உள்ளடக்கத்துக்குச் செல்

போட்சுவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்ஸ்வானா குடியரசு
Lefatshe la Botswana
கொடி of போட்ஸ்வானா
கொடி
சின்னம் of போட்ஸ்வானா
சின்னம்
குறிக்கோள்: "Pula"
"Rain"
நாட்டுப்பண்: Fatshe leno la rona
அருள்பெறட்டும் இந்நன்னிலம்
போட்ஸ்வானாஅமைவிடம்
தலைநகரம்காபரோனி
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், இட்ஸ்வானா மொழி (தேசிய)
மக்கள்போட்ஸ்வானர், போட்ஸ்வான
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
இயன் காமா
விடுதலை 
• நாள்
செப்டம்பர் 30 1966
பரப்பு
• மொத்தம்
581,726 km2 (224,606 sq mi) (41 ஆவது)
• நீர் (%)
2.5
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
1,639,833 (147 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$18.72 பில்லியன் (114 ஆவது)
• தலைவிகிதம்
$11,400 (60 ஆவது)
ஜினி (1993)63
அதியுயர்
மமேசு (2004)Increase 0.570
Error: Invalid HDI value · 131 ஆவது
நாணயம்புலா (BWP)
நேர வலயம்ஒ.அ.நே+2 (நடு அப்பிரிக்கா நேரம் (CAT))
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ஏதும் கடைபிடிப்பதில்லை)
அழைப்புக்குறி267
இணையக் குறி.bw

போட்ஸ்வானாக் குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு (வார்ப்புரு:Lang-tn), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை பாட்ஸ்வானர் என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ல் விடுதலை பெற்றபின் போட்ஸ்வானா என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன.

போட்ஸ்வானாவில் செரோவெ என்னும் இடத்தில் கால்நடை விலங்குகள் சிறு நீர்நிலை அருகில் நீர் அருந்த நிற்கும் காட்சி

[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Our Country". Gov.bw. Archived from the original on 22 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17. Botswana has a number of tribes across the country, collectively known as Batswana. The official language is English and Setswana is the national language, although there are other spoken languages.
  2. "Botswana". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. 14 September 2022. (Archived 2022 edition)
  3. "Botswana". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019. (Archived 2019 edition)


"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்சுவானா&oldid=4101597" இலிருந்து மீள்விக்கப்பட்டது