உக்ரைன்
Ukraine உக்ரைன் Україна Ukrayina |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண்: Ще не вмерла України ні слава, ні воля (உக்ரைனிய மொழி) உக்ரைனின் எழுச்சி இன்னும் புதைக்கப்படவில்லை, அதுபோல் விடுதலையும் |
||||||
தலைநகரம் | கீவ் | |||||
பெரிய நகர் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | உக்குரைனியம் | |||||
இனக் குழு (2001) |
|
|||||
மக்கள் | உக்ரைனியர் | |||||
அரசாங்கம் | ஒருமுக பகுதி-சனாதிபதிக் குடியரசு | |||||
• | அரசுத்தலைவர் | வோலோடிமிர் ஜெலன்ஸ்கி | ||||
• | பிரதமர் | ஒகெல்சி ஒன்சாருக் | ||||
• | நாடாளுமன்றத் தலைவர் | திமீத்ரோ இரசூம்கொவ் | ||||
சட்டமன்றம் | விர்கோனவ ராடா | |||||
வரலாறு | ||||||
• | கீவன் உருசு அமைப்பு |
882 | ||||
• | கிறித்துவமயமாக்கல் | 988 | ||||
• | உருதேனியா இராச்சியம் | 1199 | ||||
• | மங்கோலிய ஆக்கிரமிப்பு | 1238–1240 | ||||
• | இலித்துவேனிய இராச்சியம் அமைப்பு | 1320–1349 | ||||
• | உருசியாவின் கீழ் தன்னாட்சி உக்ரைனிய மக்கள் குடியரசு |
23 (10) சூன் 1917 | ||||
• | விடுதலை அறிவிப்பு |
22 (9) சனவரி 1918 | ||||
• | மேற்கு உக்ரைனிய மக்கள் குடியரசு | 13 நவம்பர் 1918 | ||||
• | உக்ரைனிய ஒன்றிணைப்பு | 22 சனவரி 1919 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 603,628 கிமீ2 (45-வது) அல்லது 233,013/ 223,013 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 7 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2019 கணக்கெடுப்பு | ![]() (கிரிமியா மூவலந்தீவு, செவசுத்தபோல் தவிர்த்து) (33-வது) |
||||
• | 2001 கணக்கெடுப்பு | 48,457,102[2] | ||||
• | அடர்த்தி | 73.8/km2 (115-வது) 191/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2019 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | ![]() |
||||
• | தலைவிகிதம் | ![]() |
||||
மொ.உ.உ (பெயரளவு) | 2019 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | ![]() |
||||
• | தலைவிகிதம் | ![]() |
||||
ஜினி (2016) | ![]() தாழ் · 18-வது |
|||||
மமேசு (2018) | ![]() உயர் · 88-வது |
|||||
நாணயம் | ஹிருன்யா (₴) (UAH) | |||||
நேர வலயம் | கிஐநே (ஒ.அ.நே+2[6]) | |||||
• | கோடை (ப.சே) | கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3) | ||||
வாகனம் செலுத்தல் | இடக்கை | |||||
அழைப்புக்குறி | +380 | |||||
இணையக் குறி |
|
|||||
a. | திசம்பர் 1 இல் விடுதலைப் பிரகடனம், திசம்பர் 26 இல் முழுமையான விடுதலை |
உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (கேட்க)) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.[7] இதன் எல்லைகளாக வடகிழக்கே உருசியா; வடக்கே பெலருஸ்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி; தெற்கே உருமேனியா, மல்தோவா, கருங்கடல் ஆகியனவும் அமைந்துள்ளன. கிரிமியாவை 2014 இல் உருசியா கையகப்படுத்தியமை தொடர்பாக உக்ரைன் அந்நாட்டுடன் தற்போது எல்லைச் சர்ச்சையில் உள்ளது.[8] கிரிமியா உட்பட உக்ரைனின் மொத்தப் பரப்பளவு 603,628 கிமீ² ஆகும்.[9] இது ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாகவும், உலகின் 46-வது பெரிய நாடாகவும் உள்ளது. கிரிமியா தவிர்த்து,, உக்ரைனின் மக்கள்தொகை 42 மில்லியன் ஆகும்.[1] இது உலகின் 32-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். கீவ் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் ஆட்சி மொழி உக்ரைனியம் ஆகும். பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர்.
பெயர்க்காரணம்[தொகு]
வரலாற்று பாரம்பரியப்படி,[10] உக்ரைன் என்பது, எல்லை பகுதி[11] எனும் பொருள் கொண்ட ஸ்லாவிக் மொழியான உக்ரைனாவிலிருந்து வந்தது. இச்சொல்லானது கிழக்கு ஸ்லாவிக் மொழியில், 1187ம் ஆண்டிலிருந்து[12] வழக்கில் உள்ளது. உக்ரைனின் பன்மை மொழியான உக்ரைனி மொழியை, மாஸ்கோவிலும், லுதியானாவிலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அபாதிஸ் நகர மக்கள் தெற்கு நோக்கி பயணித்ததால் இச்சொல்லானது, சுலோபடா உக்ரைனுக்கும் பி்ன்னர் மத்திய உக்ரைனுக்கும் பயணித்தது. இறுதியில் பாரம்பரியமிக்க இப்பெயரானது, இரசியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதிக்குச் சூட்டப்பட்டது[13].
பல உக்ரேனிய வரலாற்று ஆய்வாளர்கள், உக்ரேனியா எனும் சொல்லை, தாய்நாடு, நம்நாடு என மொழி பெயர்த்தனர்[14][15][16][17]. அத்துடன், உக்ரேன் என்பதற்கு தனி அர்த்தம் வேண்டும் என்பதற்காக எல்லைநாடு எனவும் பரிசீலித்தனர்[14]. இறுதியாக, உக்ரேனிய மூலத்தின்படியும், வரலாற்றுச் சான்றுகளின்படியும், உக்ரைனின் பெயர்க் காரணம், எல்லைநாடு என ஒருமனதாக தீர்மானித்தனர்[12][18].
நிர்வாகப் பிரிவுகள்[தொகு]
உக்ரேனிய சட்டத்தின்படி, மாநிலங்கள் அனைத்தும் மாவட்டங்களாகப் பிரித்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
உக்ரைன் நாடானது, இருபத்துநான்கு மாகாணங்களாகவும் ஒரு தன்னாட்சிக் குடியரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர், நாட்டின் தலைநகரான கியிவ் மற்றும் சேவஸ்டோபோல் ஆகிய இரண்டிற்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் இருபத்துநான்கு மாகாணங்களும் 490 மாவட்டங்களாகவும், இரண்டாம் நிலை நிர்வாக அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பரப்பளவு 1,200 சதுர கிலோமீட்டர்கள் (460 sq mi)வாகவும், ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள்தொகை 52,000மாகவும் உள்ளது[19].
மாவட்டங்களின் கீழ் இயங்கும் நகர்ப்புறங்கள் அனைத்தும், மக்கட்தொகை மற்றும் பொருளாதாரப்படி உருவாக்கப்பட்டு்ள்ளன. வருவாயில் குறைவான பகுதிகள் அனைத்தும் கிராமப்புறங்களாக பிரிக்கப்பட்டன. நகர்ப்புறங்களிலிருந்து, அடிப்படைத் தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
|
கலாச்சாரம்[தொகு]
உக்ரைனின் கலாச்சாரமான உட்கட்டமைப்பு, இயல் மற்றும் இசை ஆகியவை தனது கிழக்கு மற்றும் மேற்கு அண்டைநாடுகளைப் பின்பற்றுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், கிருத்தவ மதத்தைச் சார்ந்தராக உள்ளனர்[20]. பாலின வேறுபாட்டை பாரம்பரியமாக வைத்திருக்கும் இந்நாட்டின் குழந்தைகளை அவர்களது தாத்தா பாட்டிகளே பராமரித்து வருகின்றனர்[21]
விருந்தோம்பல்[தொகு]
உக்ரைனின் பாரம்பரிய உணவாக கோழி, பன்றி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவை உள்ளது. சைவ விரும்பிகளுக்காக உருளைக்கிழங்கு, தானியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கனிகளை உண்கின்றனர். பிரசித்திபெற்ற உணவுகளாக வாரென்கி ( அவித்த காளான், உருளைக்கிழங்கு மற்றும் பாலாடை அல்லது செர்ரி ஆகியவைகளைக் கலந்த அவியல் ), போர்ஸ்சித் ( முட்டைக்கோசு மற்றும் காளான் அல்லது இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு பானம் ), ஓலுப்ட்சி ( மசித்த முட்டைக்கோசுடன் அரிசி, கேரட் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு உணவுவகை ). மேலும் உக்ரைனின் சிறப்பு உணவுகளாக சிக்கன் கியிவ் மற்றும் கியிவ் கேக் ஆகியவையுள்ளன. பானங்களாக பழச்சாறு, பால், மோர், சுத்தமான குடிநீர், தேயலைச்சாறு, குழம்பி மற்றும் இதர உ.பா.க்களும் உள்ளது[22].
ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக[தொகு]
கிழக்கு உக்ரைன் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தவிர, ஏனைய பகுதியினர் எல்லாருமே உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அண்டை நாடான போலந்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், வளர்ச்சியும் உக்ரைன் மக்கள் மத்தியில் அதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. குறைந்தது 17 பில்லியன் டாலர் நிதியுதவி பெற முடிந்தால் மட்டுமே 2014ஆம் நிதியாண்டுக்குள் சந்திக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையை உக்ரைன் எதிர்கொள்ள முடியும்.ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தொகையை அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பது மட்டுமல்ல, உக்ரைனின் சந்தை முழுமையாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்பட்டது . அப்படி நேர்ந்தால், உக்ரைனின் உள்நாட்டுத் தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் இருந்தது.உக்ரைனின் இந்த தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட ரஷ்யா, உக்ரைன் அரசுப் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்து, ஐரோப்பிய யூனியனுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்து விட்டது. இதனை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.[23]
வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்[தொகு]
உக்ரைன் அமைப்பின் அடித்தளமாக, மாநிலங்களை பல பிரதேசங்களாக பிரித்தனர். இந்த பிரதேசங்களின் பெரும்பாலானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன.
உக்ரைனின் வரலாற்று வரைபடங்கள் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
ஆள்கூறுகள்: 49°N 32°E / 49°N 32°E
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() ![]() |
![]() |
![]() | ||
| ||||
![]() | ||||
![]() ![]() |
கருங்கடல் | அசோவ் கடல் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Population (by estimate) as of June 1, 2019. Average annual populations January-May 2019".
- ↑ "Population by ethnic nationality, 1 January, year". Ukrainian Office of Statistics. மூல முகவரியிலிருந்து 17 December 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 April 2010.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "World Economic Outlook Database, April 2019". அனைத்துலக நாணய நிதியம்.
- ↑ "GINI index (World Bank estimate)". உலக வங்கி.
- ↑ "Ukraine: Human Development Indicators 2019". United Nations Development Programme (2019). பார்த்த நாள் 25 December 2019.
- ↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."" (uk). korrespondent.net (18 October 2011). பார்த்த நாள் 31 October 2011.
- ↑ "The World Factbook – Ukraine". நடுவண் ஒற்று முகமை (7 January 2014). பார்த்த நாள் 23 January 2014.
- ↑ Simpson, John (19 March 2014). "Russia's Crimea plan detailed, secret and successful".
- ↑ "Ukraine – United Nations Statistics Division" (2016). பார்த்த நாள் 6 September 2016.
- ↑ Русанівський, В. М. Українська мова // Енциклопедія «Українська мова». — К., 2000.
- ↑ "З Енциклопедії Українознавства; Назва "Україна"". Litopys.org.ua. பார்த்த நாள் October 31, 2011.
- ↑ 12.0 12.1 Ф.А. Гайда. От Рязани и Москвы до Закарпатья. Происхождение и употребление слова «украинцы» // Родина. 2011. № 1. С. 82–85. [1]
- ↑ See works of Ivan Vyshenskyi [2] or Kievan Synopsis by Innokentiy Gizel
- ↑ 14.0 14.1 Григорій Півторак. Походження українців, росіян, білорусів та їхніх мов.
- ↑ Андрусяк, М. Назва «Україна»: «країна» чи «окраїна». Прага, 1941; Історія козаччини, кн. 1—3. Мюнхен
- ↑ Шелухін, С. Україна — назва нашої землі з найдавніших часів. Прага, 1936
- ↑ Ф. Шевченко: термін "Україна", "Вкраїна" має передусім значення "край", "країна", а не "окраїна": том 1, с. 189 в Історія Української РСР: У 8 т., 10 кн. — К., 1979.
- ↑ The Comprehensive Dictionary of the Contemporary Russian Language, 2006, T.F. Yefremova.
- ↑ "Regions of Ukraine and their divisions" (Ukrainian). Verkhovna Rada. பார்த்த நாள் December 24, 2007.
- ↑ "State Department of Ukraine on Religious". 2003 Statistical report. பார்த்த நாள் January 27, 2008.
- ↑ "Cultural differences". Ukraine's Culture. பார்த்த நாள் January 27, 2008.
- ↑ Stechishin, Savella. "Traditional Foods". Encyclopedia of Ukraine. பார்த்த நாள் August 10, 2007.
- ↑ "யூரேஷியக் குழப்பம்!". தினமணி (21 திசம்பர் 2013). பார்த்த நாள் 13 சனவரி 2014.