அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அணில்
Eastern Gray Squirrel, Sciurus carolinensis
Eastern Gray Squirrel, Sciurus carolinensis
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: கொறியுயிர்
குடும்பம்: Sciuridae
Genera

-

அணில் (Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி ஆகும்.

உடல் அமைப்பு[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் காட்டு அணில்.

இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும். தாவும்போது வால் இதற்குப் பாராசூட்டைப் போல் பேலன்ஸ் செய்து கொள்ள உதவுகிறது. கைகளில் உள்ள வளைந்த நகங்கள் விழாமல் இருக்க உதவுகின்றன. பறக்கும் அணில்களும் உண்டு.

வசிப்பிடம்[தொகு]

அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும்.

உணவுப்பழக்கம்[தொகு]

அணிலின் பழக்கவழக்கங்கள்

அணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும்.

உணவை உட்கொள்ளும் அணில்

வாழ்க்கைமுறை[தொகு]

அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அணில்&oldid=1790773" இருந்து மீள்விக்கப்பட்டது