உள்ளடக்கத்துக்குச் செல்

சன்னா மரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்னா மரீன்
Marin lapsen oikeuksien juhla
2019ல் மரீன்
46வது பின்லாந்துப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 திசெம்பர் 2019
குடியரசுத் தலைவர்சௌலி நீனிசுட்டோ
Deputyகட்ரி குல்முனி
மத்தி வன்கானென்
அன்னிகா சாரிக்கோ
முன்னையவர்அன்ட்டி ரின்
சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 ஆகத்து 2020
முன்னையவர்அன்ட்டி ரின்
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் அமைச்சர்
பதவியில்
6 சூன் 2019 – 10 திசெம்பர் 2019
பிரதமர்அன்ட்டி ரின்
முன்னையவர்அனு வெகுவிலைனென்
பின்னவர்ரிமோ அரக்கா
பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 ஏப்ரல் 2015
தொகுதிபிர்க்கன்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சன்னா மிரெல்லா மரீன்

16 நவம்பர் 1985 (1985-11-16) (அகவை 38)[1]
எல்சிங்கி, ஊசிமா, பின்லாந்து
அரசியல் கட்சிசமூக மக்களாட்சிக் கட்சி
துணைவர்
மார்க்கசு ராய்கோனென் (தி. 2020)
பிள்ளைகள்1
கல்விடம்பரே பல்கலைக்கழகம்

சன்னா மிரெல்லா மரீன் (Finnish pronunciation: [ˈsɑnːɑ ˈmirelːɑ ˈmɑriːn];[2] பிறப்பு 16 நவம்பர் 1985) என்பவர் ஒரு பின்னிய அரசியல்வாதியும், பின்லாந்தின் 46வதும் தற்போதைய பிரதமரும் ஆவார். 10 திசெம்பர் 2019லிருந்து இவர் பதவியிலுள்ளார். சமூக மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2015இலிருந்து பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதோடு, 6 சூன் 2019இலிருந்து 10 திசெம்பர் 2019 வரையான குறுகிய காலப்பகுதியில் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2019 அஞ்சல்துறை வேலைநிறுத்தச் சிக்கலுக்குப் பின் அன்டி ரின் பதவி விலகியதையடுத்து, 8 டிசெம்பர் 2019இல் மரீன் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

தனது 34வது வயதில் பதவியேற்றதைத் தொடர்ந்து, பின்லாந்து வரலாற்றில் மிக இளவயதுப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றதோடு,[3][4] சிலியின் கபிரியேல் போரிக்குக்கு அடுத்து உலகின் இரண்டாவது இளவயது அரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.

இளமைக்காலமும் கல்வியும்[தொகு]

சன்னா மிரெல்லா மரீன் நவம்பர் 16, 1985ல் எல்சிங்கியில் பிறந்தார்.[5][6] இவர் எசுப்பூ மற்றும் பிர்க்கலா ஆகிய நகரங்களிலும் வசித்துள்ளதோடு, பின்னர் டம்பரே நகரில் குடியேறினார்.[5]வார்ப்புரு:Better source needed இவரது இளவயதிலேயே இவரது பெற்றோர் பிரிந்து விட்டனர். மரீனின் குடும்பம் வறுமையில் வாடியதோடு, அவரது தந்தையான லோரி மரீன்,[7] குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். பெற்றோரின் பிரிவுக்குப் பின், மரீன் தனது தாய் மற்றும் தாயின் பெண் துணைவரின் பராமரிப்பில் வளர்ந்தார்.[8][9][10]

2004ம் ஆண்டில் தமது 19ம் வயதில் மரீன் பிர்க்கலா உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்பை நிறைவுசெய்தார்.[11] மரீன் 2006ம் ஆண்டில் சமூக மக்களாட்சி இளையோர் அணியில் இணைந்ததோடு 2010இலிருந்து 2012 வரை அவ்வமைப்பின் முதலாவது துணைத்தலைவராகவும் பதவி வகித்தார்.[12][5] படிக்கும் காலத்தில் ஒரு வெதுப்பகத்தில் பணியாற்றியதோடு, காசாளராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.[13] மரீன், டம்பரே பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[9][13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sanna Marin". Britannica. பார்க்கப்பட்ட நாள் November 16, 2021.
 2. Miten pääministerin sukunimi ääntyy? (in Finnish; "How is the prime minister's family name pronounced?") - Institute for the Languages of Finland
 3. "Pääministerien ikä nimitettäessä". Valtioneuvosto (in ஃபின்னிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
 4. "Prime Minister's age on the date of appointment". Valtioneuvosto (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
 5. 5.0 5.1 5.2 Marin, Sanna (19 December 2019). "Kuka Sanna? ja Ansioluettelo" ["Sanna who?" and "Resume"]. SannaMarin.net (self-published autobiography). Archived from the original on 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020. Koulutukseltani olen hallintotieteiden maisteri Tampereen yliopistosta. Ylioppilaaksi kirjoitin Pirkkalan yhteislukiosta vuonna 2004. / Asumme mieheni Markuksen ja kaksivuotiaan tyttäremme Emman kanssa Tampereella Kalevan kaupunginosassa. ... / Juureni löytyvät neljän kunnan alueelta. Olen syntynyt Helsingissä, asunut Espoossa, veittänyt kasvu- ja kouluvuoteni Pirkkalassa ja vihdoin kotiutunut Tampereelle. [I hold a Master of Administrative Sciences from the University of Tampere. I was a student and graduated from Pirkkala High School in 2004. / I live with my husband, Markus, and our two year old daughter, Emma, in the Kaleva district of Tampere. ... / My roots are in four municipalities. I was born in Helsinki, lived in Espoo, spent my years growing up and in school in Pirkkala, and finally settled in Tampere.] {{cite web}}: External link in |trans-title= (help)
 6. Specia, Megan (10 December 2019). "Who is Sanna Marin, Finland's 34-Year-Old Prime Minister?". The New York Times. https://www.nytimes.com/2019/12/10/world/europe/finland-sanna-marin.html. 
 7. "The father of Prime Minister Sanna Marini is dead". Teller Report. 2 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
 8. Greenall, Robert (9 December 2019). "Sanna Marin: The rising star set to lead Finland's 5.5 million". https://www.bbc.com/news/world-europe-50712230. 
 9. 9.0 9.1 Burtsov, Petri; Heikkilä, Melissa (12 December 2019). "Comrades, meet Finland's new PM". Politico. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
 10. Sandelius, Ninni (January 2018). "Sanna Marin: "Juurettomuus pakottaa minut katsomaan tulevaan"". Eeva. பார்க்கப்பட்ட நாள் 17 October 2020.
 11. Esfandiari, Sahar. "The rapid rise of Sanna Marin, the 34-year-old Finnish woman set to become the youngest serving world leader". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
 12. Hemmilä, Ilkka (18 May 2018). "SDP:n uraohjus nousi 10 vuodessa Pirkanmaan ääniharavaksi – Sanna Marin haluaa ravistella puolueita". Maaseudun Tulevaisuus (in ஃபின்னிஷ்). பார்க்கப்பட்ட நாள் 10 December 2019.
 13. 13.0 13.1 O'Connor, Philip (14 December 2019). "How did Finland's Sanna Marin become the world's youngest prime minister?". The Irish Times. https://www.irishtimes.com/news/world/europe/how-did-finland-s-sanna-marin-become-the-world-s-youngest-prime-minister-1.4113352. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னா_மரீன்&oldid=3759335" இலிருந்து மீள்விக்கப்பட்டது