உள்ளடக்கத்துக்குச் செல்

சோவியத் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோவியத் சோசலிசக்
குடியரசுகளின் ஒன்றியம்
Союз Советских
Социалистических Республик
Union of Soviet Socialist Republics
1922–1991
கொடி of சோவியத் ஒன்றியம்
கொடி
சின்னம் of சோவியத் ஒன்றியம்
சின்னம்
குறிக்கோள்: Пролетарии всех стран, соединяйтесь!
உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!
நாட்டுப்பண்: en:The Internationale (1922–1944)
சோவியத் தேசியப்பண் (1944-1991)
சோவியத் ஒன்றியம்அமைவிடம்
நிலைகூட்டமைப்பு
தலைநகரம்மாஸ்கோ
பேசப்படும் மொழிகள்ரஷ்ய மொழி, உக்ரேனியம், பெலரசியம், எஸ்தோனியம், லாத்வியம், லித்துவேனியம், மல்தோவியம், ஜோர்ஜியம், ஆர்மேனியம், அசர்பஜானி, கசாக், உஸ்பெக், துருக்மென், கிர்கீசு, தஜிக்
மக்கள்சோவியத்
அரசாங்கம்கூட்டாட்சி சோசலிசக் குடியரசு, தனிக்கட்சி பொதுவுடமை அரசு
பொதுச் செயலாளர் 
• 1922–1953 (முதலாவது)
ஜோசப் ஸ்டாலின்
• 1985–1991 (கடைசி)
மிக்கைல் கொர்பச்சோவ்
பிரதமர் 
• 1923–1924 (முதலாவது)
விளாதிமிர் லெனின்
• 1991 (கடைசி)
இவான் சிலாயெவ்
வரலாறு 
• தொடக்கம்
டிசம்பர் 30 1922
• முடிவு
டிசம்பர் 26, 19911 1991
பரப்பு
199122,402,200 km2 (8,649,500 sq mi)
மக்கள் தொகை
• 1991
293047571
நாணயம்ரூபில் (SUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 to +13
அழைப்புக்குறி7
இணையக் குறி.su
முந்தையது
பின்னையது
இரசிய சோவியத் கூட்டமைப்பு சோசலிசக் குடியரசு
டிரான்ஸ்கோக்கேசிய சோசலிச கூட்டமைப்பு சோசலிசக் குடியரசு
உக்ரேனிய சோவியத் சோசலிசக் குடியரசு
பெலரசிய சோவியத் சோசலிசக் குடியரசு
எஸ்தோனியா
லாத்வியா
லித்துவேனியா
இரசியா
பெலரஸ்
உக்ரேன்
மல்தோவா
ஜோர்ஜியா
ஆர்மேனியா
அசர்பைஜான்
கசக்ஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
துருக்மேனிஸ்தான்
கிர்கிஸ்தான்
தஜிகிஸ்தான்
எஸ்தோனியா
லித்துவேனியா
லாத்வியா
தெற்கு ஒசேத்தியா
அப்காசியா
11991, டிசம்பர் 21 இல் அல்மா-ஆட்டா என்ற இடத்தில் கூடிய 11 முன்னாள் சோவியத் கூட்டாட்சி நாடுகள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதாகவும், பொதுநலவாய சுதந்திர நாடுகள் என்ற அமைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். ஜோர்ஜியா இதில் பார்வையாளராகக் கலந்து கொண்டது.

சோவியத் ஒன்றியம் (Soviet Union, இரசியம்: Сове́тский Сою́з - சவியெத்ஸ்கி சயூஸ்) எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]) என்பது 1922 இல் இருந்து 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது.

இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை.

சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.

முதலில் 4 சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக ஆக்கப்பட்டு, 1956ல் பின்வரும் 15 அங்கத்தினர்களை உள்ளடக்கியது: அர்மீனிய சோ.சோ.கு, அசர்பைஜான் சோசோகு, பியாலோரசியன் சோசோகு, எஸ்டோனியன் சோசோகு, ஜார்ஜிய சோசோகு, கசாக் சோசோகு, கிர்கிசிய சோசோகு,லாட்விய சோசோகு, லிதுவேனிய சோசோகு, மோல்டாவிய சோசோகு, ரஷ்ய சோசோகு, டாஜிக் சோசோகு, துருக்மான் சோசோகு, உக்ரெயின் சோசோகு, மற்றும் உஸ்பெக் சோசோகு.

வரலாறு

[தொகு]

சோவியத் ஒன்றியம் ரஷ்யப் பேரரசின் மற்றும், அதன் அற்பாயுசு சந்ததியான கெரென்ஸ்கி தலைமையிலான தற்காலிக அரசின் சந்ததி என கருதப்படுகிறது. கடைசி ரஷ்ய சார் மன்னன், இரண்டாவது நிக்கோலாஸ், மார்ச் 1917 வரை ஆண்டான், அப்போது சாம்ராச்சியம் தூக்கி எறியப்பட்டு, ரஷ்ய தற்காலிக அரசு பதவி ஏற்றது. அது நவம்பர் 1917ல் விளாடிமீர் லெனினால் கவிழ்க்கப்பட்டது. 1917ல் இருந்து 1922 வரை, சோசோகுயூ (சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம்)வின் முன்னோடி, "ரஷ்ய சோவியத் சோசலிஸ்ட் கூட்டாட்சி குடியரசு" என்ற சுதந்திர நாடு, மற்ற சோவியத் குடியரசுகளும் சுதந்திர நாடுகளாயிருந்தன. அதிகார பூர்வமாக டிசம்பர் 1922ல், சோவியத் யூனியன், ரஷ்ய, யுக்ரைனிய, பெலாருசிய, காகசஸ்-கடந்த குடியரசுகளின் சங்கமம் ஆயிற்று.

புரட்சியும், சோவியத் நாடு நிறுவனமும்

[தொகு]

நவீன புரட்சி செயல்கள் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தில் 1825 டிசம்பரிஸ்டு கலகத்திலிருந்து தொடங்குகின்றன. 1861 இல் நில அடிமைத்தனம் முடிக்கப்பட்டாலும், அதன் முடிப்பு விவசாயிகளுக்கு உபாதகமான வரையணைகளில் இருந்து, புரட்சிக்கு மேலும் உதவேகத்தை கொடுத்தது. 1905 ரஷ்ய புரட்சிக்கு பிறகு, 1906ச், நாடு டூமா என்ற மக்கள் பிரதிநிதி மன்றம் நிறுவப்பட்டது. ஆனாலும் ஜார் மன்னன், வரையற்ற அரச அதிகாரத்திலிருந்து சட்டத்துக்குள் அரச அதிகாரம் மாறுவதற்கு தடைகள் கொடுத்தார். சமுதாய கொந்தளிப்பு முதல் உலகப் போரினால் ஏற்பட்ட ராணுவ தோல்விகளாலும், உணவு தட்டுபாடுகளாலும் ஏறியது.

தலைநகர் பெட்ரோகிர்ரடில் தன்னார்வத்தில் ஒரு மக்கள் எழுச்சி, யுத்தகால சீரழிவுகளால் ஏற்பட்டு, கடைசியில் ஜாரின் அரசின் வீழ்ச்சியில் முடிந்தது. ஜாரின் அதிகாரம் தாற்காலிக அரசால் மாறுபடுத்தப்பட்டது. அதன் தலைவர்கள் ரஷ்ய மக்களவைக்கு தேர்தல் நடத்துவதற்கும், , ஒப்பந்த நாடுகள் பக்கம் போரை நடத்துவதற்கும் யத்தனித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் உரிமைகளை காப்பதற்கும் தொழிலாளர் சங்கங்கள் அல்லது சோவியத்துகள் எழுந்தன. லெனின் தலைமையிலான போல்ஷெவிக்குகள், சமுதாய புரட்சிக்கு சோவியத்துகள் இடையிலும், மக்கள் இடையிலும் செயல்புரிந்தனர்.அவர்கள் தாற்காலிக அரசிலிருந்து, நவம்பர் 1917 இல் புரட்சிசெய்து பதவியை கைப்பற்றினர். நீண்ட நாள் குரூரமாக நடந்த, வெளிநாட்டு தலையீட்டான, 1918-1921 [ரஷ்ய உள்நாட்டு போர்] பின்புதான் புதிய சோவியத் அதிகாரம் நிலை ஆயிற்று.. சமகால போலந்து கூட ஏற்பட்ட சச்சரவு, பிணக்கு கொடுத்த நிலங்களை போலந்து, ரஷ்யாவிற்கு இடையில் பிளந்த ரீகா சமாதான உடன்படிக்கை பின் முடிந்தது.

சோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல்

[தொகு]

டிசம்பர் 28, 1922 அன்று அதிகாரம் மிக்க பிரதிநிதி குழுக்கள் ரஷ்ய, காகசஸ், உக்ரெயின், பெலோரசிய சோவியத் குடியருகளிலிருந்து கூடி, சோசோகுயூ ஆக்க ஒப்பந்தம், மற்றும் சோசோகுயு ஆக்க பிரகடனம் இரண்டையும் ஏற்றுக் கொண்டனர். இந்த இரு ஆவணங்களும் டிசம்பர் 30, 1922 அன்றுமுதல் சோவியத் காங்கிரசினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன[1][2][3]. பெப்ருவரி 1, 1924 அன்று, சோசோகுயூ பிரித்தானிய பேரரசால் அங்கீகரிக்கப் பட்டது.

1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்யப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது[4]. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது..[5] . அந்த திட்டமே பிந்தைய 5 வருட திட்டங்களுக்கு முன்னோடியாயிற்று..

சோவியத்து ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு

[தொகு]
மத்தியகுழுக் கூட்டம் நடைபெறும் இடம், ஸ்ட்ரயா சதுக்கம், மாஸ்கோ

சோவியத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு என்பது கட்சியின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. கட்சி விதிகளின் படி, மத்திய குழு அரசாங்க நடவடிக்கைகளை இயக்கியது‍. மத்தியகுழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சி மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். [6]

சோவியத்து அரசியலமைப்புச் சட்டம்

[தொகு]

1918 இல் சோவியத்து ரஷ்யாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத்து மக்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன. விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன.

பின்பு 1918 ஜுலை 10 இல் ஐந்தாவது அனைத்து ரஷ்யா சோவியத் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு சோவியத் ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. [7]

ஸ்டாலின்

[தொகு]

சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு கட்சி-அரசு கொள்கைக்கு உட்பட்டிருந்தது. உள்நாட்டு போர்கந்த்தில் `போர் கம்யூனிச பொருளாதார கொள்கைக்கு பின், சோவியத் அரச்சங்கம் தனியார் தொழிலை ஓரளவு தேசீய மயமாக்கப்பட்ட தொழிலுடன் 1920ல் இருக்க அனுமதி கொடுத்திருந்தது. கிராமப்புரங்களில் உணவு கைப்பற்றுதலை விட்டு உணவு வரி விதிக்கப்பட்டது. சோவியத்தலைவர்கள் முதலாளித்துவ ஆட்சி திரும்பி வராமல் இருக்க ஒரு கட்சி-அரசு அவசியம் என்பது‍ அவசியம் என்று கூறினர்.[8] . லெனினின் 1924 மரணத்திற்கு சிலவருடங்கள் வரை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் சோவியத் தலைவர்களின் எதிர்தரப்பு பூசல்களுக்கு வழக்காக இருந்தது. 1920 முடிவுகளில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

1928ல் ஸ்டாலின் உலகிலேயே முதன் முதலில் ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஐந்து‍ ஆண்டுத் திட்டத்தை நான்கரை ஆண்டுகளிலேயே எட்டி உலகை வியப்பில் ஆழ்த்தினார் மக்களின் ஒத்துழைப்போடு. லெனினின் சர்வதேசீயத்தை கடைப்பிடித்தாலும், ஸ்டாலின் சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டுவதற்கு எத்தனித்தார். தொழில் துறையில் அரசு எல்லா தொழிற்சாலைகளின் மீது கட்டுப்பாட்டை கையெடுத்து, பரந்த தொழில் வளர்சியை ஊக்குவித்தது. விவசாயத்தில் கூட்டு பண்ணைகள் நாடெங்கும் நிறுவப்பட்டன. அதற்கு குலக் என்றழைக்கப்பட்ட தனியார் பண்ணை முதலாளிகளும், செல்வமிக்க பண்ணையாட்களும் எருமை கொடுத்தனர், அதனால் பண்ணை உற்பத்திகளை அரசிடம் கொடுக்காமல், பதுக்கினர். இது பண்ணை முதலாளிகள் ஒரு பக்கமும், அரசு மற்றும் சிறிய உழவர்கள் மற்றொரு பக்கமும் வெறுப்புமிக்க இழுபறிக்கு ஏதாயிற்று.. பல லட்சக்கணக்கன மக்கள் மடிந்த பஞ்சங்கள் ஏற்பட்டன, மேலும் பண்ணை எசமானர்கள் குலக் எனப்படும் கட்டாய பணி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்படி இறந்தவர் தொகை 600 லட்சம் என்று அலெக்சாண்டர் சோல்செனிட்சினால் மேல் பக்கத்திலும் அந்த கால சோவியத் அறிவிக்கைபடி 7 லட்சம் என கீழ் பக்கத்திலும் கணக்கிடப் படுகிறது. பரவலாக 200 லட்சம் மக்கள் இறந்தனர் என நம்பப்படுகிறது .[9]. இந்த சமூக கொந்தளிப்புகளும், எழுச்சிகளும் 1930ல் நடு வரை நடந்தன. ஸ்டாலினின் செயல்களினால் பல `பழைய போல்ஷவிக்குகள்` என சொல்லப்படும் லெனின் கால , 1917 புரட்சி நடத்தியவர்களும் ”பெரும் கழிப்பு” எனப்படும் அரசு தீர்மானங்களிலும், நிர்வாக செயல்களிலும் மாண்டனர். அப்படிப்பட்ட கொந்தளிப்புகள் நடுவே, சோவியத் யூனியன் ஆற்ற்றல் மிக்க தொழில் துறையை வளர்த்தது.

1930-களில், சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டது. 1933 இல், அமெரிக்க நாடுகளும், சோவியத் யூனியனும் பரஸ்பரம் அங்கீகரம் கொடுத்து, தூதுவர்களை அனுப்பித்தன. 4 வருடம் தள்ளீ, சோவியத் யூனியன் ஸ்பானிய உள்நாட்டுப்போரில், தேசீய கலகக் காரர்களுக்கு எதிராக குடியரசுவாதி சக்திகளூக்கு உதவி செய்தது. தேசியவாதிகளுக்கு நாஜி ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் உதவினர். அப்படியிருந்தும், மியூனிச் ஒப்பந்தம் பிறகு, ஜெர்மனியுடன் ஜெர்மனி-சோவியத் ஆக்கிரமிப்பினமை ஒப்பந்தத்தை செய்தது. இதனால் சோவியத் யூனியன் போலந்தை 1939ல் ஆக்கிரமிது, பால்டீய நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா இவற்றை கைப்பற்றியது. நவம்பர் 1939ல், ராஜதந்திர முறைகளில் ஃபின்லாந்தை, அதன் எல்லையை 25 கிமீ பின்போகும் படி செய்ய முடியாதலால், ஸ்டாலின், ஃபின்லாந்து மீது படை எடுக்க உததரவு இட்டார். ஜெர்மனி ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தத்தை புறம்தள்ளி, சோவியத் யூனியன் மீது படை எடுத்தது. செஞ்சேனை ஜெர்மனியின் படை எடுப்பை மாஸ்கோவின் முன் நிறுத்தியது. ஸ்டாலின்கிராட் போர் யுத்ததின் திருப்புமினை ஆயிற்று. அதன்பின், சோனியத் ராணுவம் ஜெர்மானியர்களை கிழக்கு ஐரோப்ப வழியாக துரத்தி அனுப்பி, பெர்னிலை அடைந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. போரினால் சீர்ழிவு ஏற்பட்டாலும், சோவியத் யூனியன் அதிப்பேரரசு ஆக வெளிவந்தது.

போரின் முடிவுக்குள் சில வருடங்களில், சோவியத் யூனியன் முதலில் தன் பொருளாதரத்தை நடுவண் கட்டுப்பாடு மூலமாக மறு ஆக்கம் செய்தது. சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பா நாடுகளின் உதவிக்கு சென்று பொருளாதார மறு ஆக்கத்தை ஊக்குவித்தாலும், அங்கு அடியாள் அரசாங்கங்களை நிறுவியது. முதலில் வார்சா உடன்பாடு ஏற்பட்டது, பின்பு கம்யூனிஸ்டு சீனத்தை உதவுவதற்கு கோம்கான் (COMCON) `பரஸ்பர பொருளாதார உதவி சங்கம் ` என்பதையும் அமைத்தது.

ஸ்டாலினுக்குப் பின்பு

[தொகு]

ஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லோராலும் ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிப் பூசல்கள் நடந்தது. நிக்கிட்டா குருசேவ் , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், அங்கேரியிலும், போலந்திலும் தேசிய எழுச்சிகளை அடக்க பயன்படுத்தப்பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; ஸ்புட்னிக் என்ற முதல் செயற்கை கோள் விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் லைக்கா என்ற நாயும், பின்பு யூரி ககாரின் என்ற மனிதனும் முதல் தடவை விண்ணுக்கு அனுப்பப்பட்டார்கள். வலெண்டீனா டெரெஷ்கோவ் விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், அலெக்சி லியனாவ் விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருசேவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் சீன-சோவியத் பிளவு ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.

அதன் பிறகு கூட்டுத் தலைமை நடந்தது, லியோனிட் பிரெஷ்னேவ் 1970 முதலில் தன் அதிகாரத்தை நிறு‍வினார். பிரெஷ்னேவ் மேற்கு நாடுகளுடன் டிடாண்ட் அல்லது தளர்வு என்னும் கொள்கையை கடைப் பிடித்தாலும், ராணுவப் பலத்தை அதிகரித்தார். ஆனால் `டிடாண்ட் கொள்கை தோல்வியுற்றது. மேலும், டிசம்பர் 1979ல், ஆப்கானிஸ்தான் மேல் சோவியத் படையெடுப்பு டிடாண்ட் கொள்கைக்கு சாவு முடிவு கட்டியது. அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகனின் முதல் பதவி காலத்தில், அமெரிக்கவுடன் நெருக்கடி அதிகமாயிற்று.. செப்டம்பர் 1, 1983ல் கொரியா ஏர்லைன்ஸின் 269 பயணிகள் கொண்ட விமானம் சோவியத்துகளால் சுட்டு கீழே தள்ளப்பட்டது நெருக்கடியை அதிகரித்தது.

இக்கால கட்டத்தில், சோவியத் யூனியன் அமெரிக்காவுடன் ராணுவ சம பலம் அல்லது ஒரு படி அதிக பலம் வைத்திருந்தது; அன்னல் இது பொருளாதாரம் மேல் பெரும் பாரத்தை போட்டது. சோவியத் யூனியன் உதித்த போது இருந்த புரட்சி மனப்பான்மைக் கெதிராக இருந்தது பிரெஷ்னேவ் காலத்தில் சோவியத் தலைமையின் மாற்றங்களுக்கு சுளுக்கம் தெரிவிக்கும் மனப்பான்மை. பிரெஷ்னேவின் தலைமைக் காலம் 'அசைவற்றது (застой), என வயதான ,மாறுதல் இல்லாத தலைவர்களால் ஏற்பட்டதாக பரவலாக கருதப்பட்டது.

நாடு 1960 இல் சிறிது பொருளாதார நிர்வாக பரிசோதனைகளுக்குப் பின், சோவியத் யூனியன் பழைய நிர்வாக முறைகளுக்குச் சென்றது. விவசாய உற்பத்தி பெருகினாலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடாகவில்லை. அதனால் சோவியத் யூனினன் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. நுகர் பொருள் உற்பத்தியில், சிறிய அளவே முதல் ஈடு செய்யப்பட்டிருந்ததால், சோவியத் யூனியன் கச்சா பொருள்களை ஏற்றுமதிதான் செய்ய முடிந்தது. சோவியத் குடிமகன்கள் மேற்கு அல்லது மத்திய ஐரோப்பிய மக்களை விட ஆரோக்கியத்தில் குறைந்தார்கள் . இறவு வீதம் 1964ல் 1000ல் 6.9 ஆக இருந்தது; 1980ல் 1000 ற்கு 10.3 ஆக ஏறிற்று..[10]

கோர்பச்சேவ்வின் சீர்திருத்தங்களும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும்

[தொகு]

பிரெஷ்னேவ் மரணத்தை அடுத்து, இரு தலைவர்கள் துரிதமாக வந்து போனார்; அவர்கள் யூரி அண்ட்ரோபாவ், கான்ஸ்டாண்டின் செர்நென்கோ, அவர்கள் இருவரும் பிரெஷ்னேவ் கருத்தாக்கத்தில் செயல்பட்டவர்கள். 1985 இல், பதவிக்கு வந்த மிகயில் கொர்பச்சாவ் பொருளாதாரத்திற்கும், கட்சி தலைமைக்கும் கணிசமான மாறுதல்கள் செய்தார். அவருடைய கிளாஸ்நோஸ்ட் கொள்கை பொது ஜனத்திற்கு தகவல் கிடைப்பதை 70 வருடங்களுக்கு பின் தளர்த்தியது. சோவியத் யூனியனும், அதன் அடியாள் அரசுகளும் பொருளாதார ரீதியில் மோசமடையும் நேரத்தில், கொர்பச்சாவ் மேற்குடன் பனிப்போரை முடிக்க தீர்மானித்தார்1988ல், சோவியத் யூனியன் 9 வருட அஃப்கானிஸ்தான் யுத்தத்தை கைவிட்டு, தன் துருப்புகளை திருப்பி அழைத்தது. 1980 கடை வருடங்களில் கோர்பச்சாவ் தன் அடியாள் அரசுகளுக்கு ராணுவ ஆதரவை முடித்தார். அதனால் அந்த நாடுகளின் கம்யூனிஸ்டுகள் பதவியில் இருந்து தள்ளப் பட்டனர். பெர்லின் சுவர் உடைத்தெரிக்கப் பட்டு மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் ஐக்கியமானதில், இரும்புத் திரை வீழ்ந்தது.

மேலும் , அப்பொழுது, சோவியத் யூனியனின் அங்க குடியரசுகள் சுதந்திரத்தை நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. சோவியத் சட்டத்தின் 72 ஆவது சட்டப் பிரிவு எந்த குடியரசும் பிரிந்து போக உரிமை உண்டு என் சொல்லிற்று[11]. ஏப்ரல் 7., 1990 இல் ஏற்கப்பட்ட புது சட்டம் படி, எந்த குடியசும் மூன்றில் இரண்டு நபர்கள் சுதந்திரம் வேண்டும் என ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தால், அதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் [12].பல குடியரசுகள் முதல் தடவை தங்கள் மக்கள் அவைக்கு நேர்நடத்தையில் தேர்தல்கள் நடத்தின. 1989 இல், சோசோகுயு வில் மிகப் பெரிய அங்கத்தினரான ரஷ்ய சோசோகு போரிஸ் எல்ட்சின்னை தலைவராக தேர்ந்து எடுத்தது. ஜூன் 12, 1990 இல், ரஷ்ய அவை தன் நிலப் பரப்பின் மேல் தன் இறையாண்மையை அறிவித்தது. இப்படிப்பட்ட செயல்களினால் சோவியத் யூனியன் பலவீனம் அடைந்து குடியரசுகள் யதார்தத்தில் விடுதலை ஆயின.

சோவியத் யூனியனை உயிரோடு வைக்க ஒரு வாக்களிப்பு மார்ச் 17, 1991 இல் நடத்தப்பட்டது. 15 குடியரசுகளில் 9 குடியரசுகளில் பெரும்பான்மையோர், யூனியனை வைக்க சம்மதித்தனர். அதனால் புது யூனியன் உடன்பாடு செய்யப்பட்டு, குடியரசுகளுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஆகஸ்தில், ஒரு அரசு கவிழ்பு யத்தனிப்பு நடந்தது. அது தீவிர கம்யூனிஸ்டுகளாலும், உளவுத்துறை அமைப்பு கேஜிபியாலும் செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த குழப்பத்தில் எல்ட்சின் தலைவராக மிளிர்ந்தார்; கொர்பச்சேவின் அந்தஸ்து அஸ்தமனம் ஆகியது. 1991 இல், லாட்விய, லித்வேனியா, எஸ்டோனிய விடுதலை அறிக்கை செய்தன. டிசம்பர் 8, 1991 ஒப்பந்தம் படி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் ”சுதந்திர நாடுகள் காமென்வெல்த்~ என்ற அமைப்பு தொடங்கியது. டிசம்பர் 25, 1991 அன்று கொர்பச்சாவ் சோசோகுயூ என்பதின் ஜனாதிபதியாக ராஜினாமா செய்து, அப்பதவியை நிர்மூலம் செய்தார். தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினுக்கு கொடுத்தார். அடுத்த நாள் `சுப்ரீம் சோவியத்` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசுத் துறை, தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. இந்த சம்பவம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் முன் கடைசி நிகழ்ச்சி.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Richard Sakwa The Rise and Fall of the Soviet Union, 1917-1991: 1917-1991. Routledge, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-12290-2, 9780415122900. pp. 140-143.
 2. Julian Towster. Political Power in the U.S.S.R., 1917-1947: The Theory and Structure of Government in the Soviet State Oxford Univ. Press, 1948. p. 106.
 3. (உருசிய மொழியில்) Creation of the USSR பரணிடப்பட்டது 2007-05-29 at the வந்தவழி இயந்திரம் at Khronos.ru.
 4. "70 Years of Gidroproekt and Hydroelectric Power in Russia".[தொடர்பிழந்த இணைப்பு]
 5. (உருசிய மொழியில்) On GOELRO Plan — at Kuzbassenergo. பரணிடப்பட்டது 2008-12-26 at the வந்தவழி இயந்திரம்
 6. Latent, Dirichlet, Central Committee of the Communist Party of the Soviet Union, archived from the original on 2013-12-10, பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2013
 7. Robert, Beard, The Constitution of the Soviet Union, 1918, பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2013
 8. The consolidation into a single-party regime took place during the first three and a half years after the revolution, which included the period of War Communism and an election in which multiple parties competed. See Leonard Schapiro, The Origin of the Communist Autocracy: Political Opposition in the Soviet State, First Phase 1917–1922. Cambridge, MA: Harvard University Press, 1955, 1966.
 9. Matthew White according to Matthew White's research.
 10. W. Tompson, The Soviet Union under Brezhnev, (Edinburgh, 2003), p. 91.
 11. The red blues — Soviet politics by Brian Crozier, National Review, June 25, 1990.
 12. Origins of Moral-Ethical Crisis and Ways to Overcome it பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் by V.A.Drozhin Honoured Lawyer of Russia.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவியத்_ஒன்றியம்&oldid=3680921" இலிருந்து மீள்விக்கப்பட்டது