உள்ளடக்கத்துக்குச் செல்

சுமி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமி மாகாணம்
Сумська область
மாகாணம்
சும்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
நாடு உக்ரைன்
தலைநகரம்சுமி
அரசு
 • ஆளுநர்டிமிட்ரோ சிவிஸ்கையி[2]
 • சுமி மாகாணச் சட்டமன்றம்64 உறுப்பினர்கள்[3] seats
 • தலைவர்விளாடிமிர் தோக்கர்
பரப்பளவு
 • மொத்தம்23,834 km2 (9,202 sq mi)
 • பரப்பளவு தரவரிசை16-ஆம் இடம்
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம் 10,53,402
 • தரவரிசை19-ஆம் இடம்
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் குறியீடு
40000-41999
வட்டார குறியீடு+380-54
ஐஎசுஓ 3166 குறியீடுUA-59
மாவட்டங்கள்18
நகரங்கள் (மொத்தம்)15
• மண்டல நகரங்கள்7
நகர்புற குடியிருப்புகள்20
கிராங்கள்1492
FIPS 10-4UP21
இணையதளம்sorada.gov.ua

சுமி மாகாணம் (Sumy Oblast) உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உருசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மாகாணம். இதன் தலைநகரம் சுமி நகரம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 10,53,402 ஆகும். இதன் பிற முக்கிய நகரங்கள் கோனோடாப், ஒக்டிர்கா, ரோம்னி, சோஸ்தகா ஆகும். இம்மாகாணத்தின் 600 இடங்களில் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இது வேளாண் பயிர்களை உற்பத்தி செய்கிறது. 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது.

புவியியல்

[தொகு]

23,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாகாணத்தில் வடகிழக்கிலும், கிழக்கிலும் உருசியா, தென்மேற்கில் போல்தாவா மாகாணம், தெற்கில் கார்கிவ் மாகாணம், மேற்கில் செர்னிகிவ் மாகாணம் உள்ளது. தேஸ்னா ஆறுடன் 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இம்மாகாணம் 18 மாவட்டங்களும், 15 நகரங்களும், 7 நகராட்சிகளும், 20 நகர்புற குடியிருப்புகளும், 1492 கிராமங்களும் கொண்டது.

சுமி மாகாணத்தின் வரைபடம்

பொருளாதரம்

[தொகு]

இம்மாகாணத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், இயந்திரவியல் தொழிற்சாலைகள், வேளாண் இயந்திரக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், இரும்புச் சுரங்கங்கள் கொண்டது. இம்மாகாணம் 237 பெரிய அளவிலான தொழிற்சாலைகளும், 327 சிறிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டுள்ளது.

இம்மாகாணத்தின் முக்கிய விளைபொருட்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சூரியகாந்தி விதைகள், உருளைக்கிழங்கு ஆகும். மேலும் இறைச்சி, பால் பொருட்கள், முட்டை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. (in உக்குரேனிய மொழி) Zelensky appointed the head of the Sumy Regional State Administration, Ukrayinska Pravda (25 June 2021)
  3. (in உக்குரேனிய மொழி) List of members of the Sumy Regional Council of the Sixth Convocation பரணிடப்பட்டது 2020-10-01 at the வந்தவழி இயந்திரம், Official website Sumy Parliament

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமி_மாகாணம்&oldid=4110863" இலிருந்து மீள்விக்கப்பட்டது