கொறிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Rodents
புதைப்படிவ காலம்:Early Paleocene–Recent
White Tailed Squirrel.jpg
White-tailed Antelope Squirrel (Ammospermophilus leucurus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
உள்வகுப்பு: Eutheria
பெருவரிசை: Euarchontoglires
வரிசை: கொறியுயிர்
பவுட்விச், 1821
Suborders

Sciuromorpha
Castorimorpha
Myomorpha
Anomaluromorpha
Hystricomorpha

கொறிணி (Rodent)[1] என்பது உணவைக் கொறித்து தின்னும் விலங்குகளைக் குறிக்கும். கொறிணிகளுக்கு முன்னம் பற்கள் கெட்டியான கொட்டை போன்ற பொருள்களைக் கொறிக்க வகையாய் அமைந்துள்ளன. அணில், நீரெலி அல்லது நீரெலி, எலி, அணத்தான் போன்ற விலங்குகளைக் கொறிணி என்று அழைக்கிறார்கள். நீரெலி என்னும் பீவர் பெரிய மரத்தையும் முன்னம்பற்களால் கொறித்தே கீழே விழச்செய்து நீரில் பாலம் அமைக்கும் திறம் படைத்தது. உலகில் சுமார் 2000 வகை கொறிணிகள் இருப்பதாகக் கூறுவர். கொறிணிகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகள். மற்ற எல்லா பாலூட்டிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொறிணிகள் உள்ளன. உலகில் எல்லாக் கண்டங்களிலும் உள்ளன. தென் அமெரிக்காவில் உள்ள காப்பிபரா என்னும் பேரெலி வகை சுமார் 1.2 மீ (4 அடி) நீளம் இருக்கும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Search Results for rodent" (TAB encoding). தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 2007-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொறிணி&oldid=2047751" இருந்து மீள்விக்கப்பட்டது