வரிசை (உயிரியல்)
தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறை, ஏழு படிநிலை அலகுகளைக் (taxon) கொண்டுள்ளது. அவற்றுள் வரிசை (ஆங்கிலம்:order, இலத்தீன்: ordo) என்பதும், ஓர் அலகாகும். இதற்கு முன்னால் வகுப்பு என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும், பின்னால் குடும்பம் என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளிலும் ஒன்றாகும்.
இலின்னேயசின் 5 அலகுகள். | தற்போதுள்ள 7 அலகுகள். |
---|---|
உயிரித்திணை | உயிரித்திணை |
****** | தொகுதி-பிரிவு |
வகுப்பு | வகுப்பு |
வரிசை | வரிசை |
****** | குடும்பம் |
பேரினம் | பேரினம் |
இனம் | இனம் |
இதற்குரிய பின்னொட்டுகளைத்
தாவரவியலிலும்,விலங்கியலிலும் கீழ்கண்டவாறு பயனாகிறது.
தாவரங்களுக்குப் பயன்படுத்தப்படும், வரிசைக்குரியப் பின்னொட்டுகள் வருமாறு;-[1][2][3]
பெருவரிசைக்கு, (-anae) என்பதனைச் சொல்லிறுதியாகவும்,
வரிசைக்கு, (-ales) என்பதனைச் சொல்லிறுதியாகவும், (எ.கா) Sapind ales = வேப்ப மரத்தின் வரிசை
துணைவரிசைக்கு, (-ineae) என்பதனைச் சொல்லிறுதியாகவும்,
உள்வரிசைக்கு, (-aria) என்பதனைச் சொல்லிறுதியாகவும் கொண்டு சொற்கள் உருவாக்கப்படுகின்றன.
உயிரியல் வகைப்பாட்டு படிநிலைகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Magnorder | ||||||||
ஆட்களம் பெரும்இராச்சியம் |
பெருந்தொகுதி | பெருவகுப்பு | பெருவரிசை | பெருங்குடும்பம் | Supertribe | மீத்திறச் சிற்றினம் | ||
இராச்சியம் | தொகுதி | வகுப்பு | படையணி | வரிசை | குடும்பம் | இனக்குழு | பேரினம் | இனம் |
துணை இராச்சியம் | துணைத்தொகுதி | துணைவகுப்பு | Cohort (biology) | துணைவரிசை | துணைக்குடும்பம் | துணையினக்குழு | துணைப்பேரினம் | துணையினம் |
Infrakingdom/Branch | தொகுதி கீழ்நிலை | Infraclass | Infraorder | பிரிவு | Infraspecific name (botany) | |||
Microphylum | Parvclass | Parvorder | தொடர் | பல்வகைமை | ||||
வடிவம் (தாவரவியல்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tobin, Allan J.; Dusheck, Jennie (2005). Asking About Life. Boston: Cengage Learning. pp. 403–408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-030-27044-4.
- ↑ Translation Bureau (2015-10-15). "Capitalization: Biological Terms". Writing Tips, TERMIUM Plus®. Public Services & Procurement Canada. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
- ↑ McNeill et al. 2012 Article 17.1