நேர வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலகின் நியம நேர வலையங்கள்

நேர வலயம் (Time Zone) எனப்படுவது நில உருண்டையில் வடக்கு-தெற்காக பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் ஒவ்வொரு நிலப்பிரிவிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரமாகக் கொள்ளும் திட்டம் ஆகும். நில உருண்டையானது தன் தென்வடலான (தெற்கு-வடக்கான) சுழல் அச்சை நடுவாகக்கொண்டு சுழலுவதால் ஒரிடத்தில் கதிரவன் உச்சியின் இருக்கும் பொழுது நில உருண்டையின் மறு புறம் இருளாக இருக்கும். எனவே நில உருண்டையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்கள் கொள்ளுவது இயற்கை. இதனை ஒரு சீர்தரப்படுத்தி உலகம் முழுவதற்குமாக நேரத்தை வரையரை செய்தது நேர வலயத் திட்டம் ஆகும். கனடா நாட்டினராகிய சர். ஸ்டான்ஃவோர்டு ஃவிளெமிங் (Stanford Fleming) என்பவர் முதன் முதலாக உலகம் முழுவதற்குமான நேர வலயத் திட்டத்தை 1876இல் அறிவித்தார். நில உருண்டையில் தென்வடலாகச் செல்லும் நில நெடுவரைக் கோடுகளில் 15 பாகைக்கு (15°), ஒரு நேரமாகக் கொண்டு, ஒவ்வொரு 15° நிலப்பகுதிக்கும் ஒரு மணி நேரம் வேறுபாடு என்று நிறுவி உலகம் முழுவதற்குமாக மொத்தம் 24 நேர வலயப் 24 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வலயமும் அதனுடைய அயல் வலயத்தில் இருந்து ஒரு மணி நேரம் வேறுபடுகின்றன. நேரவலயக் கோடுகள் எப்போதும் ஒழுங்காக அமைவதில்லை காரணம் அவை நாடுகள் அல்லது நிர்வாக கட்டமைப்புகளை மையமாகக் கொண்டே வரையப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர_வலயம்&oldid=2243434" இருந்து மீள்விக்கப்பட்டது