நகோர்னோ கரபாக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நகோர்னோ-கரபாக் குடியரசு
Լեռնային Ղարաբաղի Հանրապետություն
Lernayin Gharabaghi Hanrapetut’yun
கொடி சின்னம்
நாட்டுப்பண்: "Azat u ankakh Artsakh"
"Free and Independent Artsakh"
தலைநகரம்Stepanakert
39°52′N 46°43′E / 39.867°N 46.717°E / 39.867; 46.717
ஆட்சி மொழி(கள்) ஆர்மேனியம்1
அரசாங்கம் ஏற்பில்லை
 •  அதிபர் பக்கோ சஹாக்யன்
 •  பிரதமர் அரயிக் ஹருட்யுன்யன்
விடுதலை அசர்பைஜானிடமிருந்து
 •  கருத்துக்கணிப்பு டிசம்பர் 10 1991 
 •  அறிவிப்பு ஜனவரி 6 1992 
 •  ஏற்பு இல்லை 
பரப்பு
 •  மொத்தம் 11,458.382 கிமீ2
4,424.102 சதுர மைல்
மக்கள் தொகை
 •  மார்ச் 2007 கணக்கெடுப்பு 138,000 (n/a)
நாணயம் ஆர்மேனிய டிராம் (AMD)
நேர வலயம் (ஒ.அ.நே+4)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+5)
அழைப்புக்குறி 374 47
1. The constitution guarantees "the free use of other languages spread among the population."
2. Virtual administrative territory of the NKR

நகோர்னோ கரபாக் குடியரசு[1] (Nagorno-Karabakh Republic) அல்லது ஆட்சாக் குடியரசு [1] (Artsakh Republic) நிகழ்நிலைப்படி விடுதலையான குடியரசாகும். இது தெற்கு கோகேசியாவில் உள்ள நகோர்னோ-கரபாக் பகுதியில் அசர்பைஜானின் தலைநகரமான பாகுவிலிருந்து 270 கிலோமீட்டர் (170 மைல்) மேற்கில் ஆர்மேனியாவில் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.

1918 ஆண்டு இராச்சியத்திடமிருந்து ஆர்மேனியாவும் அசர்பைஜானும் விடுதலை அடைந்தப் போது ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசுல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் போர் 1988 முதல் 1994 வரை நடைபெற்றது.

1991 டிசம்பர் 10 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை. 1994 ஆண்டு முதல் நகோர்னோ-கரபாக் உட்பட அண்மைய சில பகுதிகளும் நகோர்னோ-கரபாக் தற்காப்புப் படையினதும் ஆர்மேனிய படையினதும் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தவண்ணமுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Constitution of the Nagorno-Karabakh Republic. Chapter 1, article 1.2". 2007-12-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-04-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)