உள்ளடக்கத்துக்குச் செல்

யெமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெமென் குடியரசு
الجمهورية اليمنية
அல்-ஜும்ஹூரிய்யா அல்-யமனிய்யா
கொடி of யேமன்
கொடி
சின்னம் of யேமன்
சின்னம்
குறிக்கோள்: "Allah, al-Watan, at-Thawra, al-Wehda"
"கடவுள், நாடு, புரட்சி, ஒன்றியம்"
நாட்டுப்பண்: '
யேமன்அமைவிடம்
தலைநகரம்சனா
ஏடன்
பெரிய நகர்சனா
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்யெமெனி
அரசாங்கம்குடியரசு
அலி அப்துல்லா சாலெஹ்
அலி முகமது முஜூர்
தோற்றம்
• ஒன்றியம்
மே 22 1990
பரப்பு
• மொத்தம்
527,968 km2 (203,850 sq mi) (49வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
22,230,531 [1] (51வது)
• 2004 கணக்கெடுப்பு
19,685,161
• அடர்த்தி
42/km2 (108.8/sq mi) (160வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$52.61 பில்லியன் (88வது)
• தலைவிகிதம்
$2,400 (2007 est.) (175வது)
மமேசு (2007)Increase 0.508
தாழ் · 153வது
நாணயம்யெமெனி ரியால் $1 = 198.13 ரியால் (YER)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி967
ஐ.எசு.ஓ 3166 குறியீடுYE
இணையக் குறி.ye

யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகரம் சனா ஆகும்.

மக்கள் தொகையியல்

[தொகு]

5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 மக்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்.

பொருளாதாரம்

[தொகு]

நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமைமிக்க நாடாக உள்ளது.

உள்நாட்டுப் போர்

[தொகு]

ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. யேமன் -- ஐந்து முக்கிய தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெமன்&oldid=4131556" இலிருந்து மீள்விக்கப்பட்டது