட்டும் உருபன்கள் வேற்றுமை உருபன்கள் ஆகும்.
  • எ.கா.:

சொல்லின்=சொல்+இன்

  • வேர்: சொல்(பெயர்).
  • வேற்றுமை: இன்.

இன் ஆனது வேரான சொல் எனும் பெயர்ச்சொல்லை வேறு வினைச்சொல்லாகவோ உரிச்சொல்லாகவோ மாற்றவில்லை.

நடந்தான், சொன்னான், அறிவேன்.

  • வேர்: நட, சொல், அறி(வினை).
  • வேற்றுமை: ஆன், ஏன்.
  • சொல்லில் திணை, பால், எண், இடம், காலம் போன்றவற்றை வேறுபடுத்த கட்டடமைக்கப்படுவது.
  • இலக்கண வகைப்பாட்டினை மாற்றாது.


வகைகள்:

திணை, பால், எண், இடம், காலம்

  • திணை, பால் உருபன்கள்
  • எண் உருபன்கள்
  • இட உருபன்கள்
  • கால உருபன்கள்

பெயர், வினை

  • பெயர் வேற்றுமை உருபன்கள்
  • வினை வேற்றுமை உருபன்கள்


சுட்டு, வினா

  • சுட்டு உருபன்கள்
  • வினா உருபன்கள்


---

எடுத்துக்காட்டுகள்: தமிழ்

  • மரபுக்கு=மரபு+கு
  • மரபு - பெயர்ச்சொல்
  • மரபுக்கு- பெயர்ச்சொல்
  • கு- நான்காம் வேற்றுமை உருபு.

எடுத்துக்காட்டுகள்: ஆங்கிலம்

  • Walk=walk+ed
  • walk- வினைச்சொல்
  • walked- வினைச்சொல்
  • ed- வேற்றுமை உருபு

ஆங்கிலத்தில் வேற்றுமை உருபன்கள்

[தொகு]
  • ஆங்கிலத்தில் உள்ள சில வேற்றுமை உருபன்கள் .
பிணை உருபன்கள் இயக்கம் எ.கா
-s பெயர் பன்மை book → books
-’s பெயர் உடைமை girl → girl’s
-s 3ம் நபர் ஒருமை (நிகழ்கால வினை) run → runs
-ed இறந்த காலம் (வினை) walk → walked
-en இறந்தகால வினையெச்சம் (வினை) eat → eaten
-ing நிகழ்கால வினையெச்சம்/செயற்பெயர் தொடர் (வினை) read → reading
-er ஒப்பீடு (உரி) fast → faster
-est மீவுயர் (உரி) tall → tallest

---

திணை, பால், எண், இடம், காலம்

[தொகு]
  • திணை, பால் வேற்றுமைகள்: (அன், ஆன்),(அள், ஆள்), (அர், ஆர்).
  • எண் வேற்றுமைகள்: கள், s, es
  • இட வேற்றுமைகள்: {தன்மை{ஏன், ஓம்}, முன்{ஆய், த்ஈர்}, 3{ஆன், ஆள், ஆர்}}
  • கால வேற்றுமைகள்: தமிழில் இடைநிலைகள் காலத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இறந்த கால இடைநிலைகள்: த், ட், ற், இன்; நிகழ்கால இடைநிலைகள்: கிறு, கின்று, ஆநின்று; எதிர்கால இடைநிலைகள்: ப், வ்
  • இடம்+காலம்: ஏன், ஓம்

---

பெயர் வேற்றுமை உருபன்கள்

[தொகு]
  • பெயர் வேற்றுமை உருபுகள்: {ஐ, ஆல், கு, இன், அது, கண்}, {கள், s, es}
  • இதர: இல்-தமிழில்; அ-தமிழ; ஓடு-தமிழோடு; உ- தமிழு*, ஏ-தமிழே, மணியே, உறவே, குணமே, மனமே, பணமே*


---

வினை வேற்றுமை உருபன்கள் (வினைத்திரிபுகள்)

[தொகு]

முற்று:

வினைமுற்று விகுதிகள்: அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார் அ, ஆ, கு, டு, து, று,

தெரிநிலை வினைமுற்று விகுதிகள்: ஆள், ஆன்

குறிப்பு வினைமுற்று விகுதிகள்: அன், ஆன்

ஏவல் வினைமுற்று விகுதிகள்: உ, இ, அ,

வியங்கோள் வினமுற்று விகுதிகள் : க. இய, இயர், இ, அ என்பன.

--

ஆல்

நடந்தால், அசைந்தால், எழுந்தால், நகர்ந்தால், மதித்தால்

ஆல்

நிபந்தனை வினை விகுதி

வினை வேற்றுமை

--

எச்சம்:

பெயரெச்ச விகுதிகள் : அ, உம் என்பன.

வினையெச்ச விகுதிகள்: உ, இ, ப், பு. ஆ, அ, இன், ஆல், கால் என்பன.


அ: இருக்க, செய்ய, நடக்க

உ: இருந்து, செய்து, நடந்து

---

  • வினை வேற்றுமை உருபுகள்: ed, ing, s, en, முற்று உருபுகள்{தன்மை{ஏன், ஓம்}, முன்{ஆய், த்ஈர்}, 3{ஆன், ஆள், ஆர்}}, எச்ச உருபுகள்{ வினையெச்ச{உ, இ}, பெயரெச்ச{அ}}

---

ஏ:

வினை விகுதி: (உம்+ஏ) ஆகுமே, சேருமே, நகருமே, அசையுமே, விளையுமே.

---

வினா உருபன்கள்

[தொகு]

வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள்.

வினா எழுத்துக்கள்: எ, யா, ஆ, ஓ, ஏ

மொழியின் முதலில் வருபவை: எ, யா எ.கா: எங்கு, யாருக்கு

இறுதியில் வருபவை: ஆ, ஓ எ.கா: பேசலாமா, தெரியுமோ

முதலிலும் இறுதியிலும் வருபவை: ஏ எ.கா: ஏன், நீதானே

ஆக்க உருபன்கள்

[தொகு]
  • ஒரு சொல்லிலிருந்து பிற சொற்களை உருவாக்கும்.
  • சொல்லின் இலக்கண வகைப்பாட்டினை மாற்றும்.
  • வகை: பெயராக்கம், வினையாக்கம், உரியாக்கம்
எடுத்துக்காட்டுகள்
தமிழ்
சொல் உருபன்கள் வகை மாற்றம்
ஆக்கு ஆக்கு வினைச்சொல்
ஆக்கம் ஆக்கு+அம் வினைச்சொல்→பெயர்ச்சொல்
எடுத்துக்காட்டுகள்
ஆங்கிலம்
சொல் உருபன்கள் வகை மாற்றம்
health health அடிப் பெயர்
healthy health+y பெயர்→ பெயர் உரி
healthily healthy+ly பெயர் உரி→ வினை உரி
healthiness health+y+ness பெயர் உரி→ பெயர்


பெயர் ஆக்க உருபன்கள்

[தொகு]
  • சொற்களை பெயர்ச்சொற்களாக மாற்றும் உருபன்கள்.


தமிழில் பெயர் ஆக்க உருபன்கள்

தொழிற்பெயர் விகுதிகள்

அல், தல், அம், ஐ, கை, வை, மை கு, பு, வு, தி, சி, வி

பண்புப் பெயர் விகுதிகள்

மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர்

எ.கா: நன்மை - மை தொல்லை - ஐ மாட்சி - சி மாண்பு - பு மழவு - வு நன்கு - கு நன்றி - றி நன்று - று நலம் - அம் நன்னர் - அர்

---

ஆங்கிலத்தில் பெயர் ஆக்க உருபன்கள்

ஆங்கிலத்தில் பெயராக்கவுருபன்கள் நீண்டு கொண்டே போகிறது.

உருபன் சொல் வகை → பெயர் பொருள் / இயக்கம் எ.கா(கள்)
-er / -or வினை → பெயர் வினைபுரியும் நபர் teach → teacher, act → actor
-ist பெயர்/வினை → பெயர் ஒரு நம்பிக்கை அல்லது செயலுடன் தொடர்புடைய நபர் art → artist, Marx → Marxist
-ian பெயர் → பெயர் அதற்கு உரிய, நிபுணர் history → historian, music → musician
-ant / -ent வினை → பெயர் வினைபுரியும் பொருள் (அ) நபர் assist → assistant, depend → dependent
-ee வினை → பெயர் வினைப் பெறுநர் employ → employee, train → trainee
-ment வினை → பெயர் நிகழ்வு (அ) விளைவு develop → development, judge → judgment
-tion / -sion வினை → பெயர் செயல் அல்லது செயல்முறை act → action, decide → decision
-ance / -ence வினை → பெயர் நிலை அல்லது தரம் resist → resistance, differ → difference
-ity / -ty பெயர் உரி → பெயர் நிலை, தரம் அல்லது வரைமுறை real → reality, safe → safety
-ness பெயர்‌உரி → பெயர் தரம் (அ) நிலை kind → kindness, dark → darkness
-ship பெயர் → பெயர் நிலை, தன்மை அல்லது திறமை friend → friendship, leader → leadership
-hood பெயர் → பெயர் நிலை, தன்மை அல்லது பருவம் child → childhood, brother → brotherhood
-dom பெயர் → பெயர் நிலை, எல்லை, (அ) வரம்பு free → freedom, king → kingdom
-cy / -acy பெயர் உரி → பெயர் நிலை (அ) தரம் private → privacy, accurate → accuracy
-al வினை → பெயர் செயல் (அ) செயல்முறை arrive → arrival, renew → renewal
-ure வினை → பெயர் செயல் (அ) செயல்முறை depart → departure, fail → failure
-ing வினை → பெயர் பெயர்த்தொடர் (gerund) read → reading, swim → swimming
-age வினை → பெயர் வினை விளைவு break → breakage, post → postage
-ism பெயர்/வினை → பெயர் வழிமுறை, நம்பிக்கை அமைப்பு அல்லது இயக்கம் Buddha → Buddhism, race → racism
-ology பெயர் → பெயர் பற்றிய கல்வி bio → biology, psych → psychology

வினை ஆக்க உருபன்கள்

[தொகு]

வினைச்சொற்களை ஆக்கும் உருபன்கள்

ஆங்கிலத்தில்:

  • முன்னொட்டுக்கள்: re, en
  • பின்னொட்டுக்கள்: ize, fy


உரி ஆக்க உருபன்கள்

[தொகு]
  • உரிச்சொற்களை உருவாக்கும் உருபன்கள்
  • ஆக்க வகை: பெயர் உரி, வினை உரி

தமிழில் உரி ஆக்க உருபன்கள்

பெயர் உரி ஆக்க உருபன்: ஆன, இய

எ.கா:

முறை+ஆன=முறையான

முறையான வழி

நுண்+இய=நுண்ணிய

நுண்ணிய துளை


--

வினை உரி ஆக்க உருபன்: ஆக

எ.கா:

சொல்+ஆக=சொல்லாக

சொல்லாக எழுது


ஆங்கிலத்தில் உரி ஆக்க உருபன்கள்

  • உரி உருபுகள்
  • பெயர் உரி உருபுகள்
  • முன்:
ஆங்கிலம்: un-, in-, im-, il-, ir-
  • பின்:
ஆங்கிலம்: -al, -ive, -ful, -less, -ous, -ic, -ical, -y, -ish, -en,-able, -ible, -ary,
  • வினை உரி உருபுகள்
  • பின்
-ly, -wise, -ward /-wards, -ways, -fold

பிணை வேர்

[தொகு]

{அ, இ, உ, எ, ஒ}+{மெய்}= முளை வேர்(சிலவை தனி வேர்கள்)


  • அக்>அக்அம்>அகம்
  • அழ்>அழகு, அழு, அழி
  • உல்>உலகு

உருபன் அடையாளம்

[தொகு]

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

மற்றும்=மற்று+உம்

தொடர்ப்பாடு=தொடர்+பாடு

எவன்கொல்=எவன்+கொல்

பிறப்பறுக்கல்=பிறப்பு+அறுக்கல்

பிறப்பு=பிற+உ

அறுக்கல்=அறு+அல்

உற்றார்க்கு=உற்று+ஆர்+கு

உடம்பும்=உடம்பு+உம்

மிகை=மிகை.

+(பிற-ப்+இற), (அறு-அற்+உ), (உற்று-உற்+உ), (உடம்பு-உட்+அம்+ப்+உ*)

தனி: மற்று, தொடர், எவன், பிற, அறு, உற்று, உடம்பு, மிகை.

பிணை: உம், பாடு, கொல், அல், ஆர், கு, உம்.


---

அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும் சித்தன்ன கோயிலு சித்திரமே

நெனப்பா வந்து சக்கரம் சுத்துற அத்தரு கொட்டுன ரத்துனமே

--

சித்திரம்+ஏ, இரத்தினம்+ஏ

  • ஏ=பெயர் வேற்றுமை, முன்னிலை இடம், உருவகம்

--

ஆ-ஆல்/ஆக

ஆல்: அசஞ்சா, ஆக: நினைப்பா

--

அசை+ஆல்

  • ஆல்= நிபந்தனை வினை வேற்றுமை

--

நினை+ஆக

  • ஆக=பெயர் வேற்றுமை

...

பெயரியல் உருபன்கள்

[தொகு]
  • வேதியியல் பெயர் உருபன்கள்
  • அறிவியல் பெயர் உருபன்கள்
  • இருப்பியல் முறைப் பெயரியல் உருபன்கள்
  • அலகுச் சொற்கள்
  • எண்ணுருபன்கள்: மைக்ரோ10^-6, நானோ10^-9, மும்மம்×3(Tri)

வினையியல் உருபன்கள்

[தொகு]
  • கணித வினைக் குறிகள்

கணிதவியல் உருபன்கள்

[தொகு]
  • இயக்கி: {[()]}^*/ +- , வினைக்குறிகள்.(வினை)
  • இயங்கி: எண்கள், நிலையான மற்றும் மாறுபடும் மதிப்புகள்.(பெயர், உரி)

பதங்கள்

[தொகு]

ஒலியன்- Phoneme கீற்றம், வரியன்- Grapheme

சொற் தொகுதி/சொற்களஞ்சியம்-Lexicon

அகராதிச் சொல்-Lemma சொல்லன்-Lexeme அடையாளப் பிரிகை-Token

உருபன்- Morpheme வேர்-Root அடி- Base தண்டு-Stem

ஒட்டு-affix பின்னொட்டு-suffix முன்னொட்டு-prefix உள்ளொட்டு-infix

ஆக்கம்-Derivation திரிபு/வேற்றுமை-Inflection

பெயர்* வேற்றுமை -Declension

வினை வேற்றுமை -Conjugation

---

தனி உருபன்- Free Morpheme பிணை/சேர் உருபன்-Bound Morpheme

தனி வேர்- Free Root

திணை-Class பால்-Gender எண்-Number இடம்-Place காலம்-Time/Tense

உசாத்துணைகள்

[தொகு]
  • Szczegielniak, Adam. "Morphology: The Words of Language" (PDF). Harvard Scholar (Lecture Slides). Harvard University. Retrieved 28 May 2025.
  • "Text Processing, Tokenization & Characteristics – IST 441 Information Retrieval and Search" (PPTX). IST 441 Course Materials (Lecture Slides). The Pennsylvania State University. Retrieved 28 May 2025.
*"Part 02 – Linguistics (Introduction to Natural Language Processing)" (PDF). Leibniz University Hannover – Institute of Artificial Intelligence (Lecture Slides). Leibniz Universität Hannover. Retrieved 28 May 2025.

மேலதிக வாசிப்பு

[தொகு]
  • Text Processing, Tokenization & Characteristics, IST 441 Information Retrieval and Search, The Pennsylvania State University – PPTX
  • தாது பதம், பாணினி, மத்திய சமக்கிருத பல்கலைக்கழகம், கல்வி அமைச்சகம், இந்தியா – PDF
  • இராசேந்திரன் சங்கர வேலாயுதன் – Archive.org
  • வகை: தமிழ் உருபன்கள் - விக்சனரி– Tamil Morphemes
  • இடைச்சொல், உரிச்சொல் - 9ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகம்- பக்கம்:139
  • பகுபத உறுப்புகள் - 11ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - பக்கம்: 72-
  • சங்க இலக்கியம் - ச. அகத்தியலிங்கம்
  • இலக்கண வரலாறு - இரா. இளங்குமரன்
  • அம் விகுதி பெற்ற சொற்கள் - தமிழ் விக்சனரி அம் விகுதி பெற்ற சொற்கள்
  • Morphology: Forms | பிரசாந்த் க —Word Formation
  • Morphology - உருபனியல் | பிரசாந்த் க —Morphology
  • உயிரெழுத்து உருபன்கள்
  • பிரசாந்த் க. (2025, November 9). Morphology. Archived at Internet Archive. Morphology
  • குறிப்புகள்: மொழி—மொழி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபனியல்&oldid=4402900" இலிருந்து மீள்விக்கப்பட்டது