பின்லாந்து தமிழர்
Appearance
பின்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் பின்லாந்து நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். பின்லாந்து நாட்டில் சில நூறு தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர்.
தமிழில் கவேவலா
[தொகு]முதன்மைக் கட்டுரை: கலேவலா
கலேவலா (Kalevala) உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். கலேவலா தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது.