இந்தியத் துணைக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியத் துணைக்கண்டம்

இந்தியத் துணைக்கண்டம் என்பது, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் ஒரு புவியியல் பகுதியாகும்.[1] [2]

உப கண்டம் என்ற எண்ணக்கரு, மேற்படி பிரதேசம், ஒரு தனியான, ஆசியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறாக்கப்பட்ட கண்டத் திட்டு ஒன்றின் மேல் அமைந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த உபகண்டத்தின் தென் பகுதி, மிகப் பெரியதொரு தீபகற்பமாக (குடாநாடு) அமைந்துள்ள அதே வேளை, வடக்கிலே, இமயமலைத் தொடரினால், சீனாவினதும், மொங்கோலியாவினதும் குளிர்ப் பிரதேசங்களிலிருந்து தனிப்படுத்தப்பட்டுள்ளது. இம் மலைத் தொடர், இந்தப் பிரதேசத்துக்கும், ஆசியாவின் ஏனைய பகுதிகளுக்குமிடையே ஒரு கலாச்சார, புவியியற் தடுப்பாகவும், செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்திய துணைக்கண்டம்!
  2. துணைக்கண்டம்