பின்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்லாந்துக் குடியரசு
கொடி of பின்லாந்து
கொடி
சின்னம் of பின்லாந்து
சின்னம்
நாட்டுப்பண்: 
Maamme (பின்னிய மொழி)
Vårt land (சுவீடிய மொழி)
(ஆங்கில மொழி: "Our Land")
EU-Finland (orthographic projection).svg
EU-Finland.svg
தலைநகரம்எல்சிங்கி
60°10′15″N 24°56′15″E / 60.17083°N 24.93750°E / 60.17083; 24.93750
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள்
இனக் குழுகள்
(2020)[1][2]
சமயம்
(2020)[3]
மக்கள்பின்னியர்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு[4]
சௌலி நீனிசுட்டோ
சன்னா மரீன்
மத்தி வன்கானென்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
விடுதலை 
29 மார்ச் 1809
6 டிசம்பர் 1917
சனவரி – மே 1918
17 சூலை 1919
30 நவம்பர் 1939 – 13 மார்ச் 1940
25 சூன் 1941 – 19 செப்டெம்பர்r 1944
• ஐ.ஒ. இணைவு
1 சனவரி 1995
பரப்பு
• மொத்தம்
338,455 km2 (130,678 sq mi) (65வது)
• நீர் (%)
9.71 (2015)[5]
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
Neutral increase 5,536,146[6] (116வது)
• அடர்த்தி
16/km2 (41.4/sq mi) (213வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2020 மதிப்பீடு
• மொத்தம்
$257 பில்லியன்[7] (60வது)
• தலைவிகிதம்
$49,334[7] (19வது)
மொ.உ.உ. (பெயரளவு)2020 மதிப்பீடு
• மொத்தம்
$277 பில்லியன்[7] (43வது)
• தலைவிகிதம்
$48,461[7] (14வது)
ஜினி (2019)negative increase 26.2[8]
தாழ் · 6வது
மமேசு (2019)Green Arrow Up Darker.svg 0.938[9]
அதியுயர் · 11வது
நாணயம்யூரோ () (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (EET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (EEST)
திகதி அமைப்புd.m.yyyy[10]
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+358
ஐ.எசு.ஓ 3166 குறியீடுFI
இணையக் குறி.fi, .axa
 1. ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடென்ற வகையில் .eu ஆள்களப் பெயரும் பயன்படுத்தப்படுகிறது.

பின்லாந்து (பின்னிய மொழி: Suomi [ˈsuo̯mi]  ( listen); சுவீடிய: Finland [ˈfɪ̌nland] (About this soundகேட்க)) அல்லது, அலுவல்ரீதியில் பின்லாந்துக் குடியரசு (பின்னிய மொழி: Suomen tasavalta; சுவீடிய: Republiken Finland (About this soundlisten to all)),[note 1] என்பது வட ஐரோப்பாவில் அமைந்துள்ள நோர்டிக் நாடுகளில் ஒன்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒன்றுமாகும்.இது மேற்கில் சுவீடன், கிழக்கில் உருசியா மற்றும் வடக்கில் நோர்வே ஆகிய நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இதன் மேற்கே பொத்தினியா வளைகுடா மற்றும் தெற்கே எசுத்தோனியாவிலிருந்து பிரிக்கின்ற, பால்டிக் கடலின் பகுதியாகிய பின்லாந்து வளைகுடா என்பன அமைந்துள்ளன. பின்லாந்தின் பரப்பளவு 338,455 சதுர கிலோமீட்டர்கள் (130,678 sq mi)உம் மக்கள்தொகை 5.5 மில்லியனும் ஆகும். எல்சிங்கி நாட்டின் தலைநகரும் மிகப்பெரிய நகருமாகும். இதன் அருகில் அமைந்துள்ள எசுப்பூ, கௌனியாயினென், மற்றும் வான்ட்டா ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு ஒரு பெருநகர்ப் பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னிய மொழி மற்றும் சுவீடிய மொழி என்பன பின்லாந்தின் இரு அலுவல் மொழிகளாகும்.[11] அகலக்கோட்டுக்குச் சார்பாக பின்லாந்தின் காலநிலை மாறுபடுகிறது. தெற்கில் ஈரலிப்பான கண்டக் காலநிலையிலிருந்து வடக்கே துணை ஆட்டிக் காலநிலை வரை வேறுபாடு காணப்படுகிறது. நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பாலானவை தைகா காடுகளால் நிரம்பியுள்ளது. மேலும், பின்லாந்தில் 180,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஏரிகள் காணப்படுகின்றன.[12]

இறுதிப் பனிக்காலத்தின் பின்னர் பொ.ஊ.மு. 9000 ஆண்டளவில் பின்லாந்தில் மனிதக் குடியிருப்புகள் உருவாயின.[13] கற்காலப் பகுதியில் இங்கு பல்வேறு பீங்கான் வடிவமைப்புக்களும் அது சார்ந்த பண்பாடுகளும் அறிமுகமாயின. வெண்கலக்காலம் மற்றும் இரும்புக் காலப்பகுதியில் பென்னோசுக்காண்டியா மற்றும் பால்டிக் பகுதியில் அமைந்திருந்த ஏனைய பண்பாடுகளுடன் பரவலான தொடர்புகள் பேணப்பட்டன.[14] 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடக்குச் சிலுவைப் போர்களின் விளைவாக, பின்லாந்து சிறிதுசிறிதாக சுவீடனின் ஒரு பகுதியானது. 1809ல் பின்னியப் போரின் விளைவாக, பின்லாந்து உருசியாவின் ஆளுகைக்குட்பட்டது. இப்பகுதி பின்லாந்துப் பெரும் டச்சி எனப்பட்டது. இக்காலப்பகுதியில், பின்னியக் கலை உயர்நிலை பெற்றதோடு, விடுதலைக்கான எண்ணக்கருக்களும் உருவாகத்தொடங்கின. 1906ல், பின்லாந்து, பொது வாக்குரிமை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு எனும் பெயர் பெற்றது. மேலும், அனைத்து வயதுவந்த குடிமக்களுக்கும் தேர்தலில் போட்டியிடும் உரிமை வழங்கிய முதல் நாடாகவும் இடம்பெற்றது..[15][16] உருசியாவின் இறுதி சார் மன்னனாகிய இரண்டாம் நிக்கோலாசு பின்லாந்தை உருசியமயப்படுத்தவும், அதன் அரசியல் தன்னாட்சியுரிமையைப் பறிக்கவும் முயன்றான். ஆயினும், 1917 உருசியப் புரட்சிக்குப் பின் பின்லாந்து உருசியாவிடமிருந்து விடுதலைபெறுவதாக அறிவித்தது. 1918ல், புதிதாக உருவாகியிருந்த இந்நாடு பின்னிய உள்நாட்டுப் போரால் பிளவடைந்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் பின்லாந்து, சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக, பனிக்காலப் போர் மற்றும் தொடர்ச்சிப் போர் ஆகிய போர்களிலும், நாசி செருமனிக்கு எதிராக லாப்லாந்து போரிலும் களம் கண்டது. இப்போர்களுக்குப் பின்னர் பின்லாந்து அதன் பகுதிகளில் சிலவற்றை இழந்தது. இவற்றுள் பண்பாட்டு ரீதியிலும், வரலாற்று ரீதியிலும் முக்கியமான வைபோர்க் நகரும் அடங்கும்.[17] எனினும், ஆட்சியுரிமையைத் தக்கவைத்துக்கொண்டது.

1950கள் வரையிலும் பின்லாந்து பெரும்பாலும் ஒரு விவசாய நாடாகவே விளங்கியது. இரண்டாம் உலகப்போரின் பின்னர், பின்லாந்து விரைவாகக் கைத்தொழில்மய நாடாக மாறியதோடு, முன்னேறிய பொருளாதாரத்தையும் உருவாக்கியது. அதேவேளை நோர்டிக் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய பொதுநல அரசாகவும் உருமாறியது. இதன் விளைவாக இந்நாடு செழிப்பு மிக்கதாகவும், உயர் தனிநபர் வருவாய் கொண்ட நாடாகவும் உயர்ந்தது.[18] 1955ல் பின்லாந்து ஐக்கிய நாடுகளில் இணைந்தது. மேலும், அலுவல் கொள்கையாக நடுநிலை நிலைப்பாட்டையும் எடுத்தது. மேலும், 1969ல் ஓஇசிடியிலும், 1994ல் நேட்டோ அமைதிக்கான கூட்டாண்மையிலும்,[19] 1995ல் ஐரோப்பிய ஒன்றியத்திலும், 1997ல் ஐரோ-அத்திலாந்திக் கூட்டாண்மைக் கழகத்திலும்,[19] 1999ம் ஆண்டில் ஐரோ வலயம் துவங்கப்பட்ட சமயத்தில் அவ்வமைப்பிலும் இணைந்துகொண்டது. கல்வி, பொருளியல் போட்டித்தன்மை, பொது உரிமைகள், வாழ்க்கைத்தரம் மற்றும் மனித வளர்ச்சி உள்ளடங்கிய பல்வேறு தேசியத் திறன் அளவுகோல்களில் பின்லாந்து உயர்நிலை வகிக்கிறது.[20][21][22][23] 2015ல், உலக மனித மூலதனச் சுட்டெண்[24] மற்றும் ஊடகச் சுதந்திர சுட்டெண் ஆகியவற்றில் பின்லாந்து முதலிடம் பெற்றது. மேலும், தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில், 2011-2016 வரையில் மிக உறுதியான நாடு எனும் நிலையைப் பெற்றதோடு,[25] உலகப் பால்நிலை இடைவெளி அறிக்கையில் இரண்டாம் இடம் பெற்றது.[26] அத்தோடு, உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி, 2018 இலிருந்து 2022 வரை முதலிடம் பிடித்துள்ளது.[27][28][29]

பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர்கள்[தொகு]

பின்லாந்தின் 11 குடியரசுத் தலைவர், டார்ஜா ஹேலோனென்.
பின்லாந்தின் தற்போதைய குடியரசுத் தலைவர்,சௌலி நீனிசுட்டோ
குடியரசு தலைவர்கள்
பெயர் பிறப்பு–இறப்பு பதவிக்காலம்
கே. ஜே. ஸ்டால்பர்க் 18651952 19191925
எல். கே. ரெலாண்டர் 18831942 19251931
பி. இ. ஸ்வின்ஹூப்வுட் 18611944 19311937
கே. கால்லியொ 18731940 19371940
ஆர். றைட்டி 18891956 19401944
கார்ல் மன்னெர்ஹெயிம் 18671951 19441946
ஜூஹோ பாசிக்கிவி 18701956 19461956
ஊரோ கெக்கோனென் 19001986 19561981
மௌனோ கொய்விஸ்ட்டோ 19232017 19821994
மார்ட்டி ஆட்டிசாரி 1937 19942000
டார்ஜா ஹேலோனென் 1943 20002012
சௌலி நீனிசுட்டோ 1948– 2012–

நகராட்சிகள்[தொகு]

நகராட்சி மக்கட்தொகை பரப்பளவு அடர்த்தி
ஹெல்சின்கி 564474 184.47 3061.00
யெஸ்ப்பூ 235100 312.00 751.60
டாம்பரெ 206171 523.40 393.90
வன்டா 189442 240.54 780.40
டுர்க்கு 177502 243.40 720.50
உளு 130049 369.43 351.40
லகதி 98773 134.95 730.10
குவோப்பியோ 91026 1127.40 81.00
ஜய்வாச்கைலா 84482 105.90 789.00
பொரி 76211 503.17 150.83
லப்பேன்ரண்டா 59077 758.00 77.70
ரொவனியெமி 58100 7600.73 7.60
ஜொயென்ஸு 57879 1173.40 49.10
வாசா 57266 183.00 311.20
கோட்கா 54860 270.74 203.00

குறிப்புக்கள்[தொகு]

 1. "Republic of Finland", or Suomen tasavalta in Finnish, Republiken Finland in Swedish, and Suoma dásseváldi in Sami, is the long protocol name, which is however not defined by law. Legislation recognizes only the short name.

ஆதாரங்கள்[தொகு]

 1. "11rv -- Origin and background country by sex, by municipality, 1990-2020". Statistics Finland. 1 ஜூன் 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "United Nations Population Division | Department of Economic and Social Affairs". United Nations. 29 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Population". Statistics Finland. 5 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Parliamentary என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. "Surface water and surface water change". Organisation for Economic Co-operation and Development (OECD). 11 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Birth rate showed a slight growth in 2020". Statistics Finland. 21 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 7.2 7.3 "Report for Selected Countries and Subjects". IMF. 17 October 2018.
 8. "Gini coefficient of equivalised disposable income - EU-SILC survey". European Commission. 27 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Human Development Report 2020" (PDF) (ஆங்கிலம்). United Nations Development Programme. 15 December 2020. 15 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. Ajanilmaukset பரணிடப்பட்டது 20 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம் Kielikello 2/2006. Institute for the Languages of Finland. Retrieved 20 October 2017
 11. "Språk i Finland" [Language in Finland]. Institute for the Languages of Finland (ஸ்வீடிஷ்).
 12. Li, Leslie (16 April 1989). "A Land of a Thousand Lakes". The New York Times. 20 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 13. Haggren, Georg; Halinen, Petri; Lavento, Mika; Raninen, Sami; Wessman, Anna (2015). Muinaisuutemme jäljet. Helsinki: Gaudeamus. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-952-495-363-4. 
 14. Haggren, Georg; Halinen, Petri; Lavento, Mika; Raninen, Sami; Wessman, Anna (2015). Muinaisuutemme jäljet. Helsinki: Gaudeamus. பக். 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-952-495-363-4. 
 15. Parliament of Finland. "History of the Finnish Parliament". eduskunta.fi. 6 December 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 16. Finland was the first nation in the world to give all (adult) citizens full suffrage, in other words the right to vote and to run for office, in 1906. New Zealand was the first country in the world to grant all (adult) citizens the right to vote, in 1893. But women did not get the right to run for the New Zealand legislature, until 1919.
 17. "Tracing Finland's eastern border". thisisFINLAND. 22 March 2011.
 18. "Finland". International Monetary Fund. 17 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
 19. 19.0 19.1 Relations with Finland. NATO (13 January 2016)
 20. "Finland: World Audit Democracy Profile". WorldAudit.org. 30 October 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 21. Tertiary education graduation rates—Education: Key Tables from OECD. OECD iLibrary. 14 June 2010. doi:10.1787/20755120-table1. http://www.oecd-ilibrary.org/education/tertiary-education-graduation-rates_20755120-table1. பார்த்த நாள்: 6 March 2011. 
 22. "Her er verdens mest konkurransedyktige land—Makro og politikk". E24.no. 9 September 2010. 14 October 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
 23. "The 2009 Legatum Prosperity Index". Prosperity.com. 29 October 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
 24. "Human Capital Report 2015". World Economic Forum. 15 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
 25. "Fragile States Index 2016". Fundforpeace.org. 4 February 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
 26. Gender Gap Report. WEF. http://www3.weforum.org/docs/WEF_GenderGap_Report_2012.pdf. 
 27. Hetter, Katia (26 March 2019). "This is the world's happiest country in 2019". CNN. https://www.cnn.com/travel/article/worlds-happiest-countries-united-nations-2019/index.html. 
 28. Helliwell, John F.; Sachs, Jeffrey; De Neve, Jan-Emmanuel, eds. (2020). "World Happiness Report 2020" (PDF). New York: Sustainable Development Solutions Network. 30 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 29. Hunter, Marnie (18 March 2022). "The world's happiest countries for 2022". CNN. 18 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்லாந்து&oldid=3589931" இருந்து மீள்விக்கப்பட்டது