ஓமான்
ஓமான் சுல்தானகம் سلطنة عُمان Sultanate of Oman | |
|---|---|
| குறிக்கோள்: ٱللَّهُ، ٱلْوَطَنُ، ٱلسُّلْطَانُ "கடவுள், நாடு, சுல்தான்" | |
| நாட்டுப்பண்: تحية السلطان "சுல்தானுக்கு வணக்கம்." | |
ஓமானின் அமைவிடம் (கடும் பச்சை) | |
| தலைநகரம் | மஸ்கத் 23°35′20″N 58°24′30″E / 23.58889°N 58.40833°E |
| பெரிய நகர் | தலைநகர் |
| ஆட்சி மொழி(கள்) | அரபு[1] |
| சமயம் (2023)[2] |
|
| மக்கள் | ஓமானி |
| அரசாங்கம் | ஒற்றையாட்சி இசுலாமிய முடியாட்சி |
• சுல்தான் | ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது |
| சட்டமன்றம் | ஓமான் பேரவை |
• மேலவை | அரசுப்பேரவை |
• கீழவை | ஆலோசனைப் பேரவை |
| தோற்றம் | |
• ஆசுத் இனப் பரம்பல் | 130 |
• இமாமகம் தோற்றம்[3] | 751 |
• நபானி வம்சம் | 1154 |
• போர்த்துக்கீச ஆட்சி | 1507–1656 |
• யா'ரூபி வம்சம் | 1624 |
• ஒமானி இராச்சியம் | 1696 |
• அல் பு சயித் வம்சம் | 20 நவம்பர் 1744 |
• மசுக்கத், ஓமான் | 8 சனவரி 1856 |
• ஓமான் சுல்தானகம் | 9 ஆகத்து 1970 |
• அடிப்படைச் சட்டம் | 6 நவம்பர் 1996 |
| பரப்பு | |
• மொத்தம் | 315,331[a][4] km2 (121,750 sq mi) (69-ஆவது) |
• நீர் (%) | negligible |
| மக்கள் தொகை | |
• 2025 மதிப்பீடு | 5,494,691[5] (122-ஆவது) |
• 2010 கணக்கெடுப்பு | 2,773,479[6] |
• அடர்த்தி | 15/km2 (38.8/sq mi) (177-ஆவது) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| ஜினி (2018) | 30.75[8] மத்திமம் |
| மமேசு (2023) | அதியுயர் · 50-ஆவது |
| நாணயம் | ஓமானி ரியால் (OMR) |
| நேர வலயம் | ஒ.அ.நே+4 (விரிகுடா சீர் நேரம்) |
| திகதி அமைப்பு | நா.மா.ஆ |
| வாகனம் செலுத்தல் | வலம் |
| அழைப்புக்குறி | +968 |
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | OM |
| இணையக் குறி | .om, عمان. |
ஓமான் (Oman, /oʊˈmɑːn/ (ⓘ); அரபி: عُمَان) அதிகாரபூர்வமாக ஓமான் சுல்தானகம் (Sultanate of Oman) என்பது மேற்கு ஆசியாவின் தென்கிழக்கு அரபுத் தீபகற்பத்தில் உள்ள ஒரு நாடு. இது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் ஆகிய நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஓமானின் கரையோரப் பகுதி தென்கிழக்கில் அரபிக் கடலையும் வடகிழக்கில் ஓமான் குடாவையும் எதிர்கொள்கிறது. மாதா மாகாணம், முசந்தம் சுல்தானகம் ஆகியவற்றின் வெளிப்புற எல்லைகள் அவற்றின் நில எல்லைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தால் சூழப்பட்டுள்ளன, அதே வேளையில், முசந்தத்தின் கடலோர எல்லைகள் ஓர்முசு நீரிணை, ஓமன் குடா ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. ஓமான் தோராயமாக 5.46 மில்லியன் மக்கள்தொகையையும் 315,331 சதுரகிமீ (121,750 சதுர மைல்) பரப்பளவையும் கொண்டுள்ளது.[10] மஸ்கத் இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும்.
ஓமான் அரபு உலகின் பழமையான ஒரு சுதந்திர நாடாகும்,[11][12] 1744 முதல் அல் பு சயித் வம்சத்தால் தொடர்ந்து ஆளப்பட்டு வருகிறது.[13] 17-ஆம் நூற்றாண்டு தொடக்கம், இது பாரசீக வளைகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் செல்வாக்கிற்காக போர்த்துக்கல்ம் பிரித்தானியப் பேரரசுகளுடன் போட்டியிட்ட ஒரு பேரரசாக இருந்து, ஒரு பிராந்திய சக்தியாக மாறியது.[11] 19-ஆம் நூற்றாண்டில் அதன் உச்சக்கட்டமாக, ஓமானிய செல்வாக்கும் கட்டுப்பாடும் ஓர்முசு நீரிணை முழுவதும் இன்றைய ஈரான், பாக்கித்தான் வரையிலும், தெற்கே சான்சிபார் வரையிலும் பரவியது.[14] 20-ஆம் நூற்றாண்டில், ஓமான் பிரித்தானியப் பேரரசின் செல்வாக்கின் கீழ் வந்தது, அதே நேரத்தில் சட்டப்படி இறையாண்மையுள்ள நாடாக இருந்தது.[15]
ஓமானின் எண்ணெய் இருப்பு உலகளவில் 22-வது பெரியதாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[11][16] 2010-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் முந்தைய 40 ஆண்டுகளில் வளர்ச்சியின் அடிப்படையில் ஓமானை உலகின் மிகவும் மேம்பட்ட நாடாக அங்கீகரித்தது.[17] ஏனைய பாரசீக வளைகுடா நாடுகளை விட புதைபடிவ எரிபொருட்களைக் குறைவாக நம்பியிருக்கும் ஓமானின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பகுதி சுற்றுலா, அத்துடன் மீன், பேரீச்சை, பிற வேளாண்மைப் பொருட்களின் வணிகத்தையும் உள்ளடக்கியது. உலக வங்கி ஓமானை அதிக வருமானம் கொண்ட பொருளாதாரமாக வகைப்படுத்துகிறது. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அமைதிச் சுட்டெண்ணில் ஓமான் உலகின் 42-வது அமைதியான நாடாகவும்,[18] கத்தார், குவைத்திற்குப் பிறகு மிகவும் அமைதியான அரபு நாடாகவும் உள்ளது.
ஓமன் நாடு சுல்தானால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சி ஆகும், ஆண்-வழியாக அதிகாரம் கடத்தப்படுகிறது. காபூசு பின் சயீது அல் சயீது 1970 முதல் 2020 இல் இறக்கும் வரை சுல்தானாக பணியாற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் வாழ்க்கைத் தரத்தில் உயர்வு, அடிமைத்தனத்தை ஒழித்தல், தோஃபர் கிளர்ச்சியின் முடிவு, ஓமானின் அரசியலமைப்பு வெளியீடு ஆகியவை குறிப்பிடத்தக்கமையாகும்.[19] 2020-ஆம் ஆண்டில், ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது ஓமானின் சுல்தானாக பதவியேற்றார்.[20] ஓமான் ஐக்கிய நாடுகள் அவை, அரபு நாடுகள் கூட்டமைப்பு, வளைகுடா ஒத்துழைப்புப் பேரவை, கூட்டுசேரா இயக்கம், இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Al Wusta is approx. 82,471 which changed the amount to 315,331
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basic Statute of the State promulgated by Royal Decree 101/96". MINISTRY OF JUSTICE AND LEGAL AFFAIRS. Archived from the original on 7 July 2020. Retrieved 31 August 2020.
- ↑ "OMAN 2023 INTERNATIONAL RELIGIOUS FREEDOM REPORT" (PDF).
- ↑ "Oman".. MSN Encarta. “In 751 Ibadi Muslims, established an imamate in Oman. Despite interruptions, the Ibadi imamate survived until the mid-20th century.”
- ↑ "Oman: Administrative Division (Governorates and Districts) - Population Statistics, Charts and Map". www.citypopulation.de. Retrieved 2025-12-08.
- ↑ "Oman Population (2025) - Worldometer".
- ↑ "Final Results of Census 2010" (PDF). National Center for Statistics & Information. Archived from the original (PDF) on 18 May 2013. Retrieved 7 January 2012.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "World Economic Outlook Database, April 2025".
- ↑ "Urban – Gini index – Omani – Total". Knoema. The National Centre for Statistics and Information, Sultanate of Oman. Archived from the original on 21 May 2018. Retrieved 20 May 2018.
- ↑ "Human Development Report 2025" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 6 May 2025.
- ↑ "Oman: Administrative Division (Governorates and Districts) - Population Statistics, Charts and Map". www.citypopulation.de. Retrieved 2025-12-08.
- ↑ 11.0 11.1 11.2 "Oman profile – Overview". BBC News. 11 September 2012 இம் மூலத்தில் இருந்து 12 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200312141232/https://www.bbc.co.uk/news/world-middle-east-14654150.
- ↑ Royal Air Force Museum, A History of Oman. Retrieved 19 November 2020
- ↑ Barrington, Lisa; Barbuscia, Davide (2020-01-11). "Sultan Qaboos ushered in Oman renaissance, quiet diplomacy". Reuters. https://www.reuters.com/article/world/sultan-qaboos-ushered-in-oman-renaissance-quiet-diplomacy-idUSKCN1ZA0BM/.
- ↑ Kharusi, N. S. (2012). "The ethnic label Zinjibari: Politics and language choice implications among Swahili speakers in Oman". Ethnicities 12 (3): 335–353. doi:10.1177/1468796811432681. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-7968.
- ↑ Owtram, Francis (2014-12-11). "A Close Relationship: Britain and Oman since 1750". Qatar National Library. Retrieved 2025-08-20.
- ↑ "Private sector gets Omanisation targets". கல்ப் நியூஸ். 13 February 2011. Archived from the original on 9 October 2019. Retrieved 18 January 2013.
- ↑ "Five Arab states among top leaders in long-term development gains". Hdr.undp.org. 4 November 2010. Archived from the original on 9 November 2013. Retrieved 29 October 2011.
- ↑ "Global Peace Index: 2021" (PDF). visionofhumanity.org. உலக அமைதிச் சுட்டெண் and Institute for Economics and Peace. p. 9. Archived (PDF) from the original on 24 March 2022. Retrieved 6 April 2022.
- ↑ "Country Report: Oman". BTI Project. 2016. Archived from the original on 12 March 2020. Retrieved 19 August 2016.
- ↑ "Haitham bin Tariq sworn in as Oman's new sultan". Al Jazeera. 12 January 2020 இம் மூலத்தில் இருந்து 11 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200111074932/https://www.aljazeera.com/news/2020/01/haitham-bin-tariq-named-successor-oman-sultan-qaboos-200111060309444.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஒமான்
- Ministry of Tourism (official government website)
- Ministry of Information (official government website) (archived 10 October 2007)
- "Oman" – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- Oman. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
- Oman from the BBC News]
- The Sultanate of Oman at RAF Museum
- Wikimedia Atlas of Oman