அயர்லாந்து குடியரசு
அயர்லாந்து Ireland Éire (ஐரிய மொழி) | |
---|---|
நாட்டுப்பண்: Amhrán na bhFiann "சிப்பாயின் பாடல்" | |
தலைநகரம் | டப்லின் 53°20.65′N 6°16.05′W / 53.34417°N 6.26750°W |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் (2022[2]) |
|
சமயம் (2022[3]) |
|
மக்கள் | ஐரியர் |
அரசாங்கம் | ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் |
• பிரதமர் | லியோ வரத்கர் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | கீழவை |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• அறிவிப்பு | 24 ஏப்ரல் 1916 |
• பிரகடனம் | 21 சனவரி 1919 |
• ஆங்கிலோ-அயர்லாந்து உடன்பாடு | 6 திசம்பர் 1921 |
• 1922 அரசியலமைப்பு | 6 திசம்பர் 1922 |
• 1937 அரசியலமைப்பு | 29 திசம்பர் 1937 |
• குடியரசுச் சட்டம் | 18 ஏப்ரல் 1949 |
பரப்பு | |
• மொத்தம் | 70,273 km2 (27,133 sq mi) (118-ஆவது) |
• நீர் (%) | 2.0% |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 5,281,600[4] (122-ஆவது) |
• 2022 கணக்கெடுப்பு | 5,149,139[5] |
• அடர்த்தி | 71.3/km2 (184.7/sq mi) (113-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | $722.929 பில்லியன்[6] (40-ஆவது) |
• தலைவிகிதம் | $137,638[6] (3-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | $589.569 பில்லியன்[6] (30-ஆவது) |
• தலைவிகிதம் | $112,247[6] (2-ஆவது) |
ஜினி (2022) | 27.9[7] தாழ் |
மமேசு (2021) | 0.945[8] அதியுயர் · 8-ஆவது |
நாணயம் | ஐரோ (€) (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே (கி.இ.நே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 (IST) |
திகதி அமைப்பு | dd/mm/yyyy |
வாகனம் செலுத்தல் | இடது |
அழைப்புக்குறி | +353 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IE |
இணையக் குறி | .ie |
அயர்லாந்துக் குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிசு: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921-இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரியக் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சனத்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிய மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிய மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013-ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.
சமயம்
[தொகு]சனத்தொகையின் படி அயர்லாந்துக் குடியரசின் நகரங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
# | நகரம் | சனத்தொகை | # | நகரம் | சனத்தொகை | |
1 | டுப்லின் (Dublin) | 1,110,627 | 11 | எனிசு (Ennis) | 25,360 | ||
2 | கோர்க் (Cork) | 198,582 | 12 | கில்க்கெனி (Kilkenny) | 24,423 | ||
3 | லைம்ரிக் (Limerick) | 91,454 | 13 | ட்ரலீ (Tralee) | 23,693 | ||
4 | கல்வே (Galway) | 76,778 | 14 | கார்லோ (Carlow) | 23,030 | ||
5 | வாட்டர்ஃபொர்ட் (Waterford) | 51,519 | 15 | நியூ பிரிசு (Newbridge) | 21,561 | ||
6 | ட்ரொக்கெடா (Drogheda) | 38,578 | 16 | நாசு (Naas) | 20,713 | ||
7 | டுண்ட்லக் (Dundalk) | 37,816 | 17 | அத்லோன் (Athlone) | 20,153 | ||
8 | சுவோட்சு (Swords) | 36,924 | 18 | போர்ட்லயோசு (Portlaoise) | 20,145 | ||
9 | பிரே (Bray) | 31,872 | 19 | முலின்கர் (Mullingar) | 20,103 | ||
10 | நவன் (Navan) | 28,559 | 20 | வெக்சுஃபோர்ட் (Wexford) | 20,072 |
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]
|
புவியியல்
[தொகு]அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km2 அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரியக் கடல் அமைந்துள்ளது.
வெளிநாட்டு உறவு
[தொகு]அயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article 8, Constitution of 1937. "Electronic Irish Statute Book (EISB)". Archived from the original on 23 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
- ↑ "Population Usually Resident and Present in the State". CSO.ie. Central Statistics Office. 30 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ "Population Usually Resident and Present in the State". CSO.ie. Central Statistics Office. 30 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ "Key Findings - Population and Migration Estimates, April 2023". CSO. 25 September 2023.
- ↑ "Remote work up, Catholic numbers down in Census data". rte.ie. 30 May 2023. Archived from the original on 30 May 2023.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database, October 2023 Edition. (Ireland)". அனைத்துலக நாணய நிதியம். 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
- ↑ "Gini coefficient of equivalised disposable income – EU-SILC survey". ec.europa.eu. Eurostat. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
- ↑ "Human Development Report 2021/2022" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. Archived (PDF) from the original on 9 October 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐரிஷ் நாடு பற்றிய தகவல்கள் பரணிடப்பட்டது 2008-11-08 at the வந்தவழி இயந்திரம்
- அயர்லாந்து வரலாறு பரணிடப்பட்டது 2010-02-19 at the வந்தவழி இயந்திரம்