உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தற்போதைய நேர வலயங்கள்

ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம், ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரம், அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (Coordinated Universal Time, ஒசநே, UTC) என்பது நேரங்காட்டிகளையும் நேரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்காக உலகளவில் பயன்படுத்தப்படும் முதன்மையான நேரத் தரமாகும். இது தற்போதைய நேரத்திற்கான ஒரு குறிப்பை நிறுவி, சீர் நேரம், நேர வலயம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைகிறது. பன்னாட்டுத் தொடர்பு, வழிசெலுத்தல், அறிவியல் ஆய்வு, வணிகம் போன்றவற்றிற்கு இந்த நேரத் தரம் உதவுகிறது.

ஒசநே பெரும்பாலான நாடுகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்றாடப் பயன்பாடு, பொதுவான பயன்பாடுகளில் கிரீனிச் இடைநிலை நேரத்திற்கு (GMT) ஒரு பயனுள்ள மாற்றாக உள்ளது.[a] அறிவியல் ஆய்வு, வழிசெலுத்தல் மற்றும் நேரக்கணிப்பு போன்ற சிறப்புத் துறைகளில், பன்னாட்டு நேரம் (UT1), பன்னாட்டு அணு நேரம் (TAI) போன்ற பிற தரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒசநே ஆனது TAI (பன்னாட்டு அணு நேரம், அதன் பிரெஞ்சுப் பெயரான temps atomique international என்பதன் சுருக்கம்) அடிப்படையிலானது, இது உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அணு நேரங்காட்டிகளின் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒசநே ஆனது, தற்போது பயன்படுத்தப்படும் முதனெடுங்கோடானநிலநிரைக்கோட்டில் உள்ள சராசரி சூரிய நேரத்திலிருந்து தோராயமாக ஒரு நொடிக்குள் உள்ளது, இது பகலொளி சேமிப்பு நேரத்திற்காக சரிசெய்யப்படவில்லை.

உலகம் முழுவதும் நேரம், அதிர்வெண் பரிமாற்றங்களின் ஒருங்கிணைப்பு 19609 சனவரி 1 அன்று தொடங்கியது. ஒசநே முதன்முதலில் 1963-இல் அதிகாரப்பூர்வமாக ஒரு தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, "ஒசநே" (UTC) 1967-இல் ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரத்தின் அதிகாரப்பூர்வ சுருக்கமாக மாறியது.[2] ஒசநே-இன் தற்போதைய பதிப்பு பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் வரையறுக்கப்படுகிறது.

ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, ஒசநே பலமுறை சரிசெய்யப்பட்டுள்ளது, குறிப்பாக 1972-இல் இருந்து லீப் நொடிகள் சேர்க்கப்பட்டன. அண்மைய ஆண்டுகளில், குறிப்பாக நேரக் கணக்கீட்டு அமைப்பிலிருந்து லீப் நொடிகளை நீக்குவது பற்றிய விவாதங்களில், ஒசநே துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் லீப் நொடிகள் அவ்வப்போது உலகெங்கிலும் உள்ள நேரக் கணக்கீட்டு அமைப்புகளை சீர்குலைக்கின்றன. எடைகள், அளவீடுகள் மீதான பொது மாநாடு, 2035-ஆம் ஆண்டுக்குள் லீப் நொடிகளை நீக்கும் ஒரு புதிய அமைப்புடன் ஒசநே-ஐ மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.[3]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. கிரீனிச் நேர சமிக்கை இப்போது கிரீனிச்சிலிருந்து ஒளிபரப்பப்படாமல், இங்கிலாந்து, சரே, டெடிங்டனில் இருக்கும் தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது, அத்துடன் இது GMT-க்குப் பதிலாக ஒசநே-ஐப் பயன்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Evers 2013, ப. 74.
  2. McCarthy 2009, ப. 4.
  3. "Resolutions of the General Conference on Weights and Measures (27th Meeting)". Bureau International des Poids et Mesures. 19 November 2022. Archived from the original on 19 November 2022. Retrieved 19 August 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]