கியோட்டோ நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியோட்டோ நடபடியில் பங்களிப்பு
  கையெழுத்திட்டு ஏற்கப்பட்டது
  கையெழுத்திட்டது, இன்னும் ஏற்கவில்ல
  கையெழுத்திட்டது, ஏற்க மறுப்பு
  கையெழுத்து இடாதவை

கியோட்டோ சர்வதேச உடன்படிக்கை என்பது, பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பு நடைமுறைகள் (United Nations Framework Convention on Climate Change) என்பதற்கான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இப்பன்னாட்டு ஒப்பந்தம், "புவி உச்சிமாநாடு" என அறியப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சூழலும் வளர்ச்சியும் தொடர்பாக பிரேசிலில் உள்ள ரியோடிஜெனிரோவில் 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-14,தேதிகளில் 178 நாடுகளுடன் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தட்பவெப்ப நிலைகளில் ஆபத்தான மாற்றங்களை உண்டாக்காத அளவுக்கு, வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்களின் (பசுமைக்குடில் வாயுக்களின்) செறிவைச் சமநிலையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. கியோட்டோ ஒப்பந்தத்தின்படி, நான்கு பைங்குடில் வளிமங்களையும், தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு தொகுதி வளிமங்களையும் குறைப்பதற்கான சட்ட வலுக்கொண்ட பொறுப்புக்களை நிலைநாட்டுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பைங்குடில் வளிமங்கள், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, சல்பர் ஹெக்ஸா ஃபுளோரைடு என்பனவாகும். ஏனைய இரண்டு வளிமத் தொகுதிகளும் ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன்களும் (HFCs), பெர் ஃபுளோரோ கார்பன்களும் (PFCs) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோட்டோ_நெறிமுறை&oldid=3624709" இருந்து மீள்விக்கப்பட்டது