ஓசியானியாவில் தமிழர்
Appearance
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி ஆகிய நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழுகின்றார்கள். இவர்களே ஓசியானாத் தமிழர் எனப்படுகின்றனர். பீஜி தீவுகளில் தமிழர்கள் காலனித்துவ பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை இழந்து அங்கு அதிகமாக இருக்கும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பொருளாதார வாய்ப்புக்கள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள்.