கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்
Appearance
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (கி.ஐ.கோ.நே.) (ஆங்கில மொழி: Eastern European Summer Time - EEST) என்பது ஒ.ச.நே.+03:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு மூன்று மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய, வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தைப் பயன்படுத்துகின்றன.
பயன்பாடு
[தொகு]பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:
- பெலருஸ், 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
- பல்கேரியா, 1979 முதல்
- சைப்ரஸ், 1979 முதல்
- எஸ்தோனியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
- பின்லாந்து, 1981 முதல்
- கிரீஸ், 1975 முதல்
- இஸ்ரேல், 1948 முதல்
- ஜோர்டான், 1985 முதல்
- லத்வியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
- லெபனான், 1985 முதல்
- லித்துவேனியா, 1989-97 மற்றும் 2003 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது; 1998-2002 காலப்பகுதியில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
- மோல்டோவா, 1932-40 மற்றும் 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
- ருமேனியா, 1932-40 மற்றும் 1979 முதல்
- ரஷ்யா (கலினின்கிராட்), 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது. 2011 மார்ச் முதல் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
- சிரியா, 1983 முதல்
- துருக்கி, 1970-78 மற்றும் 1985 முதல்; 1979-83 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
- உக்ரைன், 1992 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.