பாக்கித்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு
اسلامی جمہوریۂ پاکستان
இஸ்லாமி ஜும்ஹூரியஹி பாகிஸ்தான்
கொடி of பாக்கித்தான்
கொடி
சின்னம் of பாக்கித்தான்
சின்னம்
குறிக்கோள்: இமான், இட்டெட், தசிம்
(நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம்)
நாட்டுப்பண்: குவாமி தரனா
(நாட்டு வணக்கம்)[1][2]
பாக்கித்தான்அமைவிடம்
தலைநகரம்இசுலாமாபாத்து
பெரிய நகர்கராச்சி
ஆட்சி மொழி(கள்)உருது, ஆங்கிலம்
அரசாங்கம்இசுலாமிய கூட்டாட்சி குடியரசு
மம்நூன் ஹுசைன்
செபாஷ் செரீப்
சுதந்திரம் 
• பிரகடணம்
ஆகஸ்டு 14, 1947
• குடியரசு
மார்ச்சு 23, 1956
பரப்பு
• மொத்தம்
880,254 km2 (339,868 sq mi) (34வது)
• நீர் (%)
3.1
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
163,985,373 [3] (6வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$404.6 பில்லியன் (26வது)
• தலைவிகிதம்
$2,628 (128வது)
மமேசு (2003)0.527
தாழ் · 135வது
நாணயம்பாக்கித்தான் உரூபாய் (Rs.) (PKR)
நேர வலயம்ஒ.அ.நே+5:00 (PST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6 (பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் [4])
அழைப்புக்குறி92
ஐ.எசு.ஓ 3166 குறியீடுPK
இணையக் குறி.pk
பாக்கித்தானின் தேசியச் சின்னங்கள் (அலுவல்முறையில்)[சான்று தேவை]
தேசிய விலங்கு Markhor.jpg
தேசியப் பறவை Keklik.jpg
தேசிய மரம் Pedrengo cedro nel parco Frizzoni.jpg
தேசிய மலர் Jasminum officinale.JPG
தேசிய பாரம்பரிய விலங்கு Snow Leopard 13.jpg
தேசியப் பாரம்பரிய பறவை Vándorsólyom.JPG
தேசிய நீர்நிலை பாலூட்டி Platanista gangetica.jpg
தேசிய ஊர்வன Persiancrocodile.jpg
தேசிய நீர்நில வாழ்வி Bufo stomaticus04.jpg
தேசியக் கனி Chaunsa.JPG
தேசியப் பள்ளிவாசல் Shah Faisal Mosque (Islamabad, Pakistan).jpg
தேசிய மோசலியம்
தேசிய ஆறு Indus river from karakouram highway.jpg
தேசிய மலை K2, Mount Godwin Austen, Chogori, Savage Mountain.jpg

பாகிஸ்தான் (Pakistan, பாகிஸ்தான் (About this soundpækɨstæn  அல்லது About this soundpɑːkiˈstɑːn ; உருது: پاکستان)), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (உருது: اسلامی جمہوریۂ پاکستان), ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து. கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள இலாகூர் மற்றொரு முக்கிய நகரம்.

180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095 கிமீ2 (307,374 ச மை) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் 1,046-கிலோமீட்டர் (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது.

நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[5][6] விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[8]

பெயர்க்காரணம்[தொகு]

  • முன்னோரு காலத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பழமை பெயராக பாலகிருஸ்தானம் என்ற பெயரில் அழைக்கபெற்ற இவ்விடம் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு இஸ்லாமியர் ஆதிக்கம் மிக்க தனிநாடு சுதந்திரம் பெற்ற பிறகு பாலகிருஸ்தானம் என்ற பெயர் பால்கிஸ்தானம் என்று மறுவி காலப்போக்கில் பாகிஸ்தானம் என்றும் சுருக்கமாக பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.
  • மேலும் இஸ்லாமிய முறைப்படி உருதுச் சொல்லுக்குப் பொருள் (பாக்+ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள் ஸ்தான் என்றால் இடம் என்று அர்த்தம் அதனால் பாகிஸ்தான் என்று தூய்மையான இடம் என்று பெயர் அர்த்தமாக உள்ளது[9].

வரலாறு[தொகு]

1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.

புவியியல்[தொகு]

பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மக்கள்[தொகு]

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

பாக்கித்தானின் மாகாணங்களும், பிரதேசங்களும்

பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

Disputed Region of Kashmir

மாகாணங்கள்:

  1. பலூச்சிஸ்தான்
  2. கைபர் பக்தூன்க்வா (NWFP)
  3. பஞ்சாப்
  4. சிந்து

பிரதேசங்கள்:

  1. இஸ்லாமாபாத் தலைநகரப்பகுதி
  2. நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:

  1. ஆசாத் காஷ்மீரம்
  2. கில்கித்பல்திஸ்தான்

அரசியல்[தொகு]

அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம்.[சான்று தேவை] பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் – பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.

பொருளாதாரம்[தொகு]

பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Official website, American Institute of Pakistan Studies. ""National Anthem of Pakistan"". 2006-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. Embassy of Pakistan, Washington D. C. ""Pakistani Flag"". 2006-04-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. "World Gazetteer population estimate for 2006". 2012-12-08 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-12-08 அன்று பார்க்கப்பட்டது.
  4. முழுமையான நேரவலய மேம்படுத்தல்கள் மைக்ரோசாப்ட்
  5. Barry Buzan (2004). The United States and the great powers: world politics in the twenty-first century. Polity. பக். 71, 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7456-3374-9. http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8. பார்த்த நாள்: 27 December 2011. 
  6. Hussein Solomon. "South African Foreign Policy and Middle Power Leadership". 24 June 2002 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. Pakistan among top 20 happiest countries, beating India, US: Report
  8. Thumbs up: Pakistan meets criteria for CERN
  9. Choudhary Rahmat Ali (28 சனவரி 1933). "Now or never: Are we to live or perish for ever?". Columbia University.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pakistan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்&oldid=3680608" இருந்து மீள்விக்கப்பட்டது