உள்ளடக்கத்துக்குச் செல்

கானா

ஆள்கூறுகள்: 8°02′N 1°05′W / 8.03°N 1.08°W / 8.03; -1.08
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானா குடியரசு
Republic of Ghana
கொடி of கானா
கொடி
சின்னம் of கானா
சின்னம்
குறிக்கோள்: "விடுதலையும் நீதியும்"
நாட்டுப்பண்: "கடவுள் நம் தாய்நாடான கானாவை ஆசீர்வதிப்பாராக."
தலைநகரம்அக்ரா
05°33′18″N 00°11′33″W / 5.55500°N 0.19250°W / 5.55500; -0.19250
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்[1][2]
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
பணி மொழிகள்
இனக் குழுகள்
(2021)[4]
  • 45.7% அக்கான்
  • 18.5% மோலே-தாக்போன்
  • 12.8% எவு
  • 7.1% கா-அதாங்பே
  • 6.4% குர்மா
  • 3.2% குவான்
  • 2.7% குருன்சி
  • 2.0% மாண்டே
  • 1.6% ஏனையோர்
சமயம்
(2021)[4]
  • 71.3% கிறித்துவம்
  • 19.9% இசுலாம்
  • 3.2% மரபு நம்பிக்கைகள்
  • 1.1% மதமற்றோர்
  • 4.5% ஏனையவை
மக்கள்கானியன்
அரசாங்கம்ஒற்றையாட்சி தலைவர் ஆளும் குடியரசு
• அரசுத்தலைவர்
யோன் மகாமா
சட்டமன்றம்நாடாளுமன்றம்
விடுதலை 
6 மார்ச் 1957
• குடியரசு
1 சூலை 1960
பரப்பு
• மொத்தம்
240,000[5] km2 (93,000 sq mi) (80-ஆவது)
• நீர் (%)
4.61 (11,000 கிமீ2; 4,247 மைல்2)
மக்கள் தொகை
• 2025 மதிப்பீடு
Neutral increase 35,039,451[6] (46-ஆவது)
• அடர்த்தி
151/km2 (391.1/sq mi) (90-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $295.12 பில்.[7] (68-ஆவது)
• தலைவிகிதம்
Increase $8,042[7] (132-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $88.033 பில்.[7] (79-ஆவது)
• தலைவிகிதம்
Increase $2,520[7] (143-ஆவது)
ஜினி (2024) 44[8]
மத்திமம்
மமேசு (2023)Increase 0.628[9]
மத்திமம் · 143-ஆவது
நாணயம்செடி (GHS)
நேர வலயம்ஒ.அ.நே±00:00 (கி.இ.நே)
அழைப்புக்குறி+233
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGH
இணையக் குறி.gh

கானா (Ghana, /ˈɡɑːnə/ (கேட்க), அதிகாரபூர்வமாக கானா குடியரசு (Republic of Ghana) மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கே கினி வளைகுடாவும், அத்திலாந்திக்குப் பெருங்கடலும் உள்ளன. கானாவின் எல்லைகளாக மேற்கே கோட் டிவார், வடக்கே புர்க்கினா பாசோ, கிழக்கே டோகோ ஆகிய நாடுகள் உள்ளன. கானா 239,567 சதுரகிமீ (92,497 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது, இது கடலோர புன்னிலங்கள் முதல் வெப்பமண்டல மழைக்காடுகள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. 35 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட கானா, ஆப்பிரிக்காவின் பதின்மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும், குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் அக்ரா ஆகும்.

கானாவில் தோன்றிய தொடக்ககால இராச்சியங்கள் தெற்கில் போனோமன், வடக்கில் டாக்பன் இராச்சியம் ஆகும், 11-ஆம் நூற்றாண்டில் அந்தப் பகுதியில் போனோமன் இராச்சியம் இருந்தது.[10] பல நூற்றாண்டுகளாக அசாந்தே பேரரசு, தெற்கில் உள்ள பிற அகன் இராச்சியங்கள் தோன்றின.[11] 15-ஆம் நூற்றாண்டில் தொடங்கி, போர்த்துகீசியப் பேரரசு, அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய சக்திகள், 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடலோரப் பகுதிகளின் கட்டுப்பாட்டை இறுதியில் நிறுவும் வரை, வணிக உரிமைகளுக்காக இந்தப் பகுதியில் போட்டியிட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான குடியேற்ற சக்திகளுக்கான எதிர்ப்பைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய எல்லைகள் வடிவம் பெற்றன, பின்வரும் நான்கு தனித்தனி பிரித்தானியக் குடியேற்ற ஆள்புலங்களை உள்ளடக்கியது: கோல்ட் கோஸ்ட், அசாந்தி, வடக்கு ஆள்புலங்கள், பிரித்தானியத் தோகோலாந்து ஆகியவை. இவை பொதுநலவாய நாடுகளுக்குள் ஒரு இறையாண்மை கொண்ட ஆதிக்கமாக ஒன்றிணைக்கப்பட்டன. 1957 மார்ச் 6 அன்று கானா கீழ்-சகாரா ஆப்பிரிக்காவில் இறையாண்மையை அடைந்த முதல் குடியேற்ற நாடாக மாறியது.[12][13][14] அரசுத்தலைவர் குவாமே நிக்ரூமாவின் கீழ், கானா குடியேற்ற நீக்க முயற்சிகள், பான்-ஆப்பிரிக்க இயக்கம் போன்றவற்றில் செல்வாக்கு மிக்கதாக மாறியது.[15][16]

கானா என்பது பல்வேறு மொழி, சமயக் குழுக்களைக் கொண்ட ஒரு பல்லின நாடு;[17] ஆகான் மக்கள் மிகப்பெரிய இனக்குழுவாக இருந்தாலும், அவர்கள் ஒரு பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளனர். பெரும்பாலான கானாவாசிகள் கிறித்தவர்கள் (71.3%); கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு முசுலிம்கள்; பத்தில் ஒரு பங்கு மரபு-வழி நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.[4] கானா ஒரு குடியரசுத்தலைவர் தலைமையிலான ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பு மக்களாட்சி ஆகும், குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், அரசுத்தலைவராகவும் இருக்கிறார்.[18] ஆப்பிரிக்காவில் அரசியல் நிலைத்தன்மைக்காக, கானா 2022 இப்ராகிம் ஆப்பிரிக்க ஆட்சிக் குறியீட்டில் ஏழாவது இடத்தையும், 2024 நாட்டின் தோல்வி சுட்டெண்ணில் ஐந்தாவது இடத்தையும் பிடித்தது. 1993 முதல், இது கண்டத்தில் மிகவும் சுதந்திரமானதும், நிலையானதுமான அரசாங்கங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. மேலும் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படுகிறது.[15][19] இது மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா முழுவதும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது.[20] கானா பன்னாட்டு விவகாரங்களில் மிகவும் ஒருங்கிணைந்த நாடாகும், கூட்டுசேரா இயக்கம், ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை, தெற்கு அத்திலாந்திக்கு அமைதி, ஒத்துழைப்பு மண்டலம், மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், 24களின் குழுமம், நாடுகளின் பொதுநலவாயம் ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Language and Religion". Ghana Embassy. Archived from the original on 1 March 2017. Retrieved 8 January 2017. கானாவின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம், மேலும் ஒன்பது உள்ளூர் மொழிகள் கூடுதலாக பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் பரவலாகப் பேசப்படும் உள்ளூர் மொழிகள் அகன மொழி, தக்பானி, கா, எவு முதலானவை.
  2. "Ghana – 2010 Population and Housing Census | Summary Report of Final Results" (PDF). Government of Ghana. May 2012. Archived from the original (PDF) on 25 September 2013. Retrieved 1 June 2013.
  3. 3.0 3.1 "Immigration into Ghana Since 1990" (PDF). Regional Institute for Population Studies (RIPS), University of Ghana, Legon. 2012. Retrieved 11 November 2013.
  4. 4.0 4.1 4.2 "2021 PHC General Report Vol 3C, Background Characteristics" (PDF). Ghana Statistical Service. November 2021. Archived (PDF) from the original on 2021-12-27.
  5. "World Economic Outlook Database, October 2023 Edition. (Ghana)". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 10 October 2023. Archived from the original on 21 October 2023. Retrieved 14 October 2023.
  6. "Ghana Population (2025)" (in ஆங்கிலம்).
  7. 7.0 7.1 7.2 7.3 "World Economic Outlook Database, April 2025" (in ஆங்கிலம்).
  8. "Ghana: gini index 2014–2029". statista.com. Statista. Retrieved 19 May 2024.
  9. "Human Development Report 2025" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 6 May 2025.
  10. Danver, Steven L (10 March 2015). Native Peoples of the World: An Encyclopedia of Groups, Cultures and Contemporary Issues. Routledge. p. 25. ISBN 978-1-317-46400-6. Archived from the original on 4 April 2023. Retrieved 19 March 2023.
  11. "Asante Kingdom". Afrika-Studiecentrum, Leiden. 15 June 2002. Archived from the original on 12 July 2014. Retrieved 8 June 2014.
  12. (1957).Video: A New Nation: Gold Coast becomes Ghana In Ceremony, 1957/03/07 (1957).Universal Newsreel.
  13. "First For Sub-Saharan Africa". BBC. Archived from the original on 1 November 2011. Retrieved 29 February 2012.
  14. "Exploring Africa – Decolonization". Exploring Africa – Michigan State University. Archived from the original on 2 June 2013. Retrieved 29 February 2012.
  15. 15.0 15.1 Ateku, Abdul-Jalilu (March 7, 2017). "Ghana is 60: An African success story with tough challenges ahead". The Conversation. Archived from the original on 29 June 2021. Retrieved 27 June 2021.
  16. Ghanaweb (2024-03-13). "Sankofa Series: A history of Ghana's 4 republics". GhanaWeb.
  17. "2020 Population Projection by Sex, 2010–2020". Ghana Statistical Service. Archived from the original on 24 April 2018. Retrieved 2 May 2018.
  18. "Ghana". CIA World FactBook. Archived from the original on 9 January 2021. Retrieved 20 May 2016.
  19. (19 July 2023). "Ghana's Economy Expected to Recover Its Potential By 2025, says World Bank Report"(in en). செய்திக் குறிப்பு.
  20. Kacowicz, Arie M. (1998). Zones of Peace in the Third World: South America and West Africa. SUNY Press. p. 144. ISBN 978-0-7914-3957-9. Archived from the original on 4 April 2023. Retrieved 19 March 2023.
  21. "Ghana-US relations". United States Department of State. 11 February 2013. Archived from the original on 5 April 2013. Retrieved 1 June 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]

8°02′N 1°05′W / 8.03°N 1.08°W / 8.03; -1.08

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா&oldid=4477259" இலிருந்து மீள்விக்கப்பட்டது