சிங்கப்பூர் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூரில் உள்ள வீரமகாகாளி அம்மன் கோயில்
அலுவல் மொழிகள் (மேலிருந்து): ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய்.

தமிழ் பின்புலத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களை சிங்கப்பூர் தமிழர் என்பர். காலனித்துவ காலப்பகுதியில் (1800 களில்) பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களின் வம்சாவழியினரே, பெரும்பாலான சிங்கப்பூர் தமிழர்கள் ஆவார்கள். கணிசமான தொகையினர் யாழ்ப்பாணத்தில் இருந்தும் இங்கு வரவழைக்கப்பட்டவர்கள்.

சிங்கப்பூர் சனத்தொகையில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருப்பதால், சிங்கப்பூரில் தமிழ் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற மொழியாக இருக்கின்றது.

சிங்க‌ப்பூர் த‌மிழ்[தொகு]

சிங்க‌‌ப்பூர் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தாய் மொழியான‌ த‌மிழை ச‌ரிவ‌ர‌ உச்ச‌ரிக்க‌ த‌வ‌றுகிறார்க‌ள், அதிலும் இள‌ வ‌ய‌தின‌ரிடையே த‌மிழ் பேச்சு குறைந்து காண‌ப்ப‌டுகிற‌து, அப்ப‌டியே பேசினாலும் உச்ச‌ரிப்பில் ஆங்கில‌த் தொனி மித‌மிஞ்சி இருக்கிற‌து , ஆங்கில‌த்தை பேசும் பொழுது எந்த‌ ஒரு நாட்டின் உச்ச‌ரிப்பு சாய‌லிலும் பேசாம‌ல் த‌ங்க‌ளுக்கென்று ஒரு உச்ச‌ரிப்பில் பேசுவ‌தை சிங்கிலிஷ் என்று கூறுகிறார்க‌ள் சிங்க‌ப்பூர‌ர்க‌ள். த‌மிழும் சிங்க‌ப்பூரில் ஒரு த‌னி உச்ச‌ரிப்புக்கு ஆட்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_தமிழர்&oldid=3243984" இலிருந்து மீள்விக்கப்பட்டது