தைகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைகா என்பது ஊசியிலைக் காடுகள் காணப்படும் ஒரு சூழியல் மண்டலத்தைக் குறிக்கும். இது உலகின் வடகோளத்தில் காணப்படுகிறது. அலாட்கா முதல் ரசியா, சப்பானின் வடபகுதி வரை இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. தைகா காடுகளே உலகின் மிகப்பெரிய சூழியல் மண்டலம். இப்பகுதிகளில் தட்பவெப்பநிலை கோடையிலும் வாடையிலும் மிகவும் உயர்ந்தும் மிகத்தாழ்ந்தும் இருக்கும்.

உயிரினங்கள்[தொகு]

தைகா காடுகளில் ஊசியிலை மரங்கள் மட்டுமன்றி அகன்ற இலை மரங்களும் காணப்படுகின்றன. இக்காடுகளில் பல்வேறு வகையான பெரிய தாவரஉண்ணி விலங்குகளும் கொறிணிகளும் வாழ்கின்றன. கரடி போன்ற சில பெரிய பாலாட்டிகளில் கோடையில் உண்டு உடலில் சக்தியைச் சேர்த்து வைத்துக் கொண்டு குளிர்காலத்தில் நீண்ட உறக்கத்திற்குச் சென்று விடுகின்றன.

அச்சுறுத்தல்கள்[தொகு]

காடழிப்பு - சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பிறகு சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சில வகைப் பூச்சியினங்களும் பெருகி மரங்களுக்கு அழிவினை ஏற்படுத்துகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைகா&oldid=2135554" இலிருந்து மீள்விக்கப்பட்டது